Saturday 29 April 2023

மண்டோ திரைப்படம்

சாதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கையை நந்திதா தாஸ் படமாககியிருக்கிறார். Jio Cenima (https://voiceofworkers-ind.blogspot.com/2023/04/blog-post.html)வில் பார்க்க முடியும்.
 

மண்டோவின் எழுத்துக்களில் ஆண் பெண் பாலியல் சார்ந்த எழுத்துக்களால் விடயத்தைக் குறிப்பிட்டாலும் கடைசியில் ஈட்டி மாதிரி உண்மையை எமக்குள் குத்தி கிழித்துவிடுவார்.

மோசமான இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால், தான் வாழ்ந்த இந்தியாவிலிருந்து மிகுந்த துன்பத்திற்கு மத்தியில் லாகூருக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து நிர்பந்திக்கப்படுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் மதரீதியிலான பிரிவினை கோடிக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று, கற்பழித்து, தூக்கி எறிந்துவிட்டன.

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஒரு பத்திரிகைக்கு எழுதிக்கொண்டிருந்தார். ஒரு சமயம் தெருவில் நிற்கும்போது வண்டி ஒட்டுபவர்கள் உட்கார்ந்துகொண்டு மண்டோவின் எழுத்துக்களைச் சத்தமாகப் படித்துக்கொண்டார்கள். அதை ஒரமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பார். அதில் கீழ்கண்டவாறு இருக்கும்

“நான் இப்போது இந்தியாவில் இருக்கும் இடத்தில் பிறந்தேன்
என் அம்மா அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்
என் தந்தை அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எனது முதல் குழந்தையான ஆரிஃபும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்
ஆனால் அது இனி என் நாடு அல்ல. இப்போது என் நாடு பாகிஸ்தான்”

குறிப்பாக இந்த படத்தில் Cold Meat (தமிழில் சில்லிட்டுப்போன சதைப் பிண்டம்) கதையை பாகிஸ்தான் பாலியல் உணர்வை (obscenity) காட்டுவதாக பெண்களை கேவலமாக சித்திரிப்பதாக கூறி தடை செய்கிறது. அந்த நீதிமன்ற வழக்கை படத்தின் பாதி பகுதி எடுத்துவிடுகிறது.

அந்த கதையின் சுருக்கம்

தீவிரமாக உடலுறவு கொள்ளும் ஒரு கணவன் மனைவிக்கிடையில் மனைவி வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவன்மீது சந்தேகப்பட்டு உடலுறவு கொள்ளும் நேரத்தில் அவனைக் கத்தியால் கழுத்தில் குத்திக்கொண்டு கேட்பாள் யார் அந்தப் பெண் சொல் என்று. அவன் வலியால் துடித்துக்கொண்டு சொல்லுவான். “ஒரு வீட்டை திறந்தேன். அங்கே 7 பேர் இருந்தார்கள் 6 பேரை கொன்றுவிட்டேன் ஒரு பெண் மிக அழகாக இருந்தாள் அவளை அனுபவிக்க அவளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு நடந்தேன். ஒரு புல்வெளியில் அவளைக் கிடத்தினேன். அவளுடன் உறவு கொள்ள விரும்பி அவளை நெருங்கினேன்” அதற்கு அவன் மனைவி “பிறகு என்ன நடந்தது” என்று வேகமாக கேட்பாள். அதற்கு அவன் “அவள் இறந்துவிட்டிருந்தாள், பிணமாக கிடந்தாள்” என்று கூறுவான் இதுதான் அந்த Cold Meat கதையின் சுருக்கம்.

அந்த கதையின் நகலை எடுப்பதற்கு வீட்டிற்கு வரும் காவலர்கள் அது கிடைக்காமல் போக அது எங்கிருக்கிறது என்று கேட்கிறார்கள். உடனே அதற்கு ஒரு முகவரியை எழுதி காவலரிடம் கொடுப்பார். அது பம்பாய் என்று இருக்கும் அதைப் பார்த்து காவலர் கேட்பார் இது என்ன நகைச்சுவையா என்று.  அதற்கு அவர் அது அங்கேதான் இருக்கிறது பிரிந்து வரும்போது அது தவறவிட்டதாக கூறுவார்.

இந்துக்களைப் பார்த்து முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குவதும் முஸ்லிம் மக்கள்மீது இந்து தீவிரவாதிகள் தாக்குகின்ற நிலைமைகள் உழைக்கும் மக்கள் மத்தியில் சுதந்திரமாக  உயிரைக் காப்பாற்ற பயந்துகொண்டிருந்தார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற நிலைமைக்குப் பின்னால் உழைக்கும் அப்பாவி மக்கள் சுதந்திரத்தை, தாங்கள் நீண்டகாலம் வாழ்ந்த வாழ்க்கையை இழந்துவிட்டார்கள்.

அவருடைய நண்பன் ரயிலில் பயணிக்கும் போது “முஸ்லீம்கள் ரத்தவெறியர்கள்” என்று கூறுவான் அதை சற்றும் எதிர்பாராத மண்டோ “நானும் ஒரு முஸ்லிம்தானே இப்போது நடக்கும் கலவரத்தில் நீ என்னையும் கொல்லலாம்” என்று கூற அதற்கு “ஆமாம் நானும் உன்னைக் கொல்லலாம்” என்று நண்பன் கூறுவான்.

முஸ்லிம்கள் என்றால் அவர்களைத் எதிரிகளாக இந்திய முதலாளித்துவ அரசுகளும் அதே போன்று இந்தியர்களை எதிரிகளாக முஸ்லிம் மத முதலாளித்துவ அரசுகளும் மற்றும் உடகங்களும் பரப்புரைகள் செய்துகொண்டிருக்கின்றன. அதுவும் இந்தியாவில் தற்போது இந்துமதவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பசுவதை, குடியுரிமை என சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறையை தீவிரமாக நடத்துகிறது.

இந்தியா பாகிஸ்தான் என பிரித்த ஆளும் முதலாளித்துவ அரசுகள் மக்களுக்கான ஜனநாயக கடமைகளை ஆற்றவில்லை. மாறாக உழைக்கும் மக்களை பெரு முதலாளிகள் சுரண்டுவதற்கு பாதுகாப்பளித்து நாட்டின் செல்வத்தை குறிப்பிட்ட பெரும் கோடீஷ்வரர்களிடம் சேர்த்துவிட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஏழைகளாக வைத்திருக்கின்றன. அன்றாடம் வாழ்க்கையைத் துன்பத்தில் வைத்திருக்கின்றன

தற்போது பாகிஸ்தான் திவாலாகும் நெருக்கடியில் இருக்கின்றது. பெரும்பான்மை பாகிஸ்தான் உழைக்கும் மக்கள் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

நீதிமன்ற வழக்கும், பொருளாதார ரீதியாகவும், சமூக நெருக்கடியான நிலைமகளால் மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மண்டோ 42 வயதில் இறந்துவிடுகிறார்.

இந்த திரைப்படம் இசை மற்றும் சம்பவங்கள் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment