Saturday 15 April 2023

DMK FILES தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வேதணைகளை சுரண்டும் பாஜக

DMK FILES என்ற பெயரில் திமுக அரசியல்வாதிகளின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டிருக்கும் தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டு தொழிலாளர்கள் படும் வேதணைகளை படமாக்கி வெளியிட்டு அதற்குக் காரணம் திமுக அரசியல்வாதிகள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்களில் இருக்கின்ற தொழிலாளர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்களா? ஒட்டுமொத்த இந்தியத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஒரேவிதமான நெருக்கடிகளைத்தான் முகங்கொடுக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கின்ற முதலாளித்துவ அரசியல் அமைப்பைப் பாதுகாத்துக்கொண்டு அதன்மூலம் தொழிலாளர்களைச் சுரண்டி பெரு முதலாளிகளின் லாபத்தில் பங்கெடுத்துக்கொண்டு பெரும் கோடிஸ்வரர்களாக அனைத்து இந்திய அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல.

தொழிலாள வர்க்கத்திற்கு தலைமையேற்கும் தகுதியில்லை என்று தொழிலாள வர்க்கத்தை ஏழைகளாக வைத்து முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிபணிய வைத்திருக்கும் இந்திய கம்யூனிச கட்சிகள் சிபிஐ மற்றும் சிபிஎம் பிரதான பொறுப்பாளிகளாவர்.

தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் எல்லா மாநிலங்களிலும் (பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட) வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வாடகை உயர்வு எனப் பல்வேறு நெருக்கடிகளில் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள்.

ஏதோ தமிழ்நாட்டு தொழிலார்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தனது இருத்தலுக்கான அரசியலை பாஜக அண்ணமலை வெளியிட்டிருக்கிறார். கூடவே மறந்துபோய் தொழிலாளர்களைவிட தானும் மற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போல ஆடம்பரமாக வாழ்வதை வெளிக்காட்டும் விதமாக மிகவும் விலையுயர்ந்த ஒரு கடிகாரத்தினை வாங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு இடையிலான சன்டைகள். அவர்களுடைய அரசியலுக்கு தொழிலாளர்களை ஏழைகளாக வைத்திருக்கவேண்டிய தேவை இருக்கிறது. பாஜக பெரும் கார்பரேட் முதலாளிகளிடம் கட்சிக்கான பணம் என்று கோடிக்கணக்கில் வாங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் 2019-20 நிதியாண்டில், பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.4,847.78 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் தம்மை எதிர்த்து அல்லது விமர்சித்து வரும் நபர்களை, கட்சிகளைத் தனது அரசியல் பலத்தைக் கொண்டு பழிவாங்கிக்கொண்டிருக்கிறது.

இந்துமதவாத பாஜக தொழிலாள வர்க்கத்திற்காக எந்தவிதமான முற்போக்கான கொள்கைகளையும் கொண்டிருக்கவில்லை. ஏற்கனவே காங்கிரஸ், மற்றும் மாநில அரசியல் கட்சிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் வேதணைகளைச் சுரண்டிக்கொள்ளவும் தொழிலாளர்களைப் பிரிக்கும் இந்துமதவாத அரசிலை மேற்கொண்டு தொழிலாளர்களை மலிவு கூலித் தொழிலாளர்களாக வைத்துக்கொண்டு இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களையும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசியலை வெளிப்படையாகக் கொண்டிருக்கிறது.  

அதனால்தான் முன்னேறிய தொழிலாள வர்க்கத்திற்காகச் சிந்திக்கக்கூடிய தொழிலாளர்கள் இளைஞர்கள் பெண்கள் தினமும் துன்பத்தில் வைத்திருக்கும் லாப நோக்கு முதலாளித்துவ அமைப்பை எதிர்க்க வேண்டும் அதற்காகத் தொழிலாளர்கள் தலைமையிலான சோசலிச போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறோம்.

அதற்கு இந்தியத் தொழிலாள வர்க்கம் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிய தொழிலாள வர்க்கத்திற்கான இந்தியப்பகுதி கட்சியைக் கட்டவேண்டியது மிகவும் முக்கியமான பணியாக இருக்கிறது. 


- தமிழ் சூரியன்

No comments:

Post a Comment