Saturday 17 February 2024

AI தொழில்நுட்பம் ஒரு எச்சரிக்கை...

தற்போது ரஜினிகாந் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் செயற்கை நுண்ணறிவு எனபடும் AI ஐ (Artificial Inteligence) பயன்படுத்தி மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோரின் குரலில் பாடலைக் கொண்டுவந்திருக்கிறார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மற்ற துறைகளைப் போல் இசைத்துறையில் மாற்றத்திற்கான தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

 

 
இந்திய திரைத்துறை பெரு முதலாளிகள் தங்கள் லாபத்தை பெருக்குவதற்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் திரைத் துறை அதைச் சார்ந்திருக்கும் நடிகர்கள் இசைத்துறை, எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டுத் துரத்தப்போகிறது என்பதை சாதாரணமாக விட்டுவிட முடியாது.

AI தொழில்நுட்பம் உழைக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் சமூகத்திற்கான தேவைக்கான உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நல்லது.

ஆனால் இங்கு தனிநபர் லாபநோக்குக்காகப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனவே இருக்கும் வேலை செய்பவர்களில் 20 தொடக்கும் 30 சதவீதமானவர்களே போதுமானதாக இருக்கும் படசத்தில் பலருக்கு வேலையிழப்புகள் ஏற்படும்.

தற்போது அமெரிக்காவில் நடிகர்கள், எழுத்தாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று உலக சோசலிச வலைத்தள கட்டுரைகள் குறிப்பிட்டுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியுயோர்க் நகரங்களில் நடிகர்களின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய கட்டுரையொன்றில் “ கொள்ளையர்களின் கைகளிலுள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பமானது, வருமானம் மற்றும் வேலைகள் மீது இன்னும் பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு உறுதியளிக்கிறது”. என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது...
10 ஆண்டுகளில் நிறுவனங்கள் கூறுவார்கள், “இது நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது ... கொள்ளையின் நோக்கம் மற்றும் அளவு வெளிப்படும் போது - நிச்சயமாக அவர்கள் செய்தார்கள் - இது வணிக மாதிரி. இந்த வழிமுறைகள் இலாப நோக்கத்திற்கு சேவை செய்கின்றன - AI காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவம் - அதிக பணம் சம்பாதிப்பதற்காக நீங்கள் உருவாக்கும் வழிமுறைகள் தான் அவை என்று குற்றம் சாட்டுகிறது.” என்று.

AI தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் வாகனத் துறை போன்றவற்றில் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது திரைத்துறையில் மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கும் AI தொழில்நுட்பம் திரைத் துறையைச் சார்ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் இணைக்கப்போகிறது.

அவ்வாறான போராட்டம் லாப நோக்கு முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டமாக மாறவேண்டும். அதுவே தொழிலாளர்களுக்கான விடுதலையை கொண்டுவரும்.

அதற்காகத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு சர்வதேச அளவில் தொழிலாளர்களை முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது.

https://www.youtube.com/watch?v=YQoWOkhvSeg

https://www.wsws.org/ta/articles/2023/07/19/rsbp-j19.html

https://www.wsws.org/ta/articles/2023/07/18/qabz-j18.html