Monday 28 June 2021

டார்கெட் முடித்தாகனும்

May be an image of 8 people, people standing and people sitting

மனேஜர்களும், முதலாளிகளும் இந்த மாத டார்கெட் முடித்துவிடவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறுவனங்களில் கடுமையாக குறைவான கூலிக்கு உழைக்கின்ற தொழிலாளர்களை வெறும் இயந்திரமாகத்தான் பார்த்துகொண்டிருக்கிறார்கள். பல #தொழிலாளர்கள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதால் அவர்களை அடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த தொழிலாளர்கள்தான் தங்கள் கடின உழைப்பை செலுத்தி அவர்களின் டார்கெட்டை முடித்துக்கொடுக்கிறார்கள். தனது #உழைப்பு சக்தியை #குறைந்த #கூலிக்கு விற்கும் தொழிலாளியால் அந்த பொருளில் உரிமைகொள்ள முடியாமல் போகிறது. எந்த உழைப்பையும் செலுத்தாமல் வெறும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியும் வழங்காமல் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் ஆடம்பரமாகவும் சொகுசாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஆட்சியாளர்களும், காவல்துறை, நீதிமன்றம் என அனைத்தும் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. இந்த முதலாளித்துவ வர்க்க சுரண்டலிலிருந்து தொழிலாளவர்க்கம் விடுதலை பெறுவது என்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படும் நனவான அரசியல், தத்துவத்தின் வளர்ச்சியில்தான் தங்கியிருக்கிறது. ஆனாலும் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமான போராட்டம் உலகெங்கிலும் போல இந்தியாவிலும் வெடிக்கத்தொடங்கிவிட்டன. 

 
தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல், தத்துவ நனவு என்பது தானாக ஏற்படப்போவதில்லை. அப்படி ஏற்படாத பட்சத்தில் அதனை பிற முதலாளித்துவ கட்சிகள் அதனை சுரண்டிக்கொள்வதுடன் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு சர்வாதிகார ஆட்சியைத்தான் மேற்கொள்ளும். தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் தங்களுக்கான சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டவேண்டும். அந்த குழுக்கள் சர்வதே தொழிலாள வர்க்கத்தின் உதவியுடன் தனது போராட்டத்தை கொண்டுநடத்தும். அதற்கான முயற்சியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (wsws.org) போராடிக்கொண்டிருக்கிறது. அதில் சேர்வதற்கு தொழிலாளர்கள், விவசாயிகள்,. பெண்கள், மாணவர்கள் முயற்சிக்கவேண்டும்.
 
வாழ்க்கை என்பது ஒருமுறைதான். வரலாறு என்பது நமது கைகளில்தான் உள்ளது.

No comments:

Post a Comment