Monday 28 June 2021

கேள்வி எழவில்லையா?

 May be an image of one or more people, people standing and sky

சமூகத்தில் குறிப்பாக உழைக்கும் மக்களுக்கான நியாயமான பிரச்சனைகளின் கோரிக்கைகள் நீண்ட நெடு காலமாக இருந்துவருகின்றன. நியாயமான சம்பளம், போதிய மருத்துவ வசதி, வாழ்விடம் மற்றும் வாடகை, கல்வி வசதிகள் என குறிப்படத்தக்கவைகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன. பல ஆட்சிகளும் ஆட்சி மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. குறிப்பாக தொழிலாளர்களின் கட்சியாக காட்டிக்கொள்ளும் சிபிஐ மற்றும் சிபிஎம் மற்றும் மாவோயிஸ்டுகள் தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் கட்டிவைத்திருக்கும் வேலையைத் தவிர தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவோ அல்லது தொழிலாளர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கோ எதுவும் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது உழைக்கும் மக்கள் ஆகிய நாம் பெரு முதலாளிகளின் லாபங்களுக்காக சுரண்டப்படுவதிலிருந்து விடுபட முடியாதா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழவில்லையா?
 

No comments:

Post a Comment