Thursday 14 April 2022

அம்பேத்கர் அரசியலும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையும்

 

  “ரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏதேனும் அதிருப்தியோ, குறைபாடோ, பிரச்சனைகளோ இருந்தால் உடனே எல்லோரும் என்னை நோக்கி விமர்சனக் கணைகளைத் தொடுக்கின்றனர். நீங்கள்தானே சட்டங்களை உருவாக்கினீர்கள் என்று. அது தவறு. நான் ஒரு வாடகைக் குதிரை. அப்படித்தான் நான் பயன்படுத்தப்பட்டேன். என்னை என்ன செய்யச் சொன்னார்களோ, அதை என்னுடைய விருப்பத்துக்கு மாறாகவே செய்தேன். சட்டத்தை உருவாக்கியவன் நான் என்று சொல்பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இந்த அரசியல் சட்டத்தைத் தீவைத்துக் கொளுத்தும் முதல் நபராக நானே இருப்பேன்”. என்று கூறினார் அம்பேத்கர்

கம்யூனிசத்திற்கு எதிரானவராகவும் முதலாளித்துவத்தால் வளர்க்கப்பட்டவருமான அம்பேத்கர் இந்த முதலாளித்து அமைப்பில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தீண்டப்படாதவர்களுக்கான விடுதலையை ஒதுக்கீடுகளை பெறுவதன் மூலம் வென்றுவிடலாம் என்று போராடியவர். இந்திய முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல்வாதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

தீண்டப்படாதவர்களான அந்த மக்களின் வறுமையும், வாழ்க்கை போராட்டமும் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது ஆட்சியாளர்களின் காரணம் என்பதைவிட இந்த முதலாளித்துவ அமைப்பின் ஒரு கூறாக இருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் மூலம் அடையாளம் கானப்பட்ட “இதுநாள் வரையிலுமான சமுதாயங்களில் வரலாறு அனைத்தும் வர்க்கப் போரட்டங்களது வரலாறே ஆகும். ” மற்றும் இந்த ஒடுக்குமுறை, அடக்குமுறைகளை பாதுகாக்கிற முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிய உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்ஸ் அறைகூவல் விடுத்திருந்தார் ஆனால் அதைத் திசைதிருப்பி முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கும் பொருட்டு தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் கூறுகளின் ஒன்றாக தாழ்த்தப்பட்டவர்களை சாதியப் போராட்டமாக மாற்றி பிரிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்து மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வர்ணாசிரம அரசியலில் தீண்டப்படாதவர்களுக்கான போராட்டத்தினால் சாதிய மேல்தட்டு மக்களின் ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு அப்பால் வறுமையில் இருக்கும் அம்மக்களின் வாழ்க்கையில் எந்த பெரிய மாற்றங்களையும் எட்ட முடியவில்லை.

அவருடைய போராட்டங்களில் ஏற்பட்ட விரக்தி அவரை இன்னொரு பிற்போக்கு மதமான புத்தமதத்திற்கு இழுத்துச் சென்றது.

இந்து மேலாதிக்க, முதலாளித்துவ வர்க்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தீண்டப்படாத அல்லது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இப்போது அம்பேத்கரைத் தூக்கிபிடிக்கும் எந்த அரசியல்வாதிகளாலும் விடுதலையை பெற்றுத்தரமுடியாது. அவரைத் தூக்கிபிடித்துக்கொண்டு காங்கிரஸ், பாஜக, மற்றும் பிராந்தியவாத திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளின் ஆட்சியாளர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்று இந்தியாவில் அதிகமாக இருக்கும் சாதிய கட்சியின் தலைவர்களும் தங்களுடைய முதலாளித்துவ வர்க்க அரசியலில் தீண்டப்படாத அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அவரை வைத்து அரசியல் இருப்புகளில் சொத்துக்களை அதிகமாக சேர்த்த பெரும் பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை அணிதிரட்டி தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் சோசலிச புரட்சியினூடாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே அவர்களுடைய நியாயமான, மனிதாபிமான கோரிக்கைளை வென்றெடுக்க முடியும். அதற்கு இந்தியாவில் இருக்கும் ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகள் (சிபிஎம், சிபிஐ) மாவோயிச கட்சிகள் முதலாளித்துவ அமைப்பின் பகுதிகளாக மாறிவிட்டதால் அவைகளால் முடியாது. அவைகள் மார்க்சிஸத்தை கைவிட்டுவிட்டு மாநில பிற்போக்கு கட்சிகளுடன் கூட்டணிவைத்துக்கொள்வதன் மூலம் உழைக்கும் மக்களின் நியாயமான போராட்டங்களை காட்டிக்கொடுக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தீண்டப்படாதவர்களின் வேதணைகளை சந்தைகளில் விற்று பணம் சம்பாதிக்கவரும் முதலாளிகளுக்கு முகவர்களாக மாறிவிட்டார்கள்.

அதனால் சாதிய ஒடுக்குமுறை, பெரும் முதலாளித்துவ வர்க்கத்தின் அடக்குமுறை ஆகியவற்றிக்கு எதிராக எழுச்சிபெற்றுவருகிற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய உண்மையான மார்க்சிஸ பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிற ட்ரொட்ஸ்கிச கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் வழிகாட்டல் இந்தியத் தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படுகிறது.  

ஒடுக்குமுறையின் வடிவங்கள் வேறுபடலாம் உலகம் முழுவதும் ஒடுக்கப்படுபவர்களின் மிகவும் மோசமான நிலைமைகள் ஒன்றாகத்தான் இருக்கிறது. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்து நீண்ட காலமாக போராடிவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் சேருங்கள். உங்கள் பகுதியில் அதனை கட்டுவதற்கு முன்வாருங்கள். அரசியல் சந்தேகங்களுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.

தொடர்புக்கு...
https://www.wsws.org/ta/special/pages/contact.html

No comments:

Post a Comment