Monday 28 June 2021

சீமானும் ஸ்டாலினும் சந்திப்பு

 May be an image of 3 people, people standing, indoor and text that says 'தமிழ் GOVERNME'

படம்; ஆனந்தவிகடன் (யூன் 4 2021)

 
 தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிகள் ஏற்படுகின்ற சூழ்நிலைகளில் அதை எதிர்ப்பதற்கு முதலாளித்துவ அரசியல்வாதிகள் வெளியில் எதிர்ப்பதைப் போல் காட்டிக்கொண்டாலும் எப்போதும் ஒரு கூட்டாக இருந்துகொண்டிருப்பார்கள்.

திராவிட ஆட்சிகளாலும், ஊழல்களாலும், குடும்ப அரசியலாலும் தமிழ்நாட்டை திமுக மற்றும் அஇஅதிமுக வை கொள்ளையடித்தவர்கள் என்று கூறியவர் சீமான். தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் மத்தியில் ஒன்றுபட்ட எழுச்சிகள் எழுவதைக் கண்டு தமிழ் இன வகுப்புவாதத்தால் தமிழ் உழைக்கும் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கும் அரணாக இருந்து செயல்பட்டுவருகிறார். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இயக்குவது முழுக்க முழுக்க இந்திய பெருநிறுவன முதலாளித்துவ ஆளும் தட்டுக்கள் என்பதை #தொழிலாளவர்க்கம் புரிந்துகொள்ளவேண்டும். 
 
மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, துயரங்களை தீர்ப்பதற்கு படு பிற்போக்குவாத கொள்கைகளை உணர்ச்சிமிக பேச்சைக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திய நிலையில் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட நடுத்தரவர்க்க தட்டுக்களின் ஆதரவை பெற்றிருந்தார். அதேநேரம் மக்கள் மத்தியில் இருந்த திராவிட கட்சிகளின் தோல்விகளை சுரண்டுவதற்கும் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பேச்சை நம்பி, வாக்களித்தவர்களின் எண்ணங்களில் #ஸ்டாலின் #சீமான் சந்திப்பு ஒரு கனம் நாம மோசம் போயிட்டோமோ என்ற எண்ணம் வந்து போயிருக்கும். தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலாவுக்காக எடப்பாடி பழனிச்சாமியிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். 
 
தொழிலாள வர்க்கம் இத்தகைய #குட்டிமுதலாளித்துவ அரசியில்வாதிகள் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்பதை அடையாளம் கண்டு அவர்களை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் கல்வியில் பலமடைந்தவர்களாக மாறவேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் சேர்ந்து தொழிலாள வர்க்கத்திற்கு தலைமையேற்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (#wsws.org) இந்திய பகுதியை கட்டி சோசலிசத்திற்கான போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும். 
 
இறந்துபோன முதலாளித்துவத்திற்கு ஸ்டாலின் தலைமையிலான #திமுக, அல்லது பிற முதலாளித்துவ கட்சிகள் காட்சிக்கு வருவது தொழிலாள வர்க்கத்தினை காட்டுமிராண்டித்தனமான முதலாளிகளின் சுரண்டலைப் பாதுகாப்பதற்காகத்தான் அதில் சீமான் விதிவிலக்கான அரசியலைக் கொண்டிருக்கிவில்லை.
 

No comments:

Post a Comment