Saturday 4 September 2021

மாற்றத்தை யார் தருவார்கள்?

படம்: wsws.org

முதலாளித்துவ ஆட்சியாளர்களாலும், தேசியவாதிகளாலும் மற்றும் வகுப்புவாதிகளாலும் உழைக்கும் மக்களின் துன்பங்களுக்கு விடிவு கிடையாது என்பதைத் தெரிந்துகொள்ளும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் மார்க்சிஸத்தை நோக்கித்தான் போவார்கள். அங்கே போலி மார்க்சிஸ்டுகளும் ஸ்ராலினிஸ்டுகளுமே இருக்கிறார்கள் என்பதை காலம் கடந்தபின்னர்தான் தெரியவருகிறது. அந்த போலிகளின் அரசியல் நடவடிக்கைகள் மேல் நம்பிக்கை இழந்து போகச் செய்வதுடன், சமூகத்தின் நெருக்கடி நிலைமைகளால் விரக்தியும் வேதைணையுமே ஏற்படுகிறது.

உழைக்கும் தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களாலும் முதலாளிகளிளாலும் சுரண்டப்படுவதிலிருந்து விடுபட எந்த பாதையும் இல்லாமல் தவிக்கவிடப்பட்டிருக்கின்றனர். முதாலாளிகளின் லாபங்கள் அதிகரிப்புக்கு தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக சுரண்டப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை வறுமைக்குள் வைத்திருக்கின்றனர்.

ஆனால் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, எழுச்சிகள் வெடிக்கின்றன. நாளுக்கு நாள் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முதலாளிகளைக் காப்பாற்ற சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதனை வெட்டவெளிச்சமாக்கியிருந்தது.  உலகளவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் அதே நெருக்கடியிலும், போராட்ட குணத்துடனும்தான் இருக்கிறார்கள். நிச்சயம் கேள்விகளுக்கு விடைகள் இருக்கவே செய்யும் என்ற தேடல் ஏற்படுகிறது.

மாபெரும் புரட்சியாளன் லெனினுடன் ரஷ்யப் புரட்சியில் ஈடுபட்ட ட்ரொட்ஸ்கி என்கிற  புரட்சியாளனின்  போராட்டங்களும், மார்க்சிஸ ஆய்வுகளும் எம்மை வந்தடைகின்றன. அந்த வரலாற்றை படிப்பதற்கு முன்னால் ட்ரொட்ஸ்கி என்கிற பெயரும், அதன் மீதான நம்பிக்கையின்மையும் இருக்கத்தான் செய்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இங்கே ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை இருட்டடிப்பு செய்ததுடன், அவரை கருங்காலி, தொழிலாள வர்க்கத்தின் எதிரி, ஏகாதிபத்திய கைக்கூலி என்ற அவர்மீதான கரிபூசல்களை ஸ்ராலினிஸ்டுகளும், முதலாளித்துவ வாதிகளும் தாங்கள் கொண்டிருந்த ஊடக பக்கபலத்தால் செய்ய முடிந்திருக்கின்றன.

எவைகளைக் கொண்டு ட்ரொட்ஸ்கிக்கு எதிராக பயன்படுத்தினார்களோ அதனை அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்களால் இன்று மறைக்க முடியாமல் இருக்கிறது. முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுப்பதிலிருந்து ஏகாதிபத்தியங்களின் நடவடிக்கைகளுக்கு ஊதுகுழல்களாகவும் இருந்து செயல்படுகின்றனர். தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளிகளுடன் சேர்ந்து நசுக்குகின்றனர். ஆனால் அதனை எதிர்ப்பதுடன் எந்தவித சமரசத்திற்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தொழிலாளர்களின் தலைமையில் சோசலிச புரட்சிக்காக போராட வேண்டும் என்ற மார்க்சிஸ்டுகள் இல்லையா?

உண்மைகளைத் தேடுகிறவனுக்கு உண்மைகள் தானாக வரும் அப்படி வந்ததுதான் மார்க்சிஸத்தின் மெய் நாடியாக இருந்து போராட்டத்தை நடத்தும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் கட்டப்பட்ட நான்காம் ஆகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் உலக சோசலிச வலைத் தளமும் (wsws.org). சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை வெளியிடுவதுடன் தொழிலாளர்கள் சோவியத்துக்கள் போல தங்கள் வேலைத் தளங்களின் நடவடிக்கை குழுக்களை  கட்டுவதற்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. 

தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் பயிற்சி கொடுத்து உலகத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் சோசலிசப் புரட்சிக்கு தயார் செய்கிற ஒரு போராட்டத்தை அது மட்டுமே இன்று நடத்துகிறது. வரலாற்று ரீதியான ஆய்வுகளையும், தற்போதைய முதலாளித்துவ அமைப்பின் சமகால போக்குகளையும் மிகத் துல்லியமாக ஆய்வு செய்துவருகின்றது. இதை வேறு எந்த அமைப்பினரோ அல்லது கட்சிகளோ செய்யவில்லை. வாழும் காலத்தில் ட்ரொட்ஸ்க்கிச போராட்டத்தின் தொடர்ச்சியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறேன் என்று ஏராளம் தோழர்கள் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மையாக இருக்கிறார்கள்.

சமூக மாற்றத்திற்கான கேள்விக்கு உண்மையான விடையை தேடுபவர்களாக இருந்தால் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் பகுதியை கட்டுவதற்கு சேர முயற்சிக்கவும். முதலாளித்துவ ஆட்சியாளர்களும்,  முதலாளிகளும் இனிவரும் காலங்களில் என்ன செய்வார்கள் என்பதை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே நன்கு தெரிந்தவர்களாகவும் அதனை எதிர்ப்பதற்கான போராட்ட வழிமுறைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

மாற்றத்திற்கான பாதையில் இணையப் போகிறோமா? இல்லை வீடு எரிகிறதே என்று புலம்பிக்கொண்டிருக்கப் போகிறோமா? முடிவு உன் கையில்தான் உள்ளது. 


No comments:

Post a Comment