Sunday, 13 July 2014

இந்தியா பிஜேபி வலதுசாரி, முதலீட்டாளர்-சார்பு வரவுசெலவு கணக்கைத் தாக்கல் செய்கிறது



இந்தியாவின் புதிய பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் நேற்று தாக்கல் செய்த அதன் முதல் வரவு-செலவு திட்டத்தை, "சந்தை-சார்பு", “முதலீட்டாளர்-சார்பு" சீர்திருத்தத்தின் வேகத்தை அது தீவிரப்படுத்தும் என்பதற்கு ஒரு குறிப்பை வழங்குவதற்காக பயன்படுத்தியது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இந்தியாவில் உள்ள பத்து மில்லியன் கணக்கான வேலையற்றோருக்கு மற்றும் தகுதிக்கு குறைந்த வேலையில் இருப்பவர்களுக்கு வேலைகளை உருவாக்குவது என்ற பெயரில், சமூக-பொருளாதார வாழ்வின் மீது பெருவணிகங்களின் கட்டுப்பாட்டை இன்னும் மேலதிகமாக பலப்படுத்துவதையும் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு இந்திய தொழிலாளர்களையும் மற்றும் உழைப்பாளர்களையும் விலை கொடுக்க செய்வதையும் நோக்கமாக கொண்ட ஒரு முறைமைகளின் தொகுப்பு அந்த வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அவரது வரவு-செலவு திட்ட உரையின் போது, நிதியியல் மந்திரி அருண் ஜேட்லி இந்தியாவின் சோகைபீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு (இந்திய பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வளர்ந்துள்ளது என்பதால்) முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் "முடிவெடுக்க இயலாமை" மற்றும் "ஜனரஞ்சகவாதத்தை" குற்றஞ்சாட்டினார்.

அந்த இரண்டாவது சொற்பிரயோகமானது ("ஜனரஞ்சகவாதம்") சமூக நல செலவினங்களைக் குறை கூறுவதற்கு பெருவணிகங்களாலும், பெருநிறுவன ஊடகங்களாலும் வழக்கமாக பயன்படுத்தப்படுவதாகும்.

அதையொரு "கடினமான" இலக்கு என்று குறிப்பிட்ட ஜேட்லி, அரசாங்கம் 2014-15 நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறையை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.1 சதவீதமாக மட்டுப்படுத்தும் என்று சூளுரைத்தார். மேலும் 2015-16இல் அந்த பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்திற்கும் மற்றும் 2016-17இல் 3 சதவீதத்திற்கும் குறைக்க அரசாங்கம் பொறுப்பேற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு பெரும் செலவின வெட்டுக்களும் மற்றும் அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களில் பெரிய அதிகரிப்புகளும் தேவைப்படும். கடந்த மாதம் இரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களில் அரசாங்கம் ஒரு கூர்மையான உயர்வை அறிவித்திருந்தது.

நேற்றைய வரவு-செலவு திட்ட கணக்கும் கூட, ஒரு கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர்கள் விரும்பினால் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை மற்றும் குறைந்தபட்ச கூலி வழங்கும் ஒரு திட்டமென்று கருதப்படும் ஒரு பெருந்திரளான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற உத்தரவாத திட்டம் உட்பட சில பிரிவுகளில் செலவினங்களைக் குறைத்திருந்தது.

மிக முக்கியமாக, அந்த வரவு-செலவு திட்டம் உணவு, எரிபொருள் மற்றும் உர விலைகள் மீதான மானியங்களைக் குறைப்பதற்கான, மற்றும் இறுதியாக அவற்றை நீக்குவதற்கான ஒரு உந்துதலைத் தொடங்கி இருந்தது. பெருநிறுவன மேற்தட்டுக்கள் நீண்டகாலமாகவே இந்த மானியங்களை நீக்குவதற்கு குரலெழுப்பி வந்துள்ளன.

அனைத்து அரச செலவினங்களைக் கண்காணிக்கவும் மற்றும் "வெறுமனே வெகுஜனவாத மற்றும் வீணான செலவுகளைத்" தவிர்க்கவும் செலவு நிர்வாக கமிஷன் அமைக்கப்படும் என்று ஜேட்லி அறிவித்தார். மானியம் அளிக்கப்படும் திட்டங்களை, குறிப்பாக உணவு மற்றும் எண்ணெய்க்கான மானியங்களை மீளாய்வு செய்வதே அந்த கமிஷனின் மையத்தில் இருக்கும் தீர்மானமாகும்.

மானியங்கள் "அதிகமாக இலக்கில்" வைக்கப்படும்—அதாவது மிகவும் வறிய ஏழைகளோடு நிறுத்துவது—என்பதையும் ஜேட்லி சேர்த்துக் கொண்டார். அதேபோன்று வறுமையைக் குறைப்பதற்கு ஆதரவளிக்குமாறும் அவர் அழைப்புவிடுத்தார். “நம்முடைய வறுமை ஒழிப்பு திட்டங்கள் நன்கு-இலக்கில் வைக்கப்பட்டிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்" என்று ஜேட்லி அறிவித்தார்.

2017க்குள் செயல்பாட்டில் கொண்டு வரப்படும் மின்ஆலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கான வரி விடுப்பு உட்பட பெருவணிகங்களுக்கான புதிய வரிச்சலுகைகளையும், மற்றும் தனிநபர் வருமான வரி செலுத்தும் சிறுபான்மை இந்தியர்களுக்கான ஒரு வரி வெட்டையும் ஜேட்லி அறிவித்தார்.

அரசாங்கத்தினது "நிதி திரட்சி" (fiscal consolidation), அதாவது பற்றாக்குறை குறைப்பு மூலோபாயம், இதன் ஒரு முக்கிய பாகமாக இருப்பது வருவாயை அதிகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் பல்வேறு மாநில மற்றும் தேசிய வரிகளை, அனைத்திந்திய பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியைக் (GST) கொண்டு பிரதியீடு செய்ய மாநிலங்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று அரசாங்க வரவு-செலவு திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

பெரும்பாலான முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் ஏற்கனவே அதுபோன்ற நுகர்வு வரிகளைக் கொண்டுள்ளன என்பதோடு, அது நிதியியல் "எதிர்-புரட்சியை" நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாகவும் இருந்துள்ளது, அதன்கீழ் வரிச்சுமையானது அதிகளவில் பெருவணிகங்களிடமிருந்து உழைக்கும் மக்களில் மிகவும் சலுகை படைத்தவர்களுக்கு மாற்றப்படுகிறது.

குறுகிய காலக்கட்டத்திற்கு, அரசு வருவாய்க்கு கணிசமான அளவிற்கு முட்டுக் கொடுக்க, பொதுத்துறை நிறுவனங்களை பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ தனியார்மயமாக்கும், பங்கு விற்பனை முறையை (disinvestment) அரசாங்கம் கணக்கில் எடுத்துள்ளது. பங்கு விற்பனையின் வருவாய்-இலக்கு, இந்த வரவு-செலவு திட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பெரியளவில் உள்ளது.

பெரும் எண்ணிக்கையில் பெருநிறுவனங்களின் வாராக் கடன்களின் கீழ் கட்டுற அச்சுறுத்தப்பட்டு இருக்கும் அரசுடைமை வங்கியியல் துறையை மீள்மூலதனமயமாக்குவதற்கும் (recapitalize) அரசாங்கம் பங்கு விற்பனையையே பயன்படுத்த நோக்கம் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கமும் மற்றும் அதற்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்கமும் இரண்டுமுமே பொதுச் சொத்துக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருவணிகங்களுக்கு விற்பதை ஒரு முக்கிய நிதியியல் கருவியாக பார்க்கின்ற என்றபோதினும், தனியார்மயமாக்கும் உந்துதலுக்கான முதன்மை உத்வேகம், பொருளாதாரத்தின் அனைத்து உட்கூறுகளின் மீதும் பெருவணிகங்களுக்கு அதிக நேரடியான கட்டுப்பாட்டை அளிப்பதற்காக அமைந்துள்ளது, அதன் மூலம் அது தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபங்களை நேரடியாக சீரிய முறையில் தீவிரமாக பிழிந்தெடுக்க முடியும்.

தனியார்-அரசு கூட்டுறவு என்றழைக்கப்படும் (Private Public Partnerships - PPP) வழிவகையின் மூலமாக, அனைத்து விதமான ஸ்தூல மற்றும் சமூக உள்கட்டமைப்பையும் கட்டமைப்பதிலும் மற்றும் நிர்வகிப்பதிலும் வணிகங்களுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வழங்க பிஜேபியின் வரவுசெலவு கணக்கு மூர்க்கமான திட்டங்களை வரைந்துள்ளது. இந்தியா ஏற்கனவே உலகின் மிகப்பெரிய PPP சந்தையாக இருக்கிறது என்றும் ஜேட்லி ஊக்கப்படுத்தினார்.

பிஜேபி எதிர்கட்சி இருக்கையில் இருந்த போது எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தலைகீழாக, காப்பீட்டு துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திற்கு உயர்த்தி ஒப்புதல் வழங்குவதற்கு முந்தைய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிமுறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜேட்லி அறிவித்தார்.

அவர் கூறுகையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் "முதலீட்டாளர்களுக்கு நேசமானதும் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதுமான ஒரு நிலையான மற்றும் அனுமானித்தக்க வரிவிதிப்பு முறையை வழங்க" தீர்மானமாக இருப்பதாக தெரிவித்தார். "முந்தையகால" வரி (“retrospective” tax) முறையீடுகளை எந்தவொரு எதிர்காலத்திலும் மீளாய்வு செய்ய ஒரு உயர்மட்ட குழுவை அரசு அமைக்குமென்றும் அவர் மேற்கொண்டு அறிவித்தார். ஆனால் அவர் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பியவாறு மற்றும் 2012 சட்டத்தை இரத்து செய்ய கோரிய அந்தளவிற்கு செல்லவில்லை, அந்த சட்டத்தின் கீழ் தான் பன்னாட்டு நிறுவனமான வோடாபோன் முந்தைய அதன் கையகப்படுத்தலின் மீது மூலதன வருவாய் வரியைச் (capital gains tax) செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டின் வரவு-செலவு திட்டம், பெருவணிக நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதில் ஒரு முதல்படி மட்டுமே ஆகும் என்று வலியுறுத்திய ஜேட்லி, “அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் 7-8 அல்லது அதைவிட அதிகமான ஒரு நீடித்த வளர்ச்சியை நோக்கிய ஒரு பயணத்திற்கு" இது தொடக்கமாகும் என்றார்.

வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முந்தைய வாரங்களில், பிஜேபியின் செய்தி தொடர்பாளர், "கட்டமைப்பு மாற்றங்களுக்கு" 2015-16 வரவு-செலவு திட்டம் வரையில் காத்திருக்க வேண்டியதிருக்கும் என்று கூறி, அதேபோன்ற ஒரு சேதியை வழங்கி இருந்தார்.

இந்தியாவின் 2014-15 நிதியாண்டு ஏப்ரல் 1இல் தொடங்குகின்ற நிலையில் கால அவகாச சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த வரவு-செலவு திட்டம் பெரிதும், முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு "இடைக்கால" வரவு-செலவு திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதை பெருவணிக வட்டாரங்கள் பொதுவாக புரிந்து கொண்டிருந்தன.

ஆனால் அந்த சிரமங்கள் காலத்தை மட்டுமே சார்ந்தவை அல்ல. இந்திய பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. இந்த அரசாங்கம் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமென சர்வதேச பங்குபத்திர தரவரிசை பட்டியலிடும் முகமைகள் கோரி வருகின்றன. இதற்கிடையே, இந்திய பெருவணிகங்களோ பெரும் கடன் சுமைகளில் இருந்து தப்பிக்கவும் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர் நலன்களுக்கு புத்துயிரூட்டவும் ஒரு மிக வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பிரயத்தனத்தில் உள்ளன.

அதன் வரவு-செலவு திட்டத்தில் பிஜேபி பெருவணிகங்களுக்கு வரிச்சலுகைகளை வாரிக் கொடுத்தும், அரசாங்க செலவுகளைக் குறைத்தும் ஒரு சமநிலையான ஒருவித நடவடிக்கைக்கு முயற்சித்திருந்தது.

பெருவணிக வட்டாரங்களின் பிரதிபலிப்பு ஒரு கலவையாக இருந்தது, ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இன்னும் மேலதிகமான ஆக்ரோஷமாக நகரவில்லை என்பதற்காக அரசாங்கத்தை விமர்சித்திருந்ததோடு, அது காங்கிரஸின் புத்தகத்திற்கு மிக நெருக்கமாகவே ஒட்டிக் கொண்டிருப்பதாக அறிவுறுத்தியது.

யதார்த்தம் என்னவென்றால் கடந்த இரண்டு தசாப்தங்களாக முதலாளித்துவத்தின் நவ-தாராளவாத நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ் பெரும்பாலும் பெரும்பளுவை நகர்த்தி இருந்ததோடு, அது வாஷிங்டனுடன் ஒரு உலகளாவிய மூலோபாய கூட்டுறவையும் ஏற்படுத்தி இருந்தது. எவ்வாறிருந்த போதினும், ஸ்ராலினிச இடது முன்னணி காங்கிரஸூடன் மீண்டும் மீண்டும் அணி சேர்ந்தும் மற்றும் அதை "மக்கள்-சார்பு" கொள்கைகளைப் பின்தொடருமாறு அழுத்தம் அளிக்க செய்ய முடியும் என்று வாதிட்டும், அது பெருவணிகங்களுக்கு எதிரான தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை திட்டமிட்டு மூச்சடைக்கச் செய்தது. இது தான், பெருவணிக காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கோபத்தை நரேந்திர மோடியும் மற்றும் இந்து மேலாதிக்கவாத பிஜேபியும் சுரண்டிக் கொள்வதற்கும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தற்காக பதவியில் ஏறுவதற்கும் கதவைத் திறந்து விட்டது.

வரவு-செலவு திட்டக்கணக்கின் மற்றொரு உட்கூறும் கருத்திற்குரியதாக இருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறையின் வரவு-செலவு திட்டத்தை, அமெரிக்க டாலரில் கூறுவதானால், 37 பில்லியன் டாலராக உயர்த்தி இராணுவ செலவினங்களில் 12.5 சதவீத உயர்வையும் அது உள்ளடக்கி இருந்தது. வான்வழி-தரைவழி-மற்றும்-கடல்வழி அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்வது மற்றும் ஒரு பரந்த கடற்பகுதிக்கான கப்பற்படையை அபிவிருத்தி செய்வது உட்பட, இந்திய மேற்தட்டு அதன் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கு மையமாக, அது இராணுவப் பலம் விரிவாக்கப்பட வேண்டுமென்று பார்க்கிறது.

பாதுகாப்பு மந்திரியாகவும் இரட்டை பொறுப்பு வகிக்கும் ஜேட்லி, இராணுவத் துறையில் வெளிநாட்டு அன்னிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தி இருப்பதாகவும் அறிவித்தார். வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்பதன் மூலமாக, தொழில்நுட்ப பரிவர்த்தனைகளைப் பெற முடியுமென்றும், அது இந்தியாவின் சொந்த ஆயுத தளவாட நிறுவனங்களை ஊக்குவிக்கும் என்றும், அத்தோடு வெளிநாட்டு ஆயுத தளவாடங்களை வாங்குவதால் செலவாகும் அன்னிய செலாவணி இழப்பை மட்டுப்படுத்த முடியுமென்றும் இந்திய அரசாங்கம் நம்புகிறது. “இந்தியா இன்று உலகின் மிகப் பெரிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் நாடாக இருப்பதோடு, இந்த துறையில் உள்நாட்டு உற்பத்தி திறமைகள் இன்னும் ஒரு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது", என்று ஜேட்லி தெரிவித்தார்.

By Keith Jones 
11 July 2014

http://www.wsws.org/tamil/articles/2014/july/140712_inbjp.shtml

Wednesday, 2 July 2014

சாரயேவோவிற்குப் பின்னர் ஒரு நூறு ஆண்டுகள்

முதலாம் உலக போர் வெடிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த சம்பவத்தின் நூறாவது நினைவுதினத்தை இன்றைய நாள் குறிக்கிறதுஜூன் 28, 1914,ஞாயிறன்று காலைஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசர் பிரான்ஸ் ஜோசெப்பின் மருமகனும் அவரது அரசியல் வாரிசுமான ஆர்ச்டூக் பிரான்ஸ் பெர்டினான்ட்,பொஸ்னியாவிற்கான அவரது அரசுமுறை விஜயத்தின் கடைசி நாளில்,சாரயேவோ வழியாக அவரது காரில் பவனி வந்தபோது படுகொலை செய்யப்பட்டார்ஆர்ச்டூக்கின் மனைவி சோபியாவும் சுட்டு கொல்லப்பட்ட அந்த சம்பவத்தின் குணாம்சம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்த போதினும்,ஹாப்ஸ்பேர்க் வம்சத்தின் வழிதோன்றல் கொல்லப்பட்டமை இந்தளவிற்கு குறிப்பிடத்தக்க முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமென அங்கே எதிர்பார்க்கப்படவில்லை.
எவ்வாறிருந்த போதினும் ஜூலை 1914 வாக்கில் அந்த படுகொலையை தொடர்ந்து ஏற்பட்டிருந்த நெருக்கடி படிப்படியாக தீவிரமடைந்ததுபிரதான ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகள் காட்டிய விடையிறுப்பானதுஅதற்கு முந்தைய தசாப்தத்தில் அவற்றின் முரண்பாடான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களால் உருவாகியிருந்த பதட்டங்களால் நிபந்தனைக்குட்பட்டிருந்ததுபால்கன் நாடுகள் மீதான ஆஸ்திரிய-ஹங்கேரிய சாம்ராஜ்ஜியத்தின் மேலாதிக்கத்திற்கு சேர்பிய தேசியவாத அபிலாஷைகள் சவாலாக இருந்ததால்பிற்போக்குத்தனமான ஹாப்ஸ்பேர்க் முடியாட்சி சேர்பிய ஆட்சி மீது தாக்குதலை நடத்துவதற்கு ஒரு சாக்காக அந்த படுகொலையை பற்றிக் கொண்டது.
முற்றிலும் ஏற்றுக் கொள்ளவியலாதயுத்தத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய இறுதி எச்சரிக்கையோடு சேர்பியர்களைத் தாக்க பேர்லினில்பேரரசர் இரண்டாம் வில்ஹெல்ம் (Emperor Wilhelm II) ஆட்சி ஆஸ்திரிய-ஹங்கேரிய அரசாங்கத்திற்கு பச்சைக்கொடி காட்டியதுசேர்பியா மீதான ஆஸ்திரிய படையெடுப்புரஷ்ய சாம்ராஜ்ஜியத்தை அதன் பால்கன் நாடுகள் மீதான நலன்களைப் பாதுகாக்க ஒரு தலையீடு செய்ய தூண்டுமென்பதை அறிந்தே ஜேர்மனி இந்த நடவடிக்கையை எடுத்ததுஜேர்மன் ஆட்சியோ ரஷ்யா உடனான ஒரு மிகப்பெரிய யுத்தத்தின் சாத்தியக்கூறைகிழக்கு ஐரோப்பாவில் அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கும்அவ்விதத்தில்,அக்கண்டம் முழுவதிலும் அதிகார சமநிலையை மாற்றுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்த்தது.
ஆனால் இந்த சாத்தியக்கூறுஜேர்மன் அதிகார வளர்ச்சியைத் தடுக்க ரஷ்யாவோடு ஒரு கூட்டணிக்குள் நுழைந்திருந்த பிரான்சின் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியதுஜேர்மன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு யுத்த சம்பவத்தில்பிரான்ஸ் ஒதுங்கி இருந்து ஒரு ஜேர்மன் வெற்றியை ஏற்றுக் கொள்ள பிரெஞ்சு முதலாளித்துவம் தயாராக இல்லை.அதேவேளையில்ஜேர்மன் ஆட்சியோ ரஷ்யா உடன் யுத்தம் வெடித்தால் பிரான்ஸ் மீது ஒரு தாக்குதல் நடத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தை,நீண்ட காலத்திற்கு முன்னரேதயார் செய்திருந்தது.
அந்த நெருக்கடி ஒரு பேரழவுகரமான உச்சக்கட்டத்திற்கு இட்டு சென்றது.ஆகஸ்ட் முதல் வார வாக்கில்ஐரோப்பாவின் பிரதான சக்திகள்ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரி ஒருபுறமும்பிரான்ஸ்ரஷ்யா மற்றும் பிரிட்டன் மறுபுறமும் இருக்கயுத்த நிலையை எடுத்திருந்தன.
ஜூன் 28இல் சாரயேவோ படுகொலையிலிருந்து ஆகஸ்டின் முதல் வாரங்களின் வாக்கில் ஒரு முழு அளவிலான ஐரோப்பிய யுத்தத்திற்கு இட்டு சென்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வரையில் இவற்றை பகுத்தாராய்ந்து கணக்கற்ற தொகுப்புகள் எழுதப்பட்டிருக்கின்றனஆனால் இத்தகைய இலக்கியத்தில் பெரும்பாலானவைஅந்த யுத்தம் வெடித்ததற்கு முதன்மையான பொறுப்பை எந்த ஆட்சியின் மீது சுமத்துவதென்பதையே ஸ்தாபிக்க முனைகின்றனஇருப்பினும் ஏதாவதொரு அரசாங்கத்தின் யுத்த நோக்கங்களோடு தொடர்புடைய முக்கிய தகவல்களைக் கண்டறியசான்றாக,ஜேர்மன் ஆட்சியின் தொலைதூர அபிவிலாஷைகள் போன்றவற்றை அறியஇந்த ஆய்வுகள் இட்டு சென்றிருகின்றன என்றபோதினும்யுத்தத்திற்கான இன்றியமையா காரணங்கள் மீது ஓர் ஆழ்ந்த மட்டத்திலான பகுப்பாய்வு அவசியப்படுகிறது.
பெரிதும் பற்றியெறியக் கூடிய விதத்தில் இருந்த ஐரோப்பிய மற்றும் சர்வதேச புவிசார் அரசியலின் கட்டமைப்பை எரியூட்ட சாரயேவோ படுகொலை ஒரு தூண்டுபொறியாக இருந்தது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லைஆஸ்திரிய பேரரசரின் மருமகன் படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் ஆகஸ்ட் 1914இல் அந்த யுத்தம் வெடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று வைத்து கொண்டாலும் கூட,உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோவேறு ஏதேனும் ஒரு சம்பவம் ஒரு பொதுவான யுத்தத்திற்கு இட்டு சென்றிருக்கும்.
உண்மையில்முதலாம் உலக போர் வெடிப்பதற்கு முந்தைய ஆண்டுகளில்,பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே காலனிகள் மற்றும் நிதியியல் நலன்களின் மீது நிலவிய முரண்பாடுகளில் இருந்து பல "யுத்த அச்சுறுத்தல்கள்அங்கே ஏற்பட்டிருந்தனஐரோப்பாவின் அரசியல் சூழல் அதிகளவில் பதட்டமாக இருந்ததுஆயுதங்களுக்கான அரசு செலவுகள்,இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் போது பிரமாண்டமாக அதிகரிக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் அகிலத்தின் பதாகையின் கீழ் வளர்ந்து வந்த தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கம்முதலாளித்துவ இராணுவவாதத்தால் முன்னிறுத்தப்பட்ட அபாயங்களைக் குறித்து அதிகளவில் எச்சரிக்கையூட்டி வந்தது. “வல்லரசுகளுக்குஇடையிலான யுத்த சாத்தியக்கூறு முதலாளித்துவ அமைப்புமுறையின் தன்மையிலிருந்து எழுந்ததாகும். 1902இன் தொடக்கத்தில்மார்க்சிச தத்துவவியலாளர் ரூடோல்ஃப் ஹில்பெர்டிங், "கூர்மை அடைந்துவரும் உலகச் சந்தைக்கான போராட்டம் முதலாளித்துவ தேசங்களினது வெளியுறவு கொள்கைகளில் விளைவுகளைக் காட்டாமல் இருக்க முடியாது,” என்று எச்சரித்தார். “ஆயுத தளவாடங்களை அதிகரிப்பது,கடற்படைகளின் வளர்ச்சிஉள்நாட்டு பிற்போக்குத்தனம்வன்முறை மற்றும் வெளியுறவுகளில் சமாதானத்தின் மீது எச்சரிக்கை விடுத்தல்,இவையனைத்தும் முதலாளித்துவ வர்த்தக கொள்கையின் புதிய கட்டத்திற்கு அவசியமான விளைவுகளாகும்,” என்று குறிப்பிட்டார். [ரிச்சார்ட் பிடே மற்றும் டானியல் கெய்டோவினால் திருத்தம் பார்க்கப்பட்டDiscovering Imperialism: Social Democracy to World War I, (சிகாகோ, 2011), பக்கம். 348-49,நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது]
அந்த தசாப்தத்தின் ஓட்டத்தில்ஏகாதிபத்தியத்தின் பேரழிவுகரமான தாக்கங்கள் மேலும் மேலும் வெளிப்படையாக வெளிப்பட்டு வந்த நிலையில்,யுத்த எதிர்ப்பு போராட்டம் இரண்டாம் அகிலத்தின் பணிகளின் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. 1907இல் ஸ்ருட்கார்டில் இரண்டாம் அகிலம் அதன் மாநாட்டில் காலனித்துவத்தைப் பகிரங்கமாக கண்டித்ததுஅது"அடிமைத்தனம்பலவந்த உழைப்புஅல்லது காலனித்துவ பிராந்தியங்களின் சொந்த மக்களை நிர்மூலமாக்குதல் இவைகளுக்கே இட்டு செல்லும்.நாகரீகப்படுத்தும் நோக்கத்திற்கு சேவை செய்வதற்காக என்று வாதிடும் முதலாளித்துவ சமூகத்தின் வாதங்கள்அபகரிப்பதற்கும் சுரண்டுவதற்குமான அதன் வேட்கைக்கு ஒரு போலிக்காரணமே அல்லாது வேறொன்றுமில்லை,”என்று அறிவித்தது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே ஆதாரத்திலிருந்துபக்கம். 28]
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1912இல் பாசிலில் அதன் மாநாட்டில் இரண்டாம் அகிலம் பிரசுரித்த ஒரு அறிக்கையில் பின்வருமாறு அறிவித்தது:
ஒரு யுத்தம் வெடிப்பதற்கு அச்சுறுத்துகிறதென்றால்சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கமும் மற்றும் அவற்றின் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் அவர்கள் மிக மிக பயனுள்ளதாக கருதும் வழிவகைகளைக் கொண்டு யுத்தம் வெடிப்பதை தடுக்க எல்லா முயற்சியையும் முன்னெடுப்பது அவர்களின் கடமையாகும்... எவ்வாறாயினும் யுத்தம் வெடித்தே ஆகுமென்றால் அதை விரைவாக முடிவுகட்டுவதற்கு சாதகமாக தலையீடு செய்வதும்அவர்களின் முழு சக்தியைப் பிரயோகித்து யுத்தத்தால் தோற்றுவிக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி மக்களை எழுச்சியுற செய்வதும் மற்றும் அதன் மூலமாக முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வீழ்ச்சிக்கு வித்திடுவதும் அவர்களின் கடமையாகும்.
ஆனால் அதற்குப் பின்னர் இரண்டுக்கும் குறைவான காலத்தில் யுத்தம் வெடித்த போதுஇரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் அவர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட பொறுப்பைத் கைத்துறந்தார்கள்ஆகஸ்ட் 4, 1914இல் அகிலத்தில் மிகவும் பெரியதும்செல்வாக்கு மிக்க பிரிவாக விளங்கிய ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) யுத்தம் நடத்த உதவியாக,அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க வாக்களித்ததுஇந்த அரசியல் துரோக நடவடிக்கையானது ஒரு புரட்சிகர சக்தியாக இருந்த இரண்டாம் அகிலத்தின் முடிவைக் குறித்ததுஒரு புரட்சிகர அகிலத்தை மறுகட்டுமானம் செய்யும் வேலையானதுதேசிய ஆளும் வர்க்கங்களிடமும் மற்றும் ஏகாதிபத்தியதிடமும் இரண்டாம் அகிலம் மண்டியிட்டதை எதிர்த்தவர்கள் மீது விழுந்ததுஅந்த போராட்டத்தில் விளாடிமீர் லெனின் முக்கிய பாத்திரம் வகித்தார்அவரது யுத்த எதிர்ப்பும்சோசலிச சர்வதேசியவாதத்திற்கான பாதுகாப்பும் அக்டோபர் 1917இல் ரஷ்யாவில் சோசலிச புரட்சியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
யுத்தம் வெடிப்பதற்கு காரணமான தங்களின் சொந்த அரசாங்கங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்து யாரெல்லாம் அவர்களின் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தினார்களோ அத்தகைய இரண்டாம் அகிலத்தவர்களுக்கு எதிரான எதிர்ப்பில்லெனின் அறிவிக்கையில்யுத்தம் ஏகாதிபத்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்திலிருந்து வளர்ந்து வந்ததாகும்அதற்கு எல்லா அரசாங்கங்களும் குற்றவாளிகளாகின்றன என்று அறிவித்தார்அதற்குப் பிந்தைய ஆய்வுகள் லெனினின் குற்றப்பத்திரிகையை நிரூபணம் செய்தன.ஒவ்வொரு அரசாங்கமும் அதன் சொந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்க தீர்க்கமாக இருந்தனஒரு வரலாற்றாளர் எழுதியதைப் போல, “நடைமுறையில் அவர்கள் அனைவரையும் பொறுத்த வரையில்யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தமை ஒரு படுமோசமான முடிவாக இருக்கவில்லை.” [டேவிட் ஜிஹேர்மான் எழுதியஐரோப்பாவின் ஆயுதமேந்தலும்முதலாம் உலக யுத்தத்திற்கு ஆயத்தமாதலும் எனும் நூலில் இருந்து, (பிரின்ஸ்டன், 1996), பக்கம். 226]
அந்த உலக யுத்தம் தவறான கொள்கையால் எதிர்பாராமல் விளைந்த ஒரு விபத்தல்லஅது முதலாளித்துவ அமைப்புமுறையின் மற்றும் தேசிய அரசு அமைப்புமுறையின் முரண்பாடுகளில் இருந்தும் தவிர்க்க முடியாமல் எழுந்ததாகும்அந்த யுத்தம் தொடங்கிய பின்னர் வெகு விரைவிலேயே,இரண்டாம் அகிலத்தின் காட்டிகொடுப்புக்கு எதிராக இருந்த மற்றொரு புரட்சிகர எதிர்ப்பாளர்லியோன் டிரொட்ஸ்கிஅந்த யுத்தத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை விவரித்தார்:
இந்த யுத்தம் தேசிய அரசுகளின் வீழ்ச்சியை பறைசாற்றுகிறதுஇருப்பினும் அதேவேளையில் முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையின் வீழ்ச்சியையும் பறைசாற்றுகிறது.
1914 யுத்தமானது, அதன் சொந்த உள் முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையின் வரலாற்றில் மிகவும் பிரமாண்டமான உடைவாகும்.
ஆனால் பொருளாதார அமைப்புமுறையின் முரண்பாடுகள் யுத்தத்தில் மட்டுமே வெளிப்பாட்டைக் காண்பதில்லைஉலக முதலாளித்துவ நெருக்கடியின் மற்றொரு விளைவையும் ட்ரொட்ஸ்கி முன்கணித்தார்:
முதலாளித்துவம், ஒரு புதிய சோசலிச பொருளாதார அமைப்புமுறைக்கு சடரீதியிலான நிலைமைகளை உருவாக்கி உள்ளதுஏகாதிபத்தியம்,முதலாளித்துவ தேசங்களை வரலாற்று ரீதியிலான குழப்பங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. 1914இன் யுத்தம் பாட்டாளி வர்க்கத்தை பலவந்தமான முறையில் புரட்சிகரப் பாதைக்கு வர வலியுறுத்துவதன் மூலமாகஇந்த குழப்பங்களில் இருந்து வெளி வருவதற்கான வழியைக் காட்டுகிறது. [யுத்தமும் அகிலமும் (கொழும்பு, 1971), பக்கம். Vii-viii]
சாரயேவோ சம்பவத்திற்குப் பின்னர் ஒரு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன.ஒரு நூற்றாண்டு காலபோக்கில்பத்து மில்லியன் கணக்கான உயிர்களை விலையாக கொடுத்து மனிதகுலம் இரண்டு பேரழிவுகரமான உலக யுத்தங்களைக் கடந்து வந்திருக்கிறதுஇரண்டாம் உலக யுத்தம் முடிந்ததில் இருந்து ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட எண்ணிலடங்கா உள்நாட்டு யுத்தங்கள் இன்னும் கூடுதலாக பத்து மில்லியன் கணக்கானவர்களை விலையாக எடுத்திருக்கின்றனஇருந்தும்இப்போது மற்றொரு பூகோளம் தழுவிய மோதலுக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
மனிதகுலத்தால் மற்றொரு உலகப் போரை தாங்க முடியாதுஅது தவிர்க்கவியலாமல் அணுஆயுதங்களோடு நடத்தப்படும்அதுபோன்றவொரு பேரழிவைத் தடுத்தாக வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுஏகாதிபத்தியம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை எடுக்க உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக இந்த நினைவாண்டை அனுசரிக்கிறது.
David North
28 June 2014
http://www.wsws.org/tamil/articles/2014/june/140630_oneh.shtml

Friday, 30 May 2014

இந்திய தேர்தல்களில் ஸ்ராலினிஸ்டுகள் படுதோல்வி அடைந்தனர்

Stalinists suffer debacle in Indian elections

இந்தியாவின் இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிறியதும், பழமையானதுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சமீபத்திய இந்திய பொது தேர்தலில் ஒரு அவமானகரமான தோல்வியை அடைந்தன  அவர்களின் முன்னாள் பங்காளியான பெரு வணிக காங்கிரஸ் கட்சியும் அதே போன்ற ஒரு தோல்வியை அடைந்தது.
ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி அது போட்டியிட்ட பாதிக்கும் அதிகமான இடங்களில் தோல்வியுற்றதோடு, தேசிய தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதன் வாக்குகளில் கூர்மையான வீழ்ச்சியைக் கண்டன.
2004இல் இடது முன்னணி 60 இடங்களுக்கும் மேல் கைப்பற்றியதோடு, 7.7 சதவீத வாக்கு விகிதத்தைப் பெற்றது, ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் அது வெறும் 12இடங்களோடு, 4.5 சதவீத வாக்கு விகிதங்களைப் பெற்றுள்ளது.
1952இல் இருந்து ஒவ்வொரு இந்திய நாடாளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கீழ்சபையான இந்த மக்களவையில் ஒரேயொரு இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) 9 மக்களவை இடங்களை மட்டுமே பெற்றுள்ளதுஇது ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளில் ஒன்றாக அதன் அந்தஸ்தைத் தக்க வைக்கவும் கூட போதுமானதல்ல.
இடது முன்னணியின் எஞ்சியிருக்கும் ஒரு டஜன் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்டு பேர் கேரளாவிலிருந்து வருகின்றனர், இரண்டு பேர் ஒரு சிறிய பெரிதும் கிராமப்புற மாநிலமான திரிபுராவில் இருந்தும், இறுதியாக இரண்டு பேர் மேற்கு வங்காளத்திலிருந்தும் வருகின்றனர். இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை மிகுந்த மாநிலமான மேற்கு வங்காளம்2011இல் முடிவுக்கு வரும் வரையில் தொடர்ந்து 34 ஆண்டுகளாக சிபிஎம்-தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்பட்டது. 2009தேசிய தேர்தலில், மேற்கு வங்காளத்திலிருந்து CPMஇன் ஒன்பது மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், ஒட்டுமொத்தமாக இடது முன்னணி15 உறுப்பினர்களை அங்கே வென்றிருந்தது.
சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டுமே 2009 உடன் ஒப்பிட்டாலே கூட அதன் வாக்குகளில் ஒரு செங்குத்தான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. 2009 தேர்தலில் 5.33சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்திருந்த சிபிஎம்-இன் வாக்குகள் 2014இல் 3.2சதவீதமாக ஆனது, அதேவேளையில் சிபிஐ-இன் வாக்குகள் 1.43சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வலதுசாரி காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான பாரிய எதிர்ப்பால் ஊக்குவிக்கப்பட்டு இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அதிகாரத்தில் ஏற இருக்கின்ற நிலையில், தேர்தல்களில் அவர்களின் அதிர்ச்சியூட்டும் தோல்வியால் வெளிப்படையாக அதிர்ந்து போயுள்ள ஸ்ராலினிஸ்டுகள் இந்த வாரம் வரையில் அடுத்து கூறுவதற்கு ஒன்றும் இல்லாமல் நிற்கின்றனர்.
அவர்கள் கூறிய ஏதோ சில கருத்துக்களும் பிஜேபி அதிகாரத்திற்கு வர பாதை அமைத்துக் கொடுத்ததில் இருக்கும் அவர்களின் சொந்த அரசியல் பொறுப்பை மூடி மறைப்பதை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தது.
CPI இன் உத்தியோகபூர்வ வலைத் தளம், கடைசியாக இந்தியாவின் ஒன்பது-கட்ட தேர்தல்களின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முந்தைய நாளான மே15இல் தான் கடைசியாக இடுகையிடப்பட்டு இருந்தது.
சிபிஎம், அதன் பங்கிற்கு, கடந்த ஞாயிறன்று அதன் ஒரு பொலிட்பீரோ கூட்டத்திற்குப் பின்னர் ஒரு சுருக்கமான பத்திரிகை செய்தியை பிரசுரித்திருந்தது. "கட்சிக்கும் இடதிற்கும் மோசமான தேர்தல் முடிவுகளைக் கொண்டு வந்த பல்வேறு காரணிகளை ஆய்வு செய்தது உட்பட சிபிஎம் தலைமை "தேர்தல் மீதான ஒரு பூர்வாங்க ஆய்வை" மேற்கொண்டதாக அந்த செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது, ஆனால் அவர்கள் விவாதத்தின் சாரத்தைக் குறித்த ஒரு சிறிய துணுக்கைக் கூட அளிக்கவில்லை.
சிபிஎம் பொது செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் சிபிஎம் ஆங்கில மொழி வாரயிதழான People’s Democracy இன்னும் சற்று அதிகமாய் வரவிருப்பதுபற்றி சிலவற்றை குறிப்பிடுகிறார்கள்.
விண்ணை முட்டும் உணவு விலைகள், பாரிய வேலையின்மை, பரவி வரும் வறுமை மற்றும் பரந்த ஊழல் ஆகியவற்றால் காங்கிரஸ் அரசாங்கம் மீதான பாரிய கோபத்திலிருந்து பிஜேபி ஆதாயமடைந்தது என்ற வெளிப்படையான புள்ளியை அவர்கள் குறிப்பிடுகின்றனர். “மக்களின் அதிருப்தி பிஜேபி-ஆல் வெற்றிகரமாக சுரண்டப்பட்டது,” என்று People’s Democracy குறிப்பிட்டது. காரத்தின் கருத்துப்படி, காங்கிரஸிற்கு எதிரான ஒரு பாரிய "எதிர்ப்பு வாக்குகளால்" பிஜேபி ஆதாயமடைந்தது.
ஆனால் இது, இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியான காங்கிரஸ் மீதான மக்கள் கோபத்திற்கு ஸ்ராலினிஸ்டுகளால் ஏன் முறையிட முடியாமல் போனது? என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகிறது.
இந்த தர்மசங்கடமான கேள்வியைத் தவிர்க்க, சிபிஎம் அனைத்து விதமான அற்பத்தனங்களையும், இரண்டாந்தர பிரச்சினைகளையும் மற்றும் தந்திரங்களை உபயோகிக்கிறது. பெருநிறுவன ஊடகங்கள் தீவிரமாக BJPஐ ஊக்குவித்ததாகPeople’s Democracy குறை கூறுகிறது. சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியால் பின்பற்றப்பட்ட "முதலீட்டாளர்-சார்பு" கொள்கைகள் மீதான மக்கள் கோபத்தைச் சுரண்டி 2011இல் மேற்கு வங்காளத்தில் அதிகாரத்திற்கு வர முடிந்திருந்த, வலதுசாரி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வாக்குசாவடிகளைப் பரந்தளவில் கைப்பற்றுவதில் ஈடுபட்டதாக காரத் குற்றஞ்சாட்டுகிறார். காங்கிரஸ் "ஒரு பயனற்ற பிரச்சாரத்தை" நடத்தியதோடு, “அதன் சொந்த காரியாளர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களைப் பின்தொடரவும் கூட தவறியது" என்று People’s Democracy புலம்புகிறது.
இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மிகச் சரியாக ஸ்ராலினிஸ்டுகளை ஒரு புரட்சிகர எதிர்ப்பாக அல்ல, ஒரு ஊழல் கட்சியாக,பெரு வணிக ஆதரவிலான அரசியல் ஸ்தாபகத்தின் கட்சியாக கண்டது. கடந்த கால் நூற்றாண்டில், சமூக செலவினங்களை வெட்டிய, உள்கட்டமைப்பைத் தனியார்மயமாக்கிய, பெரு வணிகங்களுக்கு பாரிய வரி மற்றும் நில விட்டுக்கொடுப்புகளை வழங்கிய, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்த, மற்றும் அல்லது உழைக்கும் மக்களை தாக்கிய அரசாங்கங்களானஉலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு உழைப்பு உற்பத்தி மையமாக மாற்றிய இந்திய முதலாளித்துவத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ள பல வலதுசாரி அரசாங்கங்களுக்கு அவர்கள் தொடர்ச்சியாக முட்டுக் கொடுத்துள்ளனர்.
மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதன் அரசாங்கங்களை ஸ்தாபித்திருந்த இடது முன்னணி அங்கேயும் கூட, அது எதை"முதலீட்டாளர் சார்பு" கொள்கைகள் என்று வெளிப்படையாக வரையறைப்படுத்தியதோ அதே கொள்கைகளைப் பின்பற்றியது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையில் வேலைநிறுத்தங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் பெரு வணிக திட்டங்களுக்கு நிலங்களை அபகரிக்கையில் எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பை ஒடுக்க பொலிஸ் மற்றும் அடியாட்களைக் கொண்டு வன்முறையைப் பயன்படுத்தியமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.
அனைத்திற்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சி செலுத்தும் ஹரியானாவில் உள்ள மாருதி சுஜூகி மற்றும் தமிழ்நாட்டில் ஹூண்டாய், பாக்ஸ்கான், மற்றும் BYDஆகிய ஆலைகளில் எழுந்த போர்குணமிக்க வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி, ஸ்ராலினிஸ்டுகள் அவர்களோடு இணைந்திருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இடது முன்னணியைக் கொண்டு, பூகோளரீதியில் இணைக்கப்பட்டுள்ள இந்தியாவின் புதிய தொழில்துறைகளில் நிலவும் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சவாலையும் ஒடுக்க, தொழிலாள வர்க்கத்தின் மீது மிஞ்சி இருந்த அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி உள்ளனர்.
ஏகாதிபத்திய மேலாதிக்க உலக முதலாளித்துவ பொருளாதாரத்தோடு முழுமையாக ஒருங்கிணைப்பதற்கு ஏற்றாற் போல், அரசு-தலைமையிலான பொருளாதார வளர்ச்சியைக் கைவிட்டு, 1991 மற்றும் 1996க்கு இடையே இந்திய முதலாளித்துவ கொள்கையில் ஒரு பிரதான மூலோபாய திருப்பத்தை நடத்திய நரசிம்ம ராவ்வின் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் ஆதரித்தார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான UPAக்கு முட்டு கொடுப்பதில் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியின் பாத்திரம் இதையும் விட வெளிப்படையாக இருந்தது. 2004இல், இடது அதற்கு முந்தைய காலத்தை விட சிறந்த தேர்தல் வெற்றியை பெற்றது, ஸ்ராலினிஸ்டுகள் சரியான நேரத்தில் அவர்களின் விரிவடைந்திருந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை காங்கிரஸ் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சேவையில் ஈடுபடுத்தினார்கள்.
BJPக்கும் மற்றும் காங்கிரஸ் மேலாதிக்க UPAக்குள் காங்கிரஸிற்கும் எதிரானவையாக காட்டிக் கொண்ட பல சிறிய கட்சிகளை ஒன்று சேர்த்து கட்டி வைப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்கள், பின்னர்UPA இன் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை (Common Minimum Program – CMP)எழுதுவதில் பெரிதும் பின்புலத்தில் வேலை செய்தது. UPAஇன் முதல் பதவிக் காலத்திய வெளி வேடத்திற்குரிய வேலைத்திட்டமான CMP,ஸ்ராலினிஸ்டுகளின் ஆசிர்வாதத்தோடு, “மனிதத்தன்மையுடனான சீர்திருத்தத்தை" அது பின்தொடரும் என்ற பிற்போக்குத்தனமான பொய்யை ஊக்குவித்தது  அது இந்தியாவிற்குள் அன்னிய மூலதனத்தை இழுக்கும் முதலாளித்துவத்தின் உந்துதலோடு, இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் தேவைகளை இணங்குவிக்கிறது.
ஸ்ராலினிஸ்டுகளுக்கு UPA அரசாங்கத்திற்குள் கேபினெட் இடங்களை அளித்து பெருமைப்படுத்த காங்கிரஸ் ஆர்வத்தோடு இருந்தது. ஆனால் சுதந்திரமான வேஷத்தைப் பேணி காப்பது தொழிலாள வர்க்கத்தைக் கட்டுக்குள் வைக்க உகந்ததாக இருக்குமென கணக்கிட்டு, சிபிஎம் அதை நிராகரித்தது. இருந்த போதினும், காங்கிரஸை அதிகாரத்தில் வைப்பதற்கு அதன் வாக்குறுதி அளித்திருந்ததோடு, UPAஇன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புறுதி ஏற்றிருந்ததால்,அதன் தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சேட்டர்ஜியை மக்களவை அவைத்தலைவராக அமர்த்த சிபிஎம் உடன்பட்டது  பாரம்பரியமாக இந்த பதவி அரசாங்கத்தில் இருக்கும் ஒரு உறுப்பினருக்கு ஒதுக்கப்படுவதாகும்.
அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில், ஸ்ராலினிஸ்டுகள் காங்கிரஸின் மிக முக்கிய பங்காளியாக இருந்தனர்; ஏனென்றால் அவர்கள் தான் UPAஇல் பெரும் எண்ணிக்கையில் இருந்த மிகப் பெரிய நாடாளுமன்ற கட்சியாக இருந்தார்கள்,ஆனால் மோசடிகள் மற்றும் காட்டிகொடுப்புகளுக்கு இடையிலும், இடதின் ஒரு கட்சியாக, தொழிலாளர் வர்க்கத்தின் மற்றும் நற்சான்றுகளின் அடித்தளத்தை அவர்கள் மட்டுமே கொண்டிருந்ததால், அவர்கள் மிக மிக முக்கியமானவர்களாக இருந்தார்கள்.
UPA அதற்கு முன்னர் பதவியில் இருந்த பிஜேபி-தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளில் இருந்து வெகு சிறிய வேறுபாடுகளோடு பெரு வணிகம் மற்றும் அமெரிக்க-ஆதரவிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்ததை ஸ்ராலினிஸ்டுகள் ஏற்று கொண்டதோடு, அரசாங்கத்திற்கு தொடர்ந்து முட்டு கொடுத்து வந்தனர். அது இந்து வகுப்புவாத BJPக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பதாகவும், "மக்கள்-சார்பு" கொள்கைகளை நடைமுறைப்படுத்த அதற்கு அழுத்த அளிக்க முடியுமென்றும் அவர்கள் வாதிட்டார்கள்.
2008 வசந்தகாலத்தில் நடந்த CPMஇன் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாட்டில், அது குறைந்தபட்சம் அடுத்த 2009 தேர்தல் வரையிலாவது காங்கிரஸ் தலைமையிலான UPAஐ அதிகாரத்தில் நிலைக்க வைக்க அதன் விருப்பத்தை வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதன் பின்னர் விரைவிலேயே காங்கிரஸ் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு,வாஷிங்டனுடன் ஒரு "பூகோள மூலோபாய கூட்டுறவை" ஏற்படுத்தியோடு,ஸ்ராலினிஸ்டுகளை நடைமுறையில் UPAஇல் இருந்து கழற்றிவிட்டது.
ஸ்ராலினிஸ்டுகள் இந்த புள்ளியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது போன்ற ஒரு காட்சியை நடத்தினார்கள். ஆனால் இந்திய சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு உண்மையான ஏகாதிபத்திய-விரோத கொள்கைக்கும் அவர்களின் எதிர்ப்புக்கும் அங்கே எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. அதற்கு மாறாக அது இந்திய முதலாளித்துவத்தின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மாற்று மூலோபாய நிலைப்புள்ளியிலிருந்து செய்யப்பட்டதுஅது "பன்முக துருவமுனைப்பட்ட" உலக முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாப்பதை மற்றும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உட்பட வல்லரசுகளுடன் உபாயங்கள் செய்வதை அடிப்படையாக கொண்டதாகும். இதே அடிப்படையில் முன்னதாக ஸ்ராலினிஸ்டுகள் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக 2001இல் அப்போதைய பிஜேபி-தலைமையிலான இந்திய அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்திருந்தனர்.
UPAஇல் இருந்து கழற்றிவிடப்பட்ட பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் முன்னதாக காங்கிரஸ், பிஜேபி அல்லது சில சந்தர்ப்பங்களில் இரண்டினோடும் சேர்ந்திருந்த பல்வேறு வலதுசாரி பிராந்திய மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகளை உள்ளடக்கிய "பிஜேபி-விரோத, காங்கிரஸ்-விரோத"வெளிவேடத்திலான மூன்றாம் அணி என்பதை ஊக்குவிக்க திரும்பினர்.
2009 தேர்தல்களில், அவர்கள் இரண்டு முக்கிய இந்திய முதலாளித்துவ தேசிய கட்சிகளுக்கு ஒரு "மதசார்பற்ற,” “முற்போக்கான" மாற்றீடாக இத்தகைய பிற்போக்கான கட்சிகளைப் புகழ்ந்துரைத்து, தமிழ்நாட்டை மையமாக கொண்ட அஇஅதிமுக மற்றும் ஒடிசாவை மையமாக கொண்ட BJD போன்ற வலதுசாரி கட்சிகளோடு அணிதிரண்டனர்.
NDAஇல் இருந்து ஒரு கட்சி விலகுவதாக அறிவித்தால் போதும்,ஸ்ராலினிஸ்டுகள் அதை "மதசார்பின்மையின்" பாதுகாவலனாக தம்பட்டம் அடித்தனர். இது பிஜேபி-தலைமையிலான NDAஇல் இரண்டாவது மிகப் பெரிய நீண்டகால கூட்டாளியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம், பின்னர் பிஜேபி உடனான அதன் 17 ஆண்டுகால கூட்டுறவை 2013இல் முடித்துக் கொள்வதாக அறிவித்த உடனேயே அதனுடன் கூட்டணி வைக்க அவர்கள் ஓடியதிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டது.
காங்கிரஸ் மற்றும் பிஜேபி உடன் தேர்தலுக்குப் பிந்தைய எதிர்பார்த்திருந்த பேரங்களில் தங்களின் கரங்களைச் சுதந்திரமாக வைத்திருப்பதற்காக,எதிர்காலத்தில் வந்து இணைய வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் அணி கூட்டாளிகள் அனைவரும் 2014 தேர்தல் ஓட்டத்தில் ஸ்ராலினிஸ்டுகளை உதறி தள்ளிய பின்னரும் கூட, தேர்தலுக்குப் பின்னர் இடது ஆதரவிலான மூன்றாம் அணியில் அவர்கள் ஒரு இடத்தைப் பெறுவார்கள் என்று தொடர்ந்து ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்தி வந்தார்கள்.
ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தை நிராகரித்து, இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தி, ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் அவற்றின் வரலாறு முழுவதிலும் தொழிலாளர் வர்க்கத்தை இந்திய முதலாளித்துவத்திற்கு திட்டமிட்டு அடிபணிய செய்துள்ளனர். 1991க்கு முந்தைய காலக்கட்டத்தில் அவர்கள், சோசலிசம் இந்தியாவின் வரலாற்று நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று வலியுறுத்தி இதை நியாயப்படுத்தினார்கள்; நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனத்தை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் முதலாளித்துவத்தின் "முற்போக்கு" பிரிவுகளைத் தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டுமென அவர்கள் வாதிட்டார்கள்.
1917 ரஷ்ய புரட்சி மற்றும் தெற்காசியாவில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு மேலெழுச்சியை காங்கிரஸ் ஒடுக்கியமை மற்றும் ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து இந்தியா என இந்திய துணை கண்டத்தை பிரிப்பதைக் கண்டும் காணாதது போல இருந்தமை உட்பட 20ஆம் நூற்றாண்டின் ஒட்டு வரலாறும் என்னவாக இருந்தாலும் அது, காலங்கடந்து அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளின் சமகாலத்திய சகாப்தம் ஜனநாயக புரட்சியின் அடிப்படை பணிகளை முடிக்க இலாயகற்று இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது. ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரம், தேசிய ஐக்கியம்,நிலபிரபுத்துவம் மற்றும் ஜாதியவாதத்தை ஒழிப்பது போன்ற இந்த பணிகளை,தொழிலாளர் வர்க்கம் தலைமையிலான ஒரு சோசலிச புரட்சி மட்டுமே நிறைவேற்ற முடியும், அது மட்டுமே நிறைவேற்றும்.
உலகெங்கிலும் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுந்து நடத்திய தாக்குதலின் பாகமாக, 1970களின் தொடக்கத்தில் இந்தியாவில் வெடித்த முதிராத புரட்சிகர குணாம்சம் கொண்ட போராட்டங்களின் போது, ஸ்ராலினிஸ்டுகள் அவர்களை முதலாளித்துவத்தின் பின்னால் அடைத்து வைக்க முனைந்தார்கள். காங்கிரஸ் கட்சியுடனான ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குள் சிபிஐ நுழைந்ததோடு, இந்திரா காந்தியின் இரண்டு ஆண்டுகால நெருக்கடி நிலையை ஆதரித்தது, அதன் கீழ் அடிப்படை மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, பத்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும், இடதுசாரிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையில், சிபிஎம் காங்கிரஸ்-விரோதமான முதலாளித்துவ ஜனதா கட்சியுடன் (BJPக்கு முன்னோடி அமைப்பான ஜன் சங் இந்த ஜனதா கட்சி உடன் ஒரு முக்கிய பங்காளியாக இருந்தது) தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டி போட்டது.
கடந்த கால் நூற்றாண்டாக மற்றும் மிக நெருக்கமாக முதலாளித்துவத்துடன் இருந்து வந்துள்ள ஸ்ராலினிஸ்டுகள், நவ-தாராளவாத சீர்திருத்தங்கள் மற்றும் அமெரிக்க-ஆதரவிலான கொள்கைகளுக்குப் பகிரங்கமாக பொறுப்பேற்ற அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து, இன்னும் மேலதிகமாக வலதிற்கு நகர்ந்துள்ளனர். இவ்வாறு செய்ததன் மூலமாக அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்து மேலாதிக்க BJPஇன் அச்சுறுத்தலைத் தூண்டி உள்ளனர்,அதேவேளையில் மதசார்பின்மையின் பாதுகாப்பு அரண்களாக இல்லை எனினும், அதன் பாதுகாப்பிற்காக என்ற பெயரில் காங்கிரஸையும், ஜாதிய-அடிப்படையிலான மற்றும் பிராந்திய வகுப்புவாத கட்சிகளைக் கூட்டாளிகளாக கொண்ட ஒரு அணியையும் புகழ்ந்துரைத்து வந்துள்ளனர்.
தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்துடன் கட்டி வைக்கும் இந்த கொள்கையின் இறுதி முடிவு என்னவென்றால், நவ-தாராளவாத மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் வேறுவிதத்தில் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தைப் பலப்படுத்துவதில் ஆளும் வர்க்கத்தின் கரங்களை சுதந்திரமாக வைத்திருக்க செய்வதாகும்.
காங்கிரஸ் மற்றும் அஇஅதிமுக போன்ற கட்சிகள் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிராக போராட கருவிகளாக இருக்க முடியுமென்ற வாதம் முற்றிலும் அபத்தமானதாகும். முதலாளித்துவ ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் இந்து வலதை ஏற்றுக் கொண்டுள்ளன அல்லது அதை கண்டுங்காணாதது போல இருந்துள்ளன, அத்தோடு அவை யாருக்காக பேசுகின்றனவோ முதலாளித்துவத்தின் அந்தந்த கன்னைகளின் நலன்களை முன்னெடுக்க மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தி வைக்க வகுப்புவாத மற்றும் ஜாதிய முறையீடுகளைப் பயன்படுத்துகின்றன.
இன்னும் அதிகளவில் அடிப்படையாக, இதுவரையில் தொழிலாள வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க மற்றும் உழைப்பாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்த ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் இருந்து அது தடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சமூகரீதியில் கொள்ளி வைக்கும் முதலாளித்துவ பொருளாதார "சீர்திருத்தங்கள்"நெருக்கடியை, நிலைநோக்கு பிறழ்ச்சியை உருவாக்கி வருவதோடு, சமூக பிற்போக்குத்தனம் எதில் ஊறி போயுள்ளதோ அவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை இழக்கச் செய்கிறது.
ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தனமான அரசியலின் ஒரு வரலாற்றுரீதியிலான இருப்புநிலை குறிப்பை எடுக்க இந்திய தொழிலாளர்கள் மற்றும் சோசலிச-சிந்தனை கொண்ட புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இது சரியான நேரமாகும். அவர்கள் ரஷ்ய புரட்சியின் சர்வதேச பாரம்பரியத்தின் விளைபொருட்கள் அல்ல, மாறாக அவர்கள் சோவியத் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்து இறுதியாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்த ஸ்ராலின் தலைமையின் கீழ் இருந்த தனிச்சலுகை படைத்த அதிகாரத்துவத்தால் பேணி வளர்க்கப்பட்ட தேசியவாத-சந்தர்ப்பவாத சித்தாந்தங்களின் விளைபொருட்கள் ஆவார்கள்.
நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பிரிவாக இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பாரிய புதிய கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்திய தொழிலாளர்கள் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க எந்திரங்கள் உட்பட முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து தங்களைத் தாங்களே அறுத்துக் கொண்டுசோசலிசத்திற்கான போராட்டத்தில் தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் அவர்களைச் சுற்றி உள்ள உழைப்பாளர்களை அணி திரட்ட வேண்டும்.
பரந்த பெரும்பான்மையை வறுமைக்குள் தள்ளுவதன் மூலமாக மற்றும் கொடூர சுரண்டல் மூலமாக இந்திய முதலாளித்துவத்தை "அபிவிருத்தி"செய்வதற்கான முதலாளித்துவத்தின் உந்துதலுக்கு மற்றும் இந்த இரக்கமற்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, மோடியை அது அரவணைத்து கொண்டதில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, வகுப்புவாத பிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைமைகளுக்கு அது திரும்புவதற்கு எதிராக இது மட்டுமே ஒரே ஆணித்தரமான பதிலாக உள்ளது.
 http://www.wsws.org/tamil/articles/2014/may/140528_sta.shtml

Thursday, 22 May 2014

இந்தியாவின் திருப்புமுனை தேர்தல்

கடந்த வாரத்தின் இந்திய தேசிய தேர்தலில் இந்து வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அதிகாரத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத படுகொலையை தூண்டிவிட்டதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக இந்தியாவிலும் உண்மையில் சர்வதேச அளவிலும் இழிபெயர் பெற்ற குஜராத் முதல் மந்திரியும், சுய-பாணியிலான இந்து இரும்புமனிதருமான நரேந்திர மோடி பிரதம மந்திரியாகவுள்ளதுடன், அவர் பொருளாதார "வளர்ச்சிக்கு" இட்டுசெல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் விரோத, சுதந்திர-சந்தை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் மற்றும் இந்தியாவை இன்னும் நெருக்கமாக அமெரிக்க வெளியுறவு கொள்கையோடு இணைக்கும் கருவியாக ஏற்று இந்திய மற்றும் சர்வதேச மூலதனம் BJP'ஐ அரவணைத்து உள்ளது. சமூக சேவைகளின் மீது ஆழ்ந்த வெட்டுக்கள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் விலை மானியங்களைக் குறைத்தல்; அரசுடமையான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல்; அன்னிய முதலீடுகள் மீது மிஞ்சி இருக்கும் வரம்புகளை நீக்குதல்; வரிச் சுமையை தொழிலாளர்களுக்கு மாற்றுதல்; மற்றும் வங்கிகளுக்கு பாரிய அரசு உதவிகள் ஆகியவை அந்த கட்சியின் வேலைத்திட்டத்தில் உள்ளடங்கும்.

நூறு மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியை இல்லாதொழிக்கும் திட்டங்களும் இலக்கு வைக்கப்பட்டிருப்பவற்றில் உள்ளடங்கும். வர்க்க போராட்டத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு முழு நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றிருக்கும் முதல் கட்சியாக பிஜேபி உள்ளது என்ற போதினும், இந்திய மக்கள் தீவிரவலதிற்கு மாறியுள்ளனர் என்று பத்திரிகைகள் வாதிடுவது ஒரு மோசடி ஆகும். காங்கிரஸ் கட்சி மற்றும் ஒரு வரலாற்று உடைவினை சந்தித்த இரண்டு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வைத்திருந்த பாரிய நப்பாசைகள் பூர்த்திசெய்யப்படாததால் பிஜேபி அதிலிருந்து ஆதாயமடைந்தது.

சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டுகளில் 13 முறை தேசிய அரசாங்கத்திற்கு தலைமை ஏற்றிருந்த காங்கிரஸ், இப்போது 545 மக்களவை இடங்களில் வெறும் 44 இடங்களைக் கொண்டுள்ளது. இது உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக அங்கீகரிக்கப்பட கூட போதுமான எண்ணிக்கை இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய நாடாளுமன்றத்தில் 60 இடங்களுக்கு மேல் வென்ற ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி, உடனடியாக தம்மை காங்கிரஸிடம் ஒப்படைத்துவிட்டது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் ஒரேயொரு இடம்தான் கிடைத்துள்ளது, மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 9 இடங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் இப்போதும் சரி, எப்போதுமே ஒரு முதலாளித்துவ கட்சியாக இருந்துள்ளது. மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு தலைமையின் கீழ், அது பாரிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தது மற்றும் ஒடுக்கியது. 1947இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் அது ஒரு உடன்பாட்டை எட்டியது, அதன் அடிப்படையில் அந்த துணை கண்டம், மில்லியன் கணக்கானவர்களை உயிரிழிக்க செய்த மற்றும் இடம் பெயர செய்வித்த இந்தியாவின் இன மற்றும் பிரிவினைவாத சமூகங்களுக்கு இடையிலான சண்டைக்கு இடையே, ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இந்தியா என்று வகுப்புவாதரீதியில் பிரிக்கப்பட்டது.

இருந்த போதினும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருந்ததன் காரணமாக, காங்கிரஸ் இந்தியா எங்கிலும் பரந்துபட்ட பல்வேறு இன மற்றும் வகுப்புவாத குழுக்களிடம் ஓரளவிற்கு ஆதரவைப் பெற்றிருந்த ஒரே முதலாளித்துவ கட்சியாக விளங்கியது. அவ்வாறு இருந்தாலுங்கூட, அதை இந்திய முதலாளித்துவத்திடம் இருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபித்திருந்தது. இறக்குமதிக்கான மாற்றீடு மூலமும், பிரதான தொழில்துறைகளை அரசு உடைமையில் வைத்திருந்தமை மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலமாகவும் அது ஏகாதிபத்திய அழுத்தங்களை சமப்படுத்திக்கொள்ள முனைந்தது.

1970களில், இந்த மூலோபாயம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. தொழிலாள வர்க்கத்துடன் கண்மூடித்தனமான மோதலுக்கு வந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம், 1974-75 இரயில்வே துறை வேலை நிறுத்தத்தை நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்தியதோடு, இரண்டு ஆண்டுகள் அவசரகால சட்டம் பிறப்பித்து,  அக்காலகட்டத்தில் மக்கள் சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டன.

1991இன் சோவியத் ஒன்றிய பொறிவில் இருந்து, காங்கிரஸ் இந்திய முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதார கொள்கையில்" முன்னனி பாத்திரம் வகித்துள்ளதோடு, இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக மாற்றியது. 1991-96 வரையிலான நரசிம்ம ராவ்வின் காங்கிரஸ் அரசாங்கம், அன்னிய மூலதனங்களை ஈர்க்க ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி மற்றும் சுதந்திர-சந்தை கொள்கை ஆகியவற்றிற்கு சாதகமாக தேசிய பொருளாதார நெறிமுறைகளை அழித்து, இந்த மாற்றத்தைத் தொடங்கி வைத்தது.

கடந்த தசாப்தத்தின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் சுதந்திர-சந்தை மறுகட்டமைப்பை மேற்கொண்டு விரிவாக்கி, நீட்டித்தது. பிரதம மந்திரி மன்மோகன் சிங் செப்டம்பர் 2012இல் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், மேலதிக அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்திய மக்கள் "அவர்களின் வயிற்றை கட்டுப்படித்திக்கொள்ள வேண்டும்" என்று கூறுமளவிற்குச் சென்றார்.

இந்திய முதலாளித்துவம் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு மலிவு உழைப்பை வழங்கி அதனை அதுவே செல்வ செழிப்பாக்கி கொண்ட நிலையில், காங்கிரஸூம் அமெரிக்கா உடன் அதன் உறவுகளை ஆழப்படுத்தி இருந்தது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா உட்பட பல நாடுகளை வாஷிங்டன் அடுத்தடுத்து ஆக்கிரமித்திருந்த நிலையில், மீண்டும் காங்கிரஸின் தலைமையில், இந்தியா 2000இல் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "உலகளாவிய மூலோபாய கூட்டுறவை" மேற்கொள்ள முனைந்துள்ளது. இந்தியா உடனான அமெரிக்க உறவுகள், சீனாவைத் தனிமைப்படுத்தி "ஆசியாவினை நோக்கி திரும்புதலின்" பாகமாக இருந்துள்ளன.

காங்கிரஸின் பேரழிவுகரமான தோல்வி எதை பிரதிபலிக்கிறது என்றால், இதுபோன்ற கொள்கைகளை ஒரு கால் நூற்றாண்டிற்கு நடைமுறைப்படுத்திய பின்னர், அது இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் மொத்த நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது என்பதையே ஆகும்.

இதற்கு இணையாக ஏற்பட்டுள்ள ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் பொறிவு, ஏதோ சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்ததல்ல. 1930களில் சிபிஐ உருவாக்கப்பட்டதில் இருந்தே, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் எடுத்துக் காட்டப்பட்டதைப் போல, ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சோசலிசத்திற்கான போராட்டத்தை எதிர்த்துள்ளனர். அது மட்டுமின்றி, அவர்கள் தொழிலாளர்களை திட்டமிட்டபடி முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிபணிய செய்தார்கள்.

1991க்கு முன்னர், அவை சோசலிசம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இன்னும் இல்லை என்று வலியுறுத்தினார்கள். "தேசிய ஜனநாயக புரட்சியை" நடத்த அவர்கள் இந்திய முதலாளித்துவத்தின் "முற்போக்கான,” “நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான" அல்லது "ஏகாதிபத்தியத்திற்கு எதிரான" பிரிவுகளிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்தார்கள். 1991க்கு பின்னர் இருந்து, இந்திய முதலாளித்துவம் கூர்மையாக வலதிற்கும், ஏகாதிபத்தியத்தை நோக்கியும் நகர்ந்த போது, ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களோடு வலதை நோக்கி சாய்ந்தார்கள்.

அடுத்தடுத்த அரசாங்கங்கள் சுதந்திர-சந்தை மற்றும் ஏகாதிபத்திய-சார்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள், BJP'ஐ எதிர்க்கிறோம் என்ற பெயரில், முட்டுக் கொடுத்தார்கள்.

சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் தடுத்து, காங்கிரஸ் மற்றும் பல வலதுசாரி ஜாதி-அடிப்படையிலான மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு (இந்த கட்சிகள் அனைத்தும் ஸ்ராலினிஸ்டுகளால் "மதசார்பற்ற இந்தியாவின்" பாதுகாவலர்களாக புகழப்பட்டன) அதை அடிபணிய செய்ததால், காங்கிரஸ் மீதும் மற்றும் ஒரு கால் நூற்றாண்டு கால சந்தை-சார் "சீர்திருத்தம்" மீதும் ஏற்பட்டிருந்த பாரிய வெறுப்பை பிஜேபி சுரண்டிக் கொள்ள சுதந்திரமாக விடப்பட்டது.

இந்தியாவின் பிஜேபி-தலைமையிலான அரசாங்கம் ஆழ்ந்த நெருக்கடியின் ஒரு ஆட்சியாக இருக்கும். அது பாசிச, இந்து-மேலாதிக்கவாத ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பிற்கும், பாதுகாப்பு படைகளின் யுத்தம் நாடும் உட்கூறுகளுக்கும், மற்றும் பெரு வணிகத்தின் மிகவும் பேராசை கொண்ட பிரிவுகளுக்கும் கடமைப் பட்டுள்ளது. மக்கள் விரோத சமூக நிகழ்ச்சி நிரலைத் திணிக்க முயல்கின்ற போதே, அது அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கி திரும்புதலின்" மற்றும் பெருமளவிலான யுத்தத்திற்கான தயாரிப்புகளுக்கு பொறுப்புகளை எடுத்துக்கொண்டு, ஏகாதிபத்தியத்துடன் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் உடன் நெருக்கமான உறவுகளை பின்தொடரும்.

தொழிலாள வர்க்கம் மிகத் தெளிவாக மரணகதியிலான அபாயங்களை முகங்கொடுத்துள்ளது. இருந்தாலும், பிஜேபி வெற்றியும காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிஸ்ட் கட்சிகளின் பொறிவும் வர்க்க போராட்டத்தின் பரந்தளவிலான தீவிரமயமாக்கலுக்கு மட்டுமல்லாது, தொழிலாள வர்க்க அரசியலின் ஒரு அடிப்படை மறுஒழுங்கமைவிற்கும் அறிகுறி காட்டுகிறது.

அதுபோன்ற ஒரு மறுஒழுங்கமைவு, "சுதந்திர கால" முதலாளித்துவ ஆட்சி மற்றும் இந்திய ஸ்ராலினிசம் கவிழ்ந்து போனதன் மீது ஒரு வரலாற்றுரீதியிலான இருப்புநிலை கணக்கை வரைய கோருவதுடன், லியோன் ட்ரொட்ஸ்கியால் விவரிக்கப்பட்ட மற்றும் 1917 ரஷ்ய புரட்சியில் உயிரூட்டப்பட்ட நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய பாரிய கட்சியைக் கட்டுவதும் அவசியமாகின்றது.

துணைக் கண்டத்தின் மக்களை ஐக்கியப்படுத்துவது, ஜாதி ஒடுக்குமுறையை மற்றும் நிலப்பிரபுத்துவத்தைக் இல்லாதொழிப்பது, மற்றும் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை ஆகியவை உட்பட அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக கடமைகளை தீர்க்க முதலாளித்துவம் இலாயக்கற்று இருப்பதை இந்தியாவின் ஒட்டுமொத்த அனுபவமும் எடுத்துகாட்டி உள்ளது. இந்த பணிகளை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும்.

Keith Jones
19 May 2014
http://www.wsws.org/tamil/articles/2014/may/140520_india.shtml