#தமிழ்நாடு ஆளுநர் தனக்களிக்கப்பட்ட பாஜகவின் வேலைத்திட்டத்தை செயற்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் எப்படி அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி தனது பிரிவினைவாத வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதோ அதே வேலைத் திட்டங்களை இந்துமதவாத பாஜக கொஞ்சம் வேகமாக நடைமுறைப்படுத்துகிறது. இவைகள் ஆளும் முதலாளித்துவ கட்சிகளுக்கிடையிலான சன்டைகள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
#திராவிடம், #ஆரியம் என்பதன்மூலம் இந்திய தொழிலாள வர்க்கத்தை இந்திய முதலாளித்துவ வர்க்கம் பிரித்தாள்வதன் மூலம் தனது லாப நோக்கங்களைப் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சன்டைகளுக்கு ஆளும் கட்சிகள்மீதான வெறுப்பில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தைத் திசைதிருப்பும் வேலையை முதலாளித்துவ ஊடகங்கள் பெரிய போராட்டமாக, செய்தியாகக் கனகச்சிதமாகச் செய்துவருகின்றன. தொழிலாள வர்க்கத்தை வெறும் பார்வையாளர்களாகவும் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோலவும் செய்திகளைப் பிரசுரிக்கின்றன.
ஆனால் இந்த மாநில மத்திய ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ நலன்களில் ஒன்றுபட்டு தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தும் தாக்குதல்களைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறைப்படுவதற்கு எந்தக் கட்சிகளும் இங்கில்லை.
இதே ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாகவும் அதன் லாப நோக்கங்களுக்காகக் தொழிலாளர்களை வேலைத் தளத்தில் அடிமைகளாக வைத்திருப்பதற்கும், ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போரில் குண்டுவெடிப்புகளில் பலிக்கடாக்களாக அனுப்புவதற்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகின்றன.
சந்தையில் #தக்காளி விலை அதிகரித்துவிட்டதே என்று புலம்புவதை விட அதைப் போன்று சாமனியர்களுக்கு கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்களின் #அளிப்பு மற்றும் #தேவை ஆகிய காரணிகளைத் தீர்மானிக்கிற முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார அரசியலை தொழிலாளர்கள் தெரிந்துகொள்ளவதற்கும் அதற்கு எதிராகப் போராட எந்தவி முதலாளித்துவ அரசியல் தலையீடும் அற்ற ஒரு #சாமானியர் குழுவையும் கட்ட வேண்டும். சாமானிய மக்களின் மீதான எதிர்ப்புகளைத் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒன்றிணைக்க வேண்டும். உலகத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் பொதுவான ஒன்றாக எல்லா இடங்களிலும் இருக்கின்றன.
தொழிலாள வர்க்கம் தனக்கான அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். லாப நோக்கத்திற்காக உறிஞ்சும் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளித்துவ அமைப்பையும் போர்களற்ற சமூகத்துக்கான சோசலிச அரசையும் உருவாக்கத் தொழிலாள வர்க்கம் தலையிடுவதன் மூலம் மட்டுமே முடியும்.
முதலில் முன்னேறிய தொழிலாள வர்க்கத்தின் தத்துவார்த்த, அரசியல் பிரிவில் இருக்கிறேன் என்பதை தொழிலாள வர்க்கத்தின் நலனுக்காகக் சிந்திப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- தமிழ்சூரியன்
படியுங்கள் wsws.org/ta தொடர்புகொள்ளுங்கள்
#தொழிலாளவர்க்கம் #அரசியல்
Advanced working class can do change the world - முன்னேறிய தொழிலாள வர்க்கத்தால் உலகை மாற்றச்செய்ய முடியும்
Saturday, 19 October 2024
சாமனியர் குழு தேவை!
Subscribe to:
Comments (Atom)