Thursday, 9 January 2014

இந்தியா - மாருதி சுஜூகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கை எதிர்ப்பு போராட்டம் கண்டிக்கிறது


ஒரு நேரடி அறிக்கை

மாருதி சுஜூகி மானேசர் கார் உற்பத்தி ஆலையினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், நிறுவனம், பொலிஸ் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் கூட்டாக அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வேட்டைக்கு எதிராக ஒன்றுதிரள, ஹரியானாவின் குர்காவில் டிசம்பர் 20 மற்றும் 21இல் இரண்டு நாள் தர்ணா  (மறியல்) போராட்டம் நடத்தினர்.
படுகொலை மற்றும் ஏனைய ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது கடந்த பதினாறு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 148தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் செப்டம்பர் 2012இல் நிறுவனம் ஏதேச்சதிகார முறையில் நீக்கிய 2,300 தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்க்கவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அந்த போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பல தொழிலாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். அது 148 தொழிலாளர்கள் மீதான படுகொலை வழக்கு மீண்டும் தொடங்கப்பட்ட அதே நேரத்தோடு சரியாக பொருந்தி இருந்தது. இருந்த போதினும், அதிகாரிகள் வழக்கின் இரண்டாம் நாள் சாட்சிகள் விசாரணையை ஜனவரி 24க்கு தள்ளி வைக்க முடிவெடுத்தனர்.
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஜூகி,அதன் மூர்க்கமான, மலிவு-உழைப்பு வேலையிட ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை நசுக்கும் ஒரு முழு பிரச்சாரத்தை நடத்த, 2012 ஜூலை 18இல் அதன் மானேசர் ஆலையில் நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு தகராறைப் பயன்படுத்தியது. அந்த சம்பவத்தில் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் அவனிஷ் குமார் தேவ் கொல்லப்பட்டார். அந்நிறுவனம் இதில் ஹரியானாவின் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தின் முழு ஆதரவை பெற்றுள்ளது.
நிறுவனத்தின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பட்டியலைப் பயன்படுத்தி,ஹரியானா பொலிஸ் 2012 ஜூலை 18 தகராறைத் தொடர்ந்து வந்த வாரங்களில் ஏறத்தாழ 150 தொழிலாளர்களைக் கைது செய்தது.அப்போதிருந்து அவர்களிடமிருந்து பொய் வாக்குமூலங்களைப் பெற அவர்களை அச்சுறுத்தும் ஒரு முயற்சியில் அடித்து துன்புறுத்தியதோடு சித்திரவதைக்கும் உட்படுத்தியது. (பார்க்கவும்: “Jailed Maruti Suzuki workers subjected to torture”)
மாருதி சுஜூகி தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் (MSWU) ஒட்டுமொத்த தலைமையும் மற்றும் MSWU'இல் தீவிரமாக செயல்பட்டு வந்த பல உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்ட அந்த தொழிலாளர்களில் உள்ளடங்கி இருந்தனர். வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை முற்றுகை போராட்டங்கள் என போர்குணமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட MSWUதொழிற்சங்கம், நிறுவனத்திற்கு தலையாட்டும் ஒரு தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பாக 2011இல் ஒரு சுயாதீன தொழிற்சங்கமாக உருவாக்கப்பட்டதாகும்.
மீண்டும் மாநில அரசாங்கத்தின் உதவியோடு, நிறுவனம் அந்த தகராறை அதன் தொழிலாளர்களை கழித்தொழிப்பதற்கான போலிக்காரணமாகவும் பயன்படுத்தியது.  செப்டம்பர் 2012இல், அது 500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 1,800 ஒப்பந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது.
அதற்கடுத்த 16மாதங்களில், மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவன-அரசு பிரச்சாரம் தொடர்ந்துள்ளது. பெருந்திரளான பொலிஸார் ஒவ்வொரு வேலை நாளிலும் மானேசர் கார் உற்பத்தி ஆலையின் உள்ளே நிறுத்தப்பட்டுள்ளனர். அரசின் கட்டளையின் பேரில், பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை பொலிஸ் மீண்டும் மீண்டும் தாக்கியதோடு அவற்றை சட்டவிரோதமாகவும் அறிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தலைமையும் ஜூலை-ஆகஸ்ட் 2012பொலிஸ் வலையில் சுருட்டப்பட்டதால், MSWU'ஐ முன்னெடுத்து செல்ல உருவாக்கப்பட்ட இடைக்கால தொழிலாளர் கமிட்டியின் ஓர் உறுப்பினர் இமான் கான், டிசம்பர் 17இல், ஏறத்தாழ ஓராண்டிற்கு சிறையில் இருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேச இருந்த நிலையில், வன்முறையைத் தூண்ட தயாரிப்பு செய்து வருகிறார் என்ற போலி வாதத்தின் மீது, கடந்த ஜனவரி 24இல் கைது செய்யப்பட்டார்.
கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக எழும் எவ்வித சவாலையும் அவர்கள் அகற்றுவார்கள் என்பதை பெரு வர்த்தகங்களுக்கு மறு-உத்தரவாதம் வழங்க; கடந்த இரண்டு தசாப்தத்தில் வாகனத்துறை உற்பத்தியின் பிரதான மையமாக எழுந்துள்ள நீண்ட குர்காவ்-மானேசர் தொழிற்சாலை சரகத்தில் உள்ள தொழிலாளர்களையும் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் அவ்விதத்தில் அச்சுறுத்த அரசும், அரசு அதிகாரிகளும் மாருதி சுஜூகி தொழிலாளர்களின் மீது சீரிய தண்டனைகளைச் சுமத்த தீர்க்கமாக உள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு பிணையளிக்க மறுத்த ஹரியானா நீதிமன்ற ஒரு நீதிபதி,பட்டவர்த்தனமாக, "தொழிலாளர் கிளர்ச்சிக்கு அஞ்சி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பண முதலீடு செய்ய அஞ்சக்கூடும்,” என்ற எச்சரிப்போடு அவரது தீர்ப்பை நியாயப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்று திரண்டதில் இருந்து டிசம்பர் 20-21 போராட்டம் தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த குர்காவ் மாவட்ட கமிஷனர் (District Commissioner - DC) அலுவலகத்திற்கு அணி வகுத்து சென்றது. அவர்கள் பின்னர் மாவட்ட கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்தனர். விறைக்கும் அளவிற்கு இருந்த இரவுநேர தட்பவெப்ப நிலைக்கு இடையிலும் பலர் 21ஆம் தேதி மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் பல குடும்ப உறுப்பினர்கள், நீண்ட தூரம் பயணம் செய்து குர்கான் மாவட்ட கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சுஜூகி மோட்டார் சைக்கிள் தொழிலாளர்கள் சங்கம், சுஜூகி பவர் ட்ரைன் இந்தியா தொழிலாளர்கள் சங்கம், RICO தொழிலாளர்கள் சங்கம் -தாரூஹேரா, FCC ரிகோ தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஹோண்டா தொழிலாளர்கள் சங்கம் உட்பட குர்காவ்-மானேசர் தொழிற்சாலை சரகத்தில் இருந்த பல தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறிய பிரதிநிதிகள் குழுவும் அந்த தர்ணாவில்இணைந்து கொண்டன.
மத்திய தொழிலாளர் கூட்டமைப்பு அவர்களின் அக்டோபர் 27போராட்டத்தை ஆதரிக்க தவறியதன் மீதான MSWUஇன் விமர்சனங்களால் குடைந்தெடுக்கப்பட்டதால், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் முறையே இணைந்துள்ள சிஐடியு (இந்திய தொழிற்சங்கங்களுக்கான மையம்) மற்றும் ஏஐடியுசி (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) ஆகிய பிரதான ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்புகளின் மாநில தலைவர்களும் MSWU'இன் தர்ணாவில் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தும் சிஐடியு மாநில தலைவர் சுரேந்தர் சிங் மற்றும் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் அனில் பவார் வீராவேச உரைகளை நிகழ்த்தினர்.
ஆனால் இந்த ஸ்ராலினிச தொழிற்சங்கங்களும் பாராளுமன்ற கட்சிகளும் தான் அரசு-நிறுவன பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் மாருதி சுஜூகி தொழிலாளர்களைத் திட்டமிட்டு தனிமைப்படுத்தி, 2011இல் மானேசர் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்குவதில் பாத்திரம் வகித்திருந்தன. அவர்களோடு ஐக்கியப்பட்டிருப்பதாக உறுதிமொழிகளை உதிர்த்துக் கொண்டே, மாருதி சுஜூகி தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் எவ்வித முயற்சியையும் அவர்கள் எதிர்த்தனர், மேலும் அதற்கு மாறாக அவர்கள் தொழிலாளர்களிடம் அவர்களுக்கு சார்பாக மாருதி சுஜூகி நிர்வாகத்தோடு தலையீடு செய்ய ஹரியானா மற்றும் புது டெல்லியில் உள்ள ஹரியானா தொழிலாளர் நலத்துறை மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களிடம் முறையிட அவர்களின் சக்தியை திருப்பிவிடும்படி வலியுறுத்தி வந்துள்ளனர்.
MSWU இடைக்கால குழுவிற்கு மத்திய தொழிற்சங்கங்களின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் கூட, ஸ்ராலினிஸ்டுகளின் அரசியல் செல்வாக்கு மற்றும் தொழிற்சங்கவாத கருத்துருக்களின் கீழ், ஹரியானா அரசாங்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடம் முறையிடும் அதே பாதையைத் துல்லியமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருந்த போதினும் ஒப்பந்த தொழிலாளர்முறை, மற்றும் அடிமாட்டுழைப்பு நிலைமைகள், மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஒட்டுமொத்த முதலாளித்துவ மேற்தட்டும், அதன் அரசியல் கட்சிகள், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களும் சமரசமின்றி எதிர்ப்பாக உள்ளன என்பதை மானேசர் மாருதி சுஜூகி தொழிலாளர்களின் அனுபவம் எடுத்துக்காட்டி உள்ளது.
அவர்களுக்கு எதிரான நிறுவன-அரசு சூழ்ச்சியைத் தோற்கடிக்க,பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்கள் அவர்களின் போராட்டத்தை இந்தியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதன் அடித்தளத்தில் அமைக்க வேண்டும். பொய் வழக்குகளுக்கு எதிரான மற்றும் கழித்தொழிக்கப்பட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான போராட்டமானது இந்தியா முழுவதிலும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்முறை, வேகப்படுத்தல், மற்றும் அடிமாட்டுழைப்பு நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்தாக்குதலை அபிவிருத்தி செய்வதோடு இணைக்கப்பட வேண்டும்.மேலும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் தொழிலாளர்களின் அதிகாரங்களுக்கான மற்றும் ஒட்டுமொத்த இலாப அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்கப்பட முடியும் என்பதை உணர்வதன் மூலமாக உயிரூட்டப்பட வேண்டும்.
குர்காவில் டிசம்பர் 20-21 போராட்டத்தில் பங்குபெற்ற, சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களின் சில உறவினர்களோடுஉலக சோசலிச வலைத் தளம் பேசியது.
பெரும்பாலான தொழிலாளர்களின் வயது 20'களில் அல்லது 30'களின் தொடக்கத்தில் இருப்பதையும், வறிய கிராம குடும்பங்களில் இருந்து வந்திருந்ததையும் நாம் அவதானித்தோம்.
 
சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி இந்தியா தொழிலாளி ஜியாலாலின் தந்தை ராம் லால்
சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி இந்தியா தொழிலாளி ஜியாலாலின் தந்தை ராம் லால் WSWS'க்கு கூறுகையில், “போர்குணமிக்க தொழிலாளர்களிடமிருந்து விடுவித்து கொள்ள, MSI நிர்வாகம் அதன் சொந்த மேலாளரை, அவனிஷ் தேவை, கொன்று விட்டு, அந்த வழக்கை தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பி விட்டது! ஆனால் தொழிலாளர்கள் மேலாளரை ஒன்றும் செய்யவில்லை. அந்த வழக்கில் எனது மகன் முதன்மை குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டார், பொலிஸால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.நிர்வாகம் தான் ஜூலை 18இல் தகராறைத் தூண்டிவிட்டது, என்னவெல்லாம் நடந்ததோ அதற்கு தொழிலாளர்களைக் காரணமாக்கிவிட்டது. ஆனால் MSIநிர்வாகம் தான் முதன்மை குற்றவாளி. எனக்கு அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லை," என்றார்.

சிறையில் அடைக்கப்பட்ட இன்னொரு மாருதி சுஜூகி இந்தியா தொழிலாளியின் தந்தை ராம் சபாத்
சிறையில் அடைக்கப்பட்ட மற்றொரு நிரந்தர தொழிலாளரான ராம் சபாதின் தந்தை, சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களின் அனைத்து உறவினர்களைப் போலவே, அவர்களின் தலைவிதி மீது மிகவும் நம்பிக்கையிழந்து உள்ளார். கிழக்கு உத்திர பிரதேசத்தின் ஜோம்பூர் மாவட்டத்தில் சமஸ்புட் கிராமத்தில் இருந்து வந்த ஒரு சிறிய விவசாயி,குர்காவின் டிசம்பர் 20-21 தேதி போராட்டத்தில் கலந்து கொள்ள பல நூறு கிலோமீட்டர் கடந்து வந்திருந்தார்.
அவரது தந்தை விவரித்தார், "ராம் திருமணம் ஆனவர், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க என் மருமகளும் குழந்தையோடு என்னுடன் வந்துள்ளார். அவர் குர்காவ் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைந்து வரப்படும் போது மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் அனைவரும் ராமை பார்க்க வருகிறோம்," என்றார்.
"என்னுடைய மகன் அவரது தொழில்நுட்ப ITI பட்டய படிப்பை லக்னோவில்(உத்தர பிரதேசம்) முடித்துவிட்டு, டாடா மோட்டார்ஸில் தொழில் பயிலுனராக வேலை செய்து வந்தார். பின்னர் அவர் மாருதி சுஜூகி நிறுவனத்தில் சேர்ந்து எட்டு ஆண்டுகள் வேலை செய்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவர் நிரந்தரமாக்கப்பட்டார்."
அவரது மகனையும், ஏனைய 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் நீதிமன்றங்கள் பிணையில் அனுப்ப மறுத்தமை குறித்து அவர் கூறுகையில், “பொதுவாக இதுபோன்ற படுகொலை குற்றச்சாட்டை முகங்கொடுக்கும் ஒருவரால், ஆறு மாத சிறை தண்டனைக்குப் பின்னர் பிணை பெற முடியும். ஆனால் எனது மகனும் மற்றவர்களும் இப்போது ஏறத்தாழ 18மாதங்களாக சிறையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு இன்னமும் பிணை மறுக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மற்ற தொழிலாளர்களும் ஒரு கொலை குற்றத்திற்கு முறையற்ற விதத்தில் பொறுப்பாக்கப்பட்டு விட்டார்கள்!" என்றார்.
சிறையில் அடைக்கப்பட்ட MSI தொழிலாளரும் MSWU இன் தலைவர் ராம் மெஹரின் சகோதரருமான பல்வந்த் சிங்கிடமும் நாம் பேசினோம்.மெஹருக்கு திருமணமாகி 5 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர் ஹரியானாவின் கெய்தால் மாவாட்டத்தில் குலெய்னா கிராமத்தில் இருந்து வருகிறார். சிங் கூறுகையில், “MSI தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு தொடுக்க அங்கே ஒரு சூழ்ச்சி நடந்துள்ளது. சுரண்டுவதை நிர்வாகம் அதிகரிக்க விரும்பிய போது, அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு எதிராக மற்றும் ஓர் ஊதிய உயர்வைக் கோரி போராடினார்கள்," என்றார்.
ராம் மெஹரின் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்த அவரது சகோதரர், “நான் அவரை சிறையில் சந்தித்தேன். அவர் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சிறையில் நாங்கள் அவரை சந்திக்க போகும் போதெல்லாம் அவருக்காக நாங்கள் உணவு எடுத்து செல்வோம், ஆனால் அந்த உணவை வழங்க அதிகாரிகள் எங்களை அனுமதிப்பதில்லை," என்றார்.
அரசியல் கட்சிகளைக் குறித்து அவர் ஏளனமாக கூறுகையில், “ஒரேயொரு கட்சி கூட மாருதி சுஜூகி தொழிலாளர்களை ஆதரிக்கவில்லை. எல்லா கட்சிகளுமே தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளன. கடந்த மார்ச் மாதம் கெய்தாலில் நடந்த ஒரு போராட்ட ஆர்ப்பாட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பங்கெடுத்தபோது,பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, அவர்கள் பொலிஸால் குரூரமாக அடிக்கப்பட்டார்கள். அதில் பதினோறு பேர் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்பட்டார்கள்,"என்றார்.
By Jai Sharma and Arun Kumar
31 December 2013

இந்திய பிரதம மந்திரி இராஜினாமாவை அறிவிக்கிறார்

வரவிருக்கின்ற ஏப்ரல்-மே 2014 தேசிய தேர்தலுக்குப் பின்னர் தாம் பதவியில் இருந்து விலக இருப்பதாக இந்திய பிரதம மந்திரி கடந்த வெள்ளியன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மே 2004இல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்து வரும் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் விருப்பத்தின் பேரில் அவர் இந்திய அரசின் தலைவராக சேவை செய்து வருவதாகவே எப்போதும் அறிவித்து வந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இப்போது—சோனியாவின் 43 வயது மகனும், நேரு-காந்தி அரசியல் வம்சத்தின் வாரிசுமான—ராகுல் காந்தியை அதன் பிரதம மந்திரி வேட்பாளராக பெயரிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவரால் தலைமை தாங்கப்படும் ஓர் அரசாங்கத்தில் சேவை செய்வதில் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்து, சிங் அவரது பத்திரிகையாளர் கூட்டத்தில் ராகுல் காந்திக்கான அவரது ஆதரவை வெளியிட்டார். “வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு ராகுல் காந்திக்கு முழு தகுதியும் உள்ளது," என்று சிங் வலியுறுத்தினார்.“மேலும் எமது கட்சி சரியான நேரத்தில் அந்த முடிவை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்," என்றார்.

81 வயதான சிங் மூன்றாவது முறையாக இந்திய பிரதம மந்திரியாக சேவை செய்ய மாட்டார் என்ற வதந்திகள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளன. இருந்தபோதினும், அவரது இராஜினாமா அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் நேரமானது, இந்தியாவின் பொருளாதாரம் உலக பொருளாதார நெருக்கடியால் நிலைகுலைய செய்யப்பட்டிருக்கும் நிலைமைகளின் கீழ், கட்சி மீண்டும் தேர்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் தலைமைக்குள், அதிர்ச்சிகரமாக இல்லையென்றாலும், அதிகரித்து வரும் அச்ச உணர்வின் ஓர் அறிகுறியாக உள்ளது. 2011இல் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதியாக குறைந்துள்ளது; விலைவாசி ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து வருகிறது; அடுத்த அரசாங்கம் தீர்க்கமாக சமூக செலவினங்களை வெட்ட மற்றும் "முதலீட்டிற்கு-நேசமான" கொள்கைகளை அமுலாக்க முனையவில்லை என்றால், அவை இந்தியாவின் கடன்பெறும்-மதிப்பீட்டை வெற்று-பத்திர அந்தஸ்திற்கு (junk-bond status) குறைத்துவிட இருப்பதாக உலகின் கடன்-வழங்குவதற்கான மதிப்பீட்டு முகமைகள் எச்சரித்துள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் வரை, பொது தேர்தலுக்கு முன்னதாக ஒரு பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டிய அவசியம் அங்கே இருக்கவில்லை என்று காங்கிரஸ் உயர் மட்டம் வலியுறுத்தி வந்தது. ஆனால் வாக்காளர்களால் புரட்டிப் போடக்கூடிய சூழலை கட்சி எதிர்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தொடர்ந்து நிலவுகின்றன.

கடந்த மாதம் ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களில் காங்கிரஸ் அதன் மாநில சட்டமன்ற இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை இழந்து படுதோல்வி அடைந்ததோடு, ராஜஸ்தானிலும் மற்றும் தேசிய தலைநகர் பிரதேசமான டெல்லியிலும் ஆட்சியிலிருந்து இறங்கியது. இந்த தோல்வியானது தேசிய தேர்தல்களில் ஏற்படவிருக்கின்ற காங்கிரஸ் நிலைமைக்கான மோசமான நிமித்தங்கள் என்பது மட்டுமல்ல, அது தேர்தல் கூட்டணிகள் மற்றும் தேர்தல்-இட பங்கீடுகளின் மீது எண்ணற்ற பிராந்திய மற்றும் ஜாதி அடிப்படையிலான கட்சிகளுடன் காங்கிரஸ் சுழன்று வந்தமை மற்றும் அவற்றை கையாண்டு வந்தமையின் எதிர்மறைரீதியிலான தாக்கமாகவும் உள்ளது. 1984இல் இருந்து எந்தவொரு தனிப்பெரும் கட்சியும் பாராளுமன்ற பெரும்பான்மையை பெறாத நிலைமையின் கீழ், இடங்களை வெல்லவும் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய அதிகார பேரங்களைச் செய்யவும் இரண்டிற்கும் அதுபோன்ற கூட்டணிகள் அவசியமாக உள்ளன.

கருத்துக்கணிப்புகள்—இவை இந்தியாவில் இழிவார்ந்தரீதியில் துல்லியமின்றி இருக்கின்றன என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன—உத்தியோகபூர்வ எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி அல்லது பிஜேபி'க்கு பின்னால் காங்கிரஸ் கட்சி மிக மோசமாக பின்தங்கி இருப்பதாக காட்டுகின்றன.

இந்து மேலாதிக்க பிஜேபி அதன் பிரதம மந்திரி வேட்பாளரான—கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக குஜராத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளவரும், தன்னைத்தானே இந்துமத இரும்புமனிதராக காட்டிக் கொள்பவரும் மற்றும் பரம-பேரினவாதியுமான—நரேந்திர மோடியைச் சுற்றி ஒரு தலைவர்-பாணியிலான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

காங்கிரஸிற்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, பெருவர்த்தக-சார்பு கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மீதான மக்கள் எதிர்ப்பை தாறுமாறாக மிதித்து நசுக்குவதில் மோடி குஜராத்தில் எவ்வாறு செய்தாரோ அதேபோல தேசிய அளவிலும் செய்வார் என்ற எதிர்பார்ப்போடு பெரும்பான்மை பெருநிறுவன இந்தியா, மோடிக்கு அதன் ஆதரவை வழங்க திரும்பி உள்ளன.

1990களின் தொடக்கத்தில் நிதி மந்திரியாக இருந்து, இந்தியாவின் தேசியரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரத்தை உடைப்பதை மேற்பார்வையிட்ட மற்றும் நவ-தாராளவாத, சந்தை-சார்பு "சீர்திருத்தத்தை" தழுவி இருந்த மன்மோகன் சிங் நீண்டகாலமாக இந்திய பெருவர்த்தகங்களின் நம்பிக்கையை அனுபவித்து வந்தார்.

இருந்தபோதினும் அவரது பங்கு சமீபத்திய ஆண்டுகளில் மிக கூர்மையாக வீழ்ச்சி அடைந்தது. பாரிய மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் சந்தை சீர்திருத்தங்களை முன்னெடுக்க UPA அரசாங்கம் தவறியதாக உணர்ந்ததால், பெரு வர்த்தகங்கள் அதிகளவில் பொறுமையிழந்து போனதோடு, அவற்றின் கோபமும் அதிகரித்தது.

சிங்கே கூட பெரு வர்த்தக வட்டாரங்களில் அதிகளவில் "தொடை நடுங்கியாக" நிராகரிக்கப்பட்டார். 

வோல்மார்ட்-பாணியிலான பல-பிராண்ட் விற்பனை அங்காடிகளுக்கு சில்லரை விற்பனை துறையை திறந்துவிட்டமை, தனியார்மயமாக்கல் மற்றும் முதலீடு குறைப்பைத் தீவிரப்படுத்தியமை, திரவ இயற்கை எரிவாயுவின் விலை-மானியங்களைக் கடுமையாக குறைத்தமை உட்பட ஒரு பொருளாதார "பெருவெடிப்பு" சீர்திருத்தங்களை, செப்டம்பர் 2012இல், அரசாங்கம் அறிவித்தது. தேசியளவில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையில், வேலைகளை உருவாக்குவதற்காக அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு இந்தியர்கள் அவர்களின் இடுப்புபட்டைகளை இறுக்கி கொள்ள வேண்டுமென கூறி, சிங் அந்த முறைமைகளை பாதுகாத்தார்—நாட்டின் மொத்த குழந்தைகளில் பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருக்கும் ஒரு நாட்டில் மற்றும் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் நாளொன்றுக்கு இரண்டு டாலர்களை விட குறைவான தொகையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் இவ்வாறு கூறப்படுகிறது.

சிங்கின் இரக்கமற்றதன்மை போதியளவிற்கு இல்லை என்றரீதியில், UPA அரசாங்கத்தின் “பெருவெடிப்பு" முறைமைகளால் தோற்றுவிக்கப்பட்ட அன்னிய முதலீடு ஊக்குவிப்பும் மற்றும் உள்நாட்டு வர்த்தகங்களிடையிலான உற்சாகமும் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கவில்லை.

இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் நெருக்கடியால் உலுக்கப்பட்டுள்ள நிலையில், அரசுடனான ஆளும் வர்க்கத்தின் சீற்றமும், கோபமும் கடினமாகி உள்ளது. ரூபாயின் ஒரு கூர்மையான மதிப்பு சரிவு இந்தியா விரைவில் ஒரு நடப்பு கணக்கு நெருக்கடியைச் சந்திக்கும் என்ற அச்சங்களை உச்சநிலைக்கு கொண்டு வந்ததற்கு பின்னர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவை உலகளாவிய முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு-கூலி உற்பத்தியாளராக மாற்றும் உந்துதலை எடுப்பதில் அவர் வகித்த பாத்திரத்தை விட, 2012 பொருளாதார நெருக்கடிக்காக மன்மோகன் சிங் பெரிதும் நினைவுகூரப்படுவார் என்று ஒரு பிரபல பார்வையாளர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான தினசரிகள் காங்கிரஸின் "ஜனரஞ்சகவாதத்திற்கு" நீலிகண்ணீர் வடித்த முழுநீள தலையங்கங்களையும், கருத்துரைகளையும் கொண்டிருந்தன. இந்த "ஜனரஞ்சகவாதம்" என்பது சமூக செலவினங்களில் UPA அரசாங்கம் நடைமுறைப்படுத்தி உள்ள, அதுவும் பிரதானமாக அதன் முதல் பதவிகாலத்தில் இந்தியா சாதனையளவிலான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்து வந்தபோது நடைமுறைப்படுத்தி இருந்த, அற்பமான உயர்வுகளுக்கான ஒரு குறியீட்டு-சொல்லாகும்.

சமீபத்தில் தோற்றுபோன மாநில-தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில், காங்கிரஸ் "உள்ளார்ந்த வளர்ச்சிக்கான" கட்சியாகும் என்ற வாதங்களை காங்கிரஸ் துணை-தலைவர் ராகுல் காந்தி அவரது கட்சியின் சம்பிரதாய வாதமாக நிலைநிறுத்தி இருந்தார். பரந்த தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளின் பரந்த பிரிவுகளும் இதையொரு சகிக்கமுடியாத நகைச்சுவையாக பார்க்கின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகச் சிறிய பகுதியை, 1.5 மற்றும் 3.75 சதவீதத்தை, முறையே சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடுகிறது. அனைத்திற்கும் மேலாக, இந்திய மற்றும் வெளிநாட்டு பெரு வர்த்தகங்களை சமாதானப்படுத்த, சமூக செலவினங்களை வெட்ட மற்றும் அத்தோடு அனைத்து எரிவாயு மற்றும் டீசல் விலை மானியங்களை நீக்கவும் அரசு தீர்மானமாக உள்ளது. இருந்தபோதினும் பெரு வர்த்தகங்களின் பெரும்பான்மையானவற்றை பொறுத்த வரையில், காங்கிரஸின் வெளிவேஷ "ஏழைகள் சார்பு" நிகழ்ச்சிநிரல் குறித்த காந்தியின் ஸ்வரம், அரசாங்கத்திற்கு அவர்கள் விரோதமாக உள்ளனர் என்பதை மட்டுமே அவைகளுக்கு உறுதிபடுத்துகிறது. 

பிரதம மந்திரியாக இருந்த ஏறத்தாழ அவரது பத்து ஆண்டுகளில் அவரது வெறும் மூன்றாவது பத்திரிகையாளர் கூட்டத்தில், சிங் UPA'இன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி காட்டி பேசினார். இவ்வாறு செய்ததன் மூலம், இந்த வளர்ச்சியின் பலன்கள் பணக்கார மற்றும் பெரும் பணக்காரர்களின் ஒரு சிறிய கூட்டத்தால் மற்றும் மத்திய வர்க்கத்தின் மிகவும் சலுகை படைத்த பிரிவுகளால் ஏகபோகமாக்கப்பட்டு உள்ளது என்பதையும், அனைத்திற்கும் மேலாக, இந்தியா முழுவதுமாக அன்னிய முதலீட்டு வரவையும், மற்றும் அதன் பலவீனங்களையும் சார்ந்துள்ளது என்பதையும் அம்பலப்படுத்தி, உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ விரிவாக்கத்தின் அடித்தள விரிப்பை வெளிப்படையாக இழுத்து கவிழ்த்து போட்டுள்ளது என்பதை அவர் கவனக்குறைவாக அலட்சியப்படுத்தினார்.     

காங்கிரஸின் மீது சமீபத்தில் வாக்காளர்கள் வேறுவிதமாக திரும்பியது, குறைந்தபட்சம் உணவு விலை உயர்வுகளின் மீது ஏற்பட்ட மக்கள் கோபத்தின் பாகமாக இருந்ததென்று கூறியதோடு, அதேவேளையில் அவரது அரசாங்கம் ஏழைகளுக்கு போதியளவிற்கு உதவி இருப்பதாகவும் சிங் கூறினார்:“நான் முடிந்தளவிற்கு நேர்மையாக இருப்பேன், அதை வார்த்தைகளில் கூற வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் திரும்பியதில் விலைவாசி உயர்வு ஒரு பிரதான காரணியாக இருந்திருக்க கூடும். ...ஆனால் அவ்வாறு கூறுகின்ற அதேவேளையில், பலவீனமான பிரிவுகளைப் பாதுகாக்க போதுமான முறைமைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம் என்பதையும் நான் கூற விரும்புவேன். அதை விட்டுவிட முடியாது," என்றார்.

UPA அரசாங்கம் தொலைதொடர்பு அலைக்கற்றைகளை மற்றும் நிலக்கரி வளங்களை இந்திய பெரு வர்த்தகங்களுக்கு வந்தவிலைக்கு விற்றிருந்தது மற்றும் சில விவகாரங்களில் இலவசமாக கூட கொடுத்திருந்தது என்ற குறிப்பைக் கூறாமல் விடுவதிலும் சிங் அதேயளவிற்கு கவனமாக இருந்தார். ஊழல் பரிவர்த்தனைகள் மீது கூறப்படும் கருத்துக்கள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறிய அவர், அவரது தனிப்பட்ட நாணயத்தை வலியுறுத்தும் ஒரு காட்சியை அரங்கேற்றினார். மேலும் அவரது அரசாங்கம் 2009'இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை அவரது நேர்மைக்கு வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்பு என்று அவர் கூறினார். ஆனால் பெரு வர்த்தகங்களுக்கும் UPA அரசாங்கத்திற்கும் இடையிலான பணப்பிணைப்புக்கான ஆதாரங்கள் அனைத்தும் தோற்றப்பாட்டளவில் 2009'க்குப் பின்னர் தான் எழுந்திருந்தன.

பிரதம மந்திரியாக அவரது பதவி காலத்தின் மிக உயர்ந்தபுள்ளியாக அவர் எதை கருதுகிறார் என்று கேட்கப்பட்டபோது, சிங் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை குறிப்பிட்டார். அந்த 2008 உடன்படிக்கை "உலகளாவிய இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டுறவைப்" பலப்படுத்தி இருந்தது. அந்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்டதை பாதுகாக்க, சிங் துல்லியமாக ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணியை உதைத்து தள்ளுவதற்கு காங்கிரஸ் கட்சியை இட்டு சென்றார். ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி அதன் பாராளுமன்ற பெரும்பான்மையோடு அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து அப்போது UPAக்கு ஆதரவு வழங்கி வந்தது.

இந்திய மேற்தட்டு மிகப் பெரியளவில் அணுசக்தி உடன்படிக்கையை ஆதரிக்கிறது. ஆனால் சீனாவிற்கு எதிர்பலமாக இந்தியாவைக் கட்டியெழுப்பும் அமெரிக்காவின் பேரார்வத்தை UPA அதன் இரண்டாவது பதவி காலத்தில் போதுமான அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதன் மீது அங்கே பெரு வர்த்தகங்கள் மற்றும் இராணுவ-மூலோபாய எந்திரத்தின் பிரிவுகளிடம் இருந்து பரந்தளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் இந்தியாவிற்கு "பேரழிவுகரமானதாக" இருக்குமென்று சிங் கடந்த வெள்ளிகிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பின்னர், அவர் ஒரு "பலவீனமான பிரதம மந்திரியாக" இருக்கிறார் என்று பிஜேபி கூறுவதன் மீதான கேள்விக்கு பதிலளிக்கையில்,“அகமதாபாத்தின் வீதிகளில் ஒரு பாரியளவிலான அப்பாவி மக்களை படுகொலை செய்வதற்கு மோடி தலைமை தாங்கி இருந்தார்" என்று சிங் குற்றஞ்சாட்டினார். இது குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளைத் தூண்டிவிடுவதில் மற்றும் துணை போனதில் முதல் மந்திரியின் பாத்திரத்தைக் குறிப்பிட்டு காட்டுவதாகும்.

இந்த உண்மையை உளறிக் கொட்டிய பின்னர், இவ்விதத்திலான "பலமான" தலைமை இந்தியாவிற்கு அவசியமில்லை என்று அறிவித்து, சிங் வேகமாக அடுத்தடுத்து நகர்ந்தார். இது காங்கிரஸ் கட்சியின் வழக்கமான நடைமுறையாகும். அது இந்திய துணை கண்டத்தின் 1947 வகுப்புவாத பிரிவினைக்கு முன்னர் இருந்து இந்து வலதைத் தழுவி நிற்பதில், சாந்தப்படுத்தி வைப்பதில் நீண்ட சாதனைகளைக் கொண்டுள்ளது. சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் ஒரு தசாப்த காலத்தின் போது, பிஜேபி மற்றும் அரசு எந்திர பிரிவுகளின் சினத்தைத் தூண்டுவிடுவதற்கு அஞ்சி மற்றும் அதன் மூலமாக, இந்திய முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் அரசியல் கருவிகளின் ஸ்திரமின்மைக்கு செல்ல நேரிடும் என்று அஞ்சி, குஜராத் படுகொலைக்கு பொறுப்பானவர்களை அம்பலப்படுத்தவோ அல்லது தண்டிக்கவோ அது எவ்வித தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையில், பிஜேபி உடனான கூட்டுறவில் சிங் மீண்டும் மீண்டும் கைகொடுத்து வந்துள்ளார்.
By Keith Jones
6 January 2014

Friday, 3 January 2014

கலாச்சாரத்தின் பாதுகாப்பும் டெட்ராய்ட்டின் நெருக்கடியும்

பின்வருவது ஜூன்13,2013 அன்று டெட்ராய்ட் கலை நிறுவனத்தின் கலைப் படைப்புக்களை விற்கும் அபாயம் குறித்து கலைத்துறை ஆசிரியர் டேவிட் வோல்ஷ் அவர்களால் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட உரையின் தொகுக்கப்பட்ட பதிப்பாகும்டார்டனியன் கோலியரின் மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. DIA ஐ பாதுகாப்பதற்கான பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு defendthedia.org.இனை பார்க்கவும்.
நகரத்தின் கடனை அடைப்பதற்காக விற்பனை செய்யக் கூடிய வகையிலுள்ள சொத்தாக டெட்ராய்ட் கலை நிறுவன (DIA) படைப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து அவசரகால மேலாளர் கெவின் ஓர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கலந்துரையாடுகின்றனர் என்ற செய்தி 2013 மே மாத பிற்பகுதியில் கடுமையான கோபம்கொந்தளிப்பு மற்றும் வெறுப்பை கூட ஏற்படுத்தியதுஅவ்வுணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகின்ற அருங்காட்சியகத்திற்கு செல்வோர் மற்றும் நகரவாசிகளின் நேர்காணல்கள் தொடர்பான பல கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டிருக்கிறது.
இது ஒரு புரிந்துகொள்ளத்தக்க மற்றும் ஆரோக்கியமான பிரதிபலிப்பாகும்.டெட்ராய்ட் மற்றும் அப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்டதும் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கலைப்படைப்பின் மீது வசதிபடைத்த கடன் கொடுத்தவர்கள் கை வைக்கக்கூடும் என்ற எண்ணம் அச்சுறுத்த வைப்பதாகும்.
நாங்கள் இந்த DIA பிரச்சனையை தீவிர அக்கறையுடன் எடுத்துக் கொள்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்அவசரகால மேலாளரின் மற்றும் கடன் கொடுத்தவர்களது அச்சுறுத்தல் மக்களின் ஜனநாயககலாச்சார உரிமைகள் மீதான ஒரு தாக்குதலாகும்இது இந்த நாட்டில் நடந்துவரும் சமூக எதிர்ப்-புரட்சியின் ஒரு கூறுபாடாகும்.
சமூக எதிர்புரட்சி” என்பது நாம் எளிதாக ஒதுக்கித் தள்ளிவிடக்கூடிய ஒரு சாதாரண வார்த்தையல்லநான் நிரூபிக்க முயற்சிப்பது போன்றுமக்கள் கலாச்சாரத்தை அணுகுவது என்பது இந்த நாட்டிலும், (எல்லாவற்றுக்கும் மேலாகஉள்நாட்டுப் போர்உலகமெங்கிலும் சமூகப் புரட்சியினால் ஏற்பட்ட விளைவாகும்இது பெரும் பணக்காரர்களால் செல்வம் குவிக்கப்படுவதன் வழிமுறையாக இருக்கும்வரைஅங்கு மக்கள் செல்வது இனி ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றதுகடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கும் அல்லது டெட்ராய்ட் மக்கள் DIAஇற்குள் நுழைய முடியக்கூடிய நிலையில் இருப்பதற்கும் இடையில் முரண்பாடு இருக்குமானால்தற்போதைய நிலைமைகளின் கீழ் எந்த வழியில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்இதுதான் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு அரசியல் கேள்வியும்இது நமது பார்வையில் புரட்சிகர தாக்கங்களைக் கொண்டதுமாகும்.
கோபப்படுவது நியாயமானதுஆனால் தற்போதைய நெருக்கடி குறித்த ஒரு முன்னோக்கும் மற்றும் அதை புரிந்து கொள்வதும் மிக முக்கியமானது.அவசரகால மேலாளர்டெட்ராய்ட் நகரசபைமிச்சிகன் மாநில சட்டமன்றம்,ஆளுனர் ஆகியயோரின் முன் எதிர்ப்பைக் காட்டுவதில் எதுவும் நடக்கப்போவதில்லைஇதில் உள்ளடங்கியுள்ள பிரச்சனைகளை கவனமாக விளங்கிக்கொண்டு ஜனநாயகக் கட்சிஉள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் சுயாதீனமான ஓர் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.
தங்களது செல்வத்தை தக்கவைத்துக் கொள்ளடெட்ராய்ட் மக்கள்தொகையை வறுமையடைய செய்யஅதனை ஏழ்மையான மாநிலமாக மாற்ற பணக்காரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளே தற்போதைய பிரச்சனையில் உள்ள உந்துசக்தியாகும்வங்கியாளர்கள் நாட்டினை அழிவின் விளிம்பில் தள்ளியிருப்பதோடுஅதற்காக உழைக்கும் வர்க்கம் விலைசெலுத்த வேண்டுமென்று விரும்புகின்றனர்.
அவசரகால மேலாளர்அவரது குழுபங்குப்பத்திர உரிமையாளர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்களைப் பொறுத்தவரையில் DIA இல் உள்ள கலைப்படைப்புகள் எண்ணெய் மற்றும் திரைச்சீலைகற்கள்கண்ணாடி,மண்பாண்டம் மற்றும் பிற பொருட்களின் வடிவத்திலிருந்து எடுக்கப்படுகின்ற சாதாரண பணக் குவியலேஅவர்கள் தாங்கள் கலைப்படைப்பின் மீது கைவைக்க உரிமையுள்ளவர்கள் என்று நம்புகிறார்கள்ஏனெனில் அவர்கள் தாங்கள் அனைத்தின் மீதும் கைவைப்பதற்கான உரிமை கொண்டவர்கள் என நம்புகின்றார்கள்.
அமெரிக்கா என்பது பெயரளவில் மட்டுமே ஒரு ஜனநாயகமானதுமுக்கிய கட்சிகள்ஊடகம்அனைத்து முக்கிய நிறுவனம் உட்பட இந்த நாட்டினை ஒரு நிதி-நிறுவன பிரபுத்துவமே இயக்குகிறது என்பதோடு ஒவ்வொரு முக்கிய தீர்மானங்களையும் அதன் விருப்பப்படியே ஒழுங்கமைக்கிறது.எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியஒவ்வொரு தொலைபேசி அழைப்பு,, மின்னஞ்சல் மற்றும் தொடர்புகள் மீதான அமெரிக்க அரசின் உலக அளவிலான பெரும் உளவு பொதுவாக இந்த நாட்டில் எந்த அளவுக்கு ஒரு போலீஸ் அரசுக்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் பில்லியனர்களுக்கு ஒரு தடுப்புரிமை (veto) இருக்கிறதுஅவர்களது செல்வத்தை எவரும் தீண்டமுடியாதுஇந்த அரசாங்கம் பணக்காரர்களால்பணக்காரர்களுக்காக,பணக்காரர்களுடைய அரசாங்கமாகும்.
இந்த அர்த்தத்தில்பிரபுத்துவக் கொள்கை திரும்ப வந்திருப்பதை நாம் விவாதித்திருக்கிறோம்அதாவதுமருத்துவமனைகள்பள்ளிகள்,அருங்காட்சியகங்கள் போன்ற அடிப்படை உரிமைகள் மக்களுக்கு இல்லை என்பதும்அவர்கள் இத்தகைய அடிப்படையான சமூக தேவைகளைப் பெறவேண்டி இருக்கிறது என்றால்அது பெரும் செல்வந்தர்களின் பெருந்தன்மையின் விளைவாகும் என்ற கருத்து மீண்டும் வந்துள்ளது.அவ்வாறாயின் உதாரணத்திற்கு பில் கேட்ஸ் அல்லது வாரன் பவெட் அல்லது ஃபேஸ் புக்கின் மார்க் ஸக்கர்பேர்க் DIA தொடர்ந்து இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் என்றால் அல்லது உதாரணத்திற்கு ஒரு நகரத்தினை அல்லது ஒரு சிறிய மாநிலத்தை வாங்கி அவற்றை தொடர்ந்து இயங்கவைத்தால் நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருந்து மரியாதை செலுத்தவும் வேண்டும்.
நிச்சயமாகபில்கேட்ஸ் தனது பணத்தை திரும்ப எடுத்துக்கொண்டு அருங்காட்சியகத்தை மூட அல்லது கலைப் படைப்புகளை அவரது வீட்டின் நிலக்கீழ் அறையில் அல்லது அவருக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் வைப்பதாக முடிவெடுத்தால்எளிதாக நமக்கு அதிர்ஷ்டமில்லை எனலாம்.இது அமெரிக்காவில் அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர் சகாப்தங்களின் அடிப்படை ஆவணங்களில் வெளிப்பாட்டினைக் கண்டபல நூற்றாண்டுகளின் முற்போக்கான சமூகச் சிந்தனைக்கு எதிரானதாக இருக்கின்றது.
ஆரம்பத்திலேயேஇந்த உரையின் கருத்துக்களில் ஒன்றைகேள்வியின் வடிவத்தில் முன்வைக்க விரும்புகிறேன்இந்நகரத்தினதும் மற்றும் இப்பிராந்தியத்தினதும் உழைக்கும் மக்கள் பார்க்கக்கூடிய வகையில்,அப்படியே அதன் கலைப்படைப்புகளுடன் DIA ஒரு அருங்காட்சியகமாக அதன் இருப்பு என்பதுநெருக்கடிகள் சூழ்ந்தஅதிகரித்துவரும் சர்வாதிகாரமிக்கதும்,மிகப்பெரும் செல்வந்தர்கள் சிலரின் நலன்களுக்காக இயங்கும் அமெரிக்க முதலாளித்துவ சமூகத்துடன் இணங்கியிருக்கமுடியுமாசில நிமிடங்கள் இக்கேள்வியை நினைவில் வைத்துக் கொள்ளவும்பின்பு அதற்கு திரும்புகிறேன்.

The Detroit Institute of Arts
முதலில்நாட்டின் சிறப்பான கலைப்படைப்புகளுடன் கூடிய ஓர் அசாதாரணமான நிறுவனமாக அனைவரும் அங்கீகரிக்கின்ற DIA இன் வரலாற்றினையும் தன்மையையும் பற்றிச் சிறிது பார்க்கலாம்.
DIA, டெட்ராய்ட் கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகமாக 1885 மார்ச்சில் அமைக்கப்பட்டதுசெய்தித்தாள் நிறுவனரும் (Detroit News) கொடையாளருமான ஜேம்ஸ் இஸ்கிரிப்ஸ் மற்றும் பலசரக்கு வியாபாரியும் மதுபான தயாரிப்பாளருமான ஹிராம் வால்கரும் இதன் ஆரம்பகட்ட புரவலர்கள் ஆவர்இந்த அருங்காட்சியகம் முதன் முதலில் ஜெஃபர்சன் மற்றும் ஹேஸ்டிங்கின் ஒரு மூலையில் கட்டப்பட்டு, 1888 செப்டம்பரில் திறக்கப்பட்டது.
கார் தொழிற்துறையின் வளர்ச்சி டெட்ராய்ட்டில் வர்த்தகம் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு அடிக்கோலிட்டதுகலை அருங்காட்சியகத்தினை விரிவுபடுத்தல் குறித்து 1905 இன் ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது. 1919ல் உலகப் போரினை அடுத்துஎட்சல் ஃபோர்ட் (பிரபல உற்பத்தியாளரின் மகன்)மற்றும் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ஆல்பேர்ட் கான் ஆகியோரை உள்ளடக்கிய கலைகளுக்கான ஒன்றியம் ஒன்று அமைக்கப்பட்டதுஅந்த நிறுவனத்திற்கு டெட்ராய்ட் கலை நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதுஅதே வருடம்இவ் அருங்காட்சிசாலை டெட்ராய்ட் நகரின் ஒரு துறையாக்கப்பட்டது.
புதிய கட்டிடத்தை வடிவமைப்பதற்காக கான் பிரான்சில் பிறந்த போல் கிரே ஐ தேர்வு செய்தார்அது 1927 அக்டோபரில் திறக்கப்பட்டதுஅந்த நேரத்தில்,அருங்காட்சியகத்திற்கு அதிக அளவு பங்களிப்பினை செய்தஜேர்மனியில் பிறந்த வரலாற்றாசிரியரும் விமர்சகருமான வில்லியம் வலன்ரீனர் இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார்.
1992ல் புதிய கட்டிடத்திற்கான முன்மாதிரியாகஇன்னொரு செய்தித்தாள் உரிமையாளரான ரால்ஃப் ஹெச்.பூத் (Ralph H. Booth) ”தொழிற்துறையில் முதலிடத்தையும் செல்வத்தில் பொறாமைப்படும்படியான இடத்தினையும் டெட்ராய்ட் அடைந்திருக்கிறதுஆனால் “எந்திரத்தனமான உற்பத்தி மட்டுமே நமது உண்மையான நோக்கமல்ல” என்று குறிப்பிட்டார்டெட்ராய்ட் அறிவொளிமயமாக்கல் மற்றும் முன்னேற்றத்தின் நகரம் என்பதற்கு உலகிற்கு உறுதியான ஆதாரங்களை புதிய அருங்காட்சியகம் கொடுக்கும் என்று பூத் கருதினார்நமது வாழ்க்கை நிறைவாகசெழிப்பாக இருக்கலாம் என்பதற்காகவும் எதிர்கால தலைமுறையின் உண்மையான மேம்பட்டதன்மைக்காகவும் நாகரிகம் பங்களிப்பு செய்வதாக நாம் சிறப்பாக கூறலாம்.
பொருளாதார மந்தநிலையின் உச்சக்கட்டத்தில்வலன்ரீனர் தனது டெட்ராய்ட்டின் தொழிற்துறை சுவர் சித்திரங்களுக்கு வர்ணம்பூசுவதற்காக புகழ்பெற்ற மெக்சிகன் கலைஞரான டியேகோ ரிவேராவை நியமித்தார்அவை முதன்முதலாக மக்கள் பார்வைக்காக 1993ல் திறக்கப்பட்டன(Eighty years of the Diego Rivera murals at the Detroit Institute of Arts” – ஐ பார்க்கவும்)
மிகப் பொதுவாககார் தொழிற்சாலையின் சரிவு மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையுடன் ஒத்துப்போகும் வகையில், DIAஇன் எதிர்காலத்தின் வீழ்ச்சியும் டெட்ராய்ட்டின் கலாச்சார வாழ்க்கை மீதான தாக்குதலும் 1970ல் ஆரம்பித்தது. 1975ல் முதன்மை நிதி உத்தரவாதம் அளிப்பவராக மிச்சிகன் அரசாங்கம் DIA ஐ எடுத்துக் கொண்டது. 1992ல்,மாநில அரசு அருங்காட்சியகத்திற்கான உதவிநிதிஒதுக்கீடுகளை 40சதவீதமாக குறைத்ததுடன்ஆறு வருடங்கள் கழித்து அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள் DIA ஸ்தாபகர்கள் சங்கத்திற்கு கீழ் துணை ஒப்பந்தத்திற்கு விடப்பட்டனஅதிகமாக அல்லது குறைவாக நிரந்தர நெருக்கடியான ஒரு நிலைமை பல வருடங்களாக நிலவியது.
DIA குறித்த சில உண்மைகள்இது அமெரிக்காவில் நகராட்சிக்கு சொந்தமான இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாகும் 100 கலைக்கூடங்களும் மற்றும்65 ஆயிரம் படைப்புகளுடன் (உண்மையில் அனைத்தும் பார்வைக்காக இல்லைஇது நாட்டில் ஆறாவது பெரிய அருங்காட்சிசாலையாகும்.அமெரிக்காவில் மூன்றாவது பெரியதாக இருக்கும் DIA வின் கலைப்பொருட்களான குறிப்பாக அமெரிக்க ஓவியங்கள்சிறப்பு வாய்ந்தவை.வன்சென்ட் வான் ஹோக் மற்றும் ஹென்றி மற்றீஸின் (1922) படைப்புகளை வைத்திருக்கும் நாட்டின் முதல் பொது அருங்காட்சியகமாகும்.
20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் கலை உலகில் முக்கியத்துவம் வாய்ந்த பிரபல நபரான வால்டர் பேச்கலைஞரும் விமர்சகரும் மற்றும் வரலாற்றாசிரியருமாவார்நியூயோர்க்கில் 1913ல் புகழ் பெற்ற நவீன கலையின் காட்சியான Armory Show இன் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான பேச்அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலைஞர்கள் ரோபர்ட் ஹென்றி,குளோட் மொனேமார்செல் டுசாம்ப் மற்றும் டியேகோ ரிவேரா போன்ற பல்வேறுபட்டவர்களை அறிந்திருந்தார்.
அவரது The Art Museum in America (1948) என்னும் புத்திகத்தில்பேச் “டெட்ராய்ட் கலை நிறுவனம்சிறப்பான புராதன ஐரோப்பியகிழக்கத்தியஅமெரிக்க மற்றும் நவீனபயனுறு கலைகள் (குறிப்பாக துணியியல்ஆகியவற்றின் நிபுணத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற மற்றும் மக்களுக்கும் கலைப்பொருட்களுடனான தொடர்பு ஆகியவற்றால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது... அருங்காட்சியகத்தின் சுவரில் வரையப்பட்ட டியேகோ ரிவேராவின் ஓவியங்கள்மற்றும் நகரின் சிறப்புவாய்ந்த தொழிற்சாலைகளைக் காண்பிப்பவை ஆகியவை அதிக அளவிலான மக்களை அடிக்கடி தங்களது காட்சிக்கு வர வைப்பதற்கான காரணம் என்பதுடன் அவை டெட்ராய்ட்டின் செல்வந்தர்களிடமிருந்து பயனுள்ள ஆதரவினையும் பெற்றிருந்தனஎகிப்தியகிரேக்கரோமானியசீன,ஜப்பானியஇந்தியபைசந்தானியகோதிக்மறுமலர்ச்சி மற்றும் நவீன கலை ஆகியவை முக்கிய காட்சிகள்ஓவியங்களில் குறிப்பாக இத்தாலியன்டச்,ஃப்ளெமிஷ்பிரெஞ்சுமற்றும் அமெரிக்க படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவைகிழக்கத்திய அரைக்கோள பகுதி மக்களைப் போன்ற அதே தடத்தில் அதிக அளவில் இந்தியர்களை (குறிப்பாக புராதன மெக்சிக்கோவினர்உள்ளடக்கும் இந்நாட்டின் முதல் பெரும் பொருட்காட்சிசாலையாகும் என எழுதுகின்றார்.
பரந்த அளவிலான உழைக்கும் மக்களுக்கான” ரிவேராவின் ஓவியங்களது தன்மை குறித்து பேஷின் கருத்து அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
DIA வை 1880ல் அமைத்தது ஒரு தேசிய நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பாகமாகும்.அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டில் கலை மற்றும் விஞ்ஞான அருங்காட்சியகங்களை திறப்பது அறிவொளிக்கருத்துக்களுடன் பொதுக் கல்வியின் முன்னேற்றம் மற்றும் பொதுவான சமுதாய மற்றும் கலாச்சார ரீதியிலான முற்போக்கு நிகழ்ச்சி நிரலுடன் ஒருங்கிணைந்திருந்தது.  அதுவரை ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்திய முடியாட்சி மற்றும் முடியரசுவாதத்திற்கு எதிரான அரணாக இந்த அறிவுபெற்றகலாச்சாரமிக்க மக்கள்திரள் அமெரிக்காவின் முற்போக்கு சிந்தனையார்களால் பார்க்கப்பட்டது.
உள்நாட்டு போர் மற்றும் தீவிரமான மறுகட்டமைப்பு ஆகியவை அமெரிக்காவில் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியின் உச்சகட்டமாக இருந்ததுஅடிமை ஒழிப்புபிரபுத்துவ கொள்கைக்கு எதிரான அடியாக பார்க்கப்பட்டதுஅமெரிக்க வியாபாரம் குவித்துக் கொண்டிருந்த பெரும் செல்வம் மற்றும் மக்களின் ஜனநாயகம்சுய-நம்பிக்கை இரண்டாலும் பிரதான அருங்காட்சியகத்தை உருவாக்குவது சாத்தியமானதுஅது அடிமைத்தனம் மீதான வெற்றியுடன் ஒரு புதிய மட்டத்தை எட்டியிருந்தது.
பென்சில்வேனியாவை சேர்ந்த தீவிர குடியரசுக் கட்சியாளரான தாடியஸ் ஸ்டீவன்ஸ் 1865ல் அனைவரும் சமமென்ற மனநிலையில் பின்வருமாறு பேசினார்: “நமது தந்தையர் குடும்பங்கள் அல்லது இனங்களின் சட்டபூர்வமான மேன்மையின் ஒட்டுமொத்த கோட்பாட்டையும் நிராகரித்து,சட்டத்தின் முன்பு மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அறிவித்தனர்.அந்த அடிப்படையில் அவர்கள் ஒரு புரட்சியை உருவாக்கி குடியரசை அமைத்தனர்அவர்கள் அடிமைத்தனம் மூலம்அதுவரையிலும் பரவலாக சார்ந்திருந்தமேல்மட்டத்தை கச்சிதமாக்குவதிலிருந்து அவர்கள் தற்காத்துக் கொண்டனர்.  ஐக்கிய அரசின் நன்மைக்காகஅவர்கள் காத்திருக்க ஒத்துக் கொண்டனர்ஆனால் அதன் இறுதி முடிவு குறித்த எண்ணைத்தைக் கைவிடவில்லைஅவர்கள் கவலையுடன் முன்னோக்கி எதிர்பார்த்த நேரம் வந்திருக்கிறதுஅவர்களது பணியினை முடிக்க வேண்டியது நமது கடமை.”
ஐக்கிய அரசினை காப்பதற்காகவும் அடிமைத்தனத்தை வெல்வதற்காகவும் உள்நாட்டுப் போரிலிருந்து வெளிப்பட்டபெரும் கஷ்டங்களை அனுபவித்த தலைமுறையானது அறிவுமுன்னேற்றம் மற்றும் கலாச்சாரப் பசியில் இருந்ததுஉதாரணத்திற்கு சிகாகோவிலோஅல்லது டெட்ராய்ட்டின் நகர்ப்புறத்தில் எஞ்சியுள்ள கட்டிடக்கலையமைப்பில் அதனைக் காணலாம்.
கையில் அதிக படைப்புகளை வைத்திருந்தஐரோப்பிய கலை நிறுவனங்கள் எதிர்கொள்கின்ற சூழ்நிலைக்கு எதிராக, 1800களின் பிற்பகுதியில் மற்றும்1900களின் ஆரம்பத்தில்அமெரிக்காவின் அருங்காட்சியகங்கள் பெருமளவு தரமான கலைப் படைப்புகளால் தங்களது அதிகபட்ச இடத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமென்றால்கடல்கடந்து போக வேண்டிய மற்றும் குறிப்பிடத்தக்க அளவிலான வளங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டி இருந்து என்பதை நினைவில் வைக்கப்பட வேண்டும்அறிவொளிமிக்க கொள்ளைக்கார பெருமுதலாளிகள் அல்லது அவர்களது ஆலோசகர்கள் இந்த வேலையை அதிகம் செய்தனர்தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இந்த வியாபாரிகள் பன்றிகளாவர்ஆனால் அவர்களிடம் கலை மற்றும் கலாச்சாரம் குறித்த உணர்வும் கொஞ்சம் இருந்ததுஅல்லது அந்த உணர்வுள்ள மக்களை அவர்கள் வாடகைக்கு அமர்த்திக் கொண்டனர்.
அமெரிக்காவில் அருங்காட்சியகங்களின் வரலாறு குறித்த தனது படைப்பில்,பேச் பின்வறுமாறு குறிப்பிட்டார்: “நிலையான வேர் கொண்டிருந்ததும் இந்த அளவுக்கு நம்மிடையே அகன்று பரந்திருந்ததுமாகிய கலை மீதான ஆர்வத்தில் உள்நாட்டுப் போர் குறுக்கீடு செய்திருக்கிறது... ஆனால் மோதல் முடிந்ததுநாடெங்கிலும் இரயில் பாதைகள் உள்ளனஉற்பத்தி அதிகரித்தது,புதிய குடியேற்றங்கள் மேற்கினை இணைத்ததுகடல் வர்த்தகம் கிழக்கின் துறைமுகங்களை நெரிசல் மிக்கதாக்கியது மேலும் எப்போதுமில்லாத அளவு கலைக்காக அதிக பணம் அர்ப்பணிக்கப்பட்டதுசுதந்திர அமெரிக்காவின் நூற்றாண்டு நெருங்கி வருகிறது மேலும்பிலெடெல்பியாவில் பெரும் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் பல வருடமாக நடைபெற்று வருகிறதுஅதன் கலை கண்காட்சி நமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.ஆனால்நியூயோர்க் மற்றும் பொஸ்டன் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்ட பொழுதுமனிதர்களின் சிந்தனை ஆறு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளால் அந்த திசையில் திருப்பப்படாமல் இருந்திருந்தால்,கண்காட்சி முன்பு இருந்தது போன்ற அதன் தாக்கத்தினை பெற்றிருக்காது.முந்தைய முயற்சிகளின் நீண்ட வரலாற்றுடனும் தனது நிரந்தர காட்சிப்படைப்புகளுடனும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் சின்சினாட்டி செயல்பட ஆரம்பித்ததுஅமெரிக்காவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் அதே வருடத்தில் அமைக்கப்பெற்றுஇப்படியாக 1870நமது வரலாற்றில் மிக முக்கியமான வருடமாகிறது.”


வால்டர் பேச்
1869ல் பகிரங்கமாக விவரித்தது போன்று நியூயோர்க்கில் அதிகாரிகள், “(சென்ட்ரல்பார்க்கில் ஒரு அருங்காட்சியகம் அமைப்பதுஅது நாட்டின் சிறந்த கல்வித் திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும்இயற்கை வரலாற்றின் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி விஞ்ஞானபூர்வமான முயற்சிகளை மேம்படுத்தும்மேலும் அதேநேரம் நாட்டு மக்களுக்கும் அதனைப் பார்வையிடும் மக்கள் திரளுக்கும் பயனுள்ள வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் உள்ள இடமாக இருக்கும்,” என ஒத்துக்கொண்டனர்.
பொதுக்கல்வித் திட்டத்தின் அழிவினையும் உள்ளடக்குகின்ற இந்த மொத்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு இன்று வெளிக்கொணரப்படுகிறது,
நுண்கலைகளுக்கான பொஸ்டன் அருங்காட்சியகம் 1870 இல் அமைக்கப்பட்டதுஅதே வருடம் பெருநகர கலை அருங்காட்சியகம், 1876இல் பிலெடெல்பியா கலை அருங்காட்சியகம், 1879 ல் சிகாகோ கலைக் கழகம் மற்றும் 1881 இல் சின்சினாட்டி அருங்காட்சியகம் ஆகியவையும் அமைக்கப்பட்டன.
இந்த நிறுவனங்களை நாம் உயர்வாக நினைப்பதில்லைஅவையும் ஆளும் மேல்தட்டின் கௌரவத்தையும் சக்தியையும் ஊக்குவிப்பதற்காகவே கட்டப்பட்டன என்பதுடன் அவை மேல்தட்டினராலேயே நடத்தவும்படுகின்றன. DIA உள்ளிட்ட அவைஅனைத்து மக்களும் பார்க்கக்கூடியதாக இல்லாதிருப்பதற்கு காரணம் நாம் வர்க்க சமுதாயத்தில் வசிக்கிறோம் என்பதேயாகும்உழைக்கும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்பதுடன் இலாப அமைப்புமுறையின் கீழ் கலாச்சாரத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
முதலாளித்துவ கலாச்சாரத்தின் அடிப்படை அம்சங்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள நிரப்பந்திக்கப்படுகிறதுஅந்த சமுதாயம்கலாச்சாரத்தை அணுக தங்களைஅனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே புரட்சிகர வன்முறையின் மூலம் முதலாளித்துவ சமுதாயத்தை தூக்கியெறிய கட்டாயப்படுத்தப்படுகிறது” என்று ட்ரொட்ஸ்கி தனது கலையும் புரட்சியும்(Literature and Revolutionஎன்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும்முந்தைய காலகட்டத்தில் தொழிலாள வர்க்கம் குறித்து வந்த பயமும் அதன் பிரசன்னமும் அமெரிக்க முதலாளித்துவத்திடமிருந்த பெரும் செல்வமும் சில கலாச்சார வெற்றிகளை பெறுவதை சாத்தியமாக்கியது,அவை தற்போது அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு மற்றும் சீரழிவுக்காலகட்டத்தில் பறிக்கப்படும் நிலையில் உள்ளன.


பீட்டர் புறூகெல் இன் 
The Wedding Dance
DIA கலைப்படைப்புகளில் கையளவுக்கும் அதிகமான மிகச்சிறப்பான படைப்புகளைக் குறிப்பிடுவது சாத்தியமற்றதுஃபிளமிஷ் கலைஞரானபீட்டர் புறூகெல்லின் (c. 1525-1569) The Wedding Dance, சந்தேகத்திற்கு இடமின்றி அப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பு. ”விவசாயி புறூகெல்” என்று அறியப்படும் ஓவியர்தினசரி வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிந்துகொள்வதற்காக நெதர்லாந்திற்கும் இப்போதைய பெல்ஜியத்திற்கும் மாறுவேடத்தில் சாதாரண மக்கள் மத்தியில் சென்றார்இது நடைபெற்றது 1500களின் மத்தியிலாகும்.வெளிப்படையான மத அல்லது புராதன குறிப்புகள் இன்றி தினசரி வாழ்க்கையை சித்தரிக்கும் இயற்கை ஓவியம் வரைவதிலும் (landscape painting) இவர் பெரும் திறமை வாய்ந்தவராவர்.
இந்த படைப்புக்களுள் இன்னொரு சிறந்த படைப்பு வன்சென்ட் வான் ஹோக்கின் Self-portrait (1887). 1883கடித்ததில் கலை வியாபாரிகள் குறித்த வான் ஹோக்கின் கருத்துக்களை எடுத்துக் கொள்ளவில்லையென்றால்நான் தவறிழைத்தவனாகியிருப்பேன். “கலை வியாபாரம்” பெருமளவுவங்கியாளர்களின் ஊகம் மாதிரி ஆகிவிட்டது என்பதுடன் இப்போதும் அப்படியே இருக்கிறது –முற்றிலும் என்று சொல்லவில்லை – எளிமையாக சொல்வதென்றால் அதிகமாகமிக அதிகமாக எனக் கூறலாம்…..”


வன்சென்ட் வான் ஹோக்
 – சுய உருவப்படம்
ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காக விலையுயர்ந்த ஓவியங்களை வாங்கும் பல செல்வந்தர்கள்அதில் அவர்கள் பார்க்கும் கலைத்துவ மதிப்பிற்காக அவற்றை வாங்குவதில்லை… என நான் வாதிடுவேன்.
உண்மைஅங்கே உத்தமமான கலை பிரியர்களும் உள்ளனர்ஆனால் நடைபெறுகின்ற வியாபாரத்திற்குள் அவர்கள் அநேகமாக பத்தில் ஒரு பகுதியினரே எனலாம்அநேகமாகஅதைவிட இன்னும் குறைந்த அளவினராககூட இருக்கலாம் – அவர்களுக்காகஇப்படிப்பட்ட பரிமாற்றங்கள் உண்மையாக கலைமீதுள்ள நம்பிக்கைக்காக மட்டுமே என்று சொல்ல முடியும்.
கலை ஊகவியாபாரம் பற்றி பேசும்போதுமிக விலையுயர்ந்த 48 ஓவியங்கள் இதுவரை விற்பனையாகியுள்ளதுஅவற்றுள் ஏழு வான் ஹோக்கின் உடையது என்பது குறிப்பிடப்பட வேண்டியதுஅவை இணைந்து 700மில்லியன் டாலர்களுக்குஅனைத்தும் கடந்த 25 வருடங்களுக்குள் விற்கப்பட்டனஅவரது Dr. Gachet இன் சுய-உருவப்படம் 82.5 மில்லியன் டால்ர்களுக்கு (தற்போதைய டாலர்களில் 155.7 மில்லியன் டாலர்கள்) 1990ல் வாங்கப்பட்டதுஇதுபற்றி வான் ஹொக் என்ன கூறியிருப்பார்?
ஏற்கெனவே குறிப்பிட்டது போன்றுடியேகோ ரிவேராவின் டெட்ராய்ட் தொழிற்சாலை ஓவியங்கள் DIA இன் உடலியல் மற்றும் அறிவுசார்ந்த மையமாக இருந்ததுஅவர்களது ஓவியக் காலகட்டமான 1932-33ல்,கம்யூனிசத்திற்கு எதிரானவர்கள் மற்றும் மத வெறியர்களால் சுவரோவியங்கள் தீவிர தாக்குதலுக்கு உள்ளானதுஇயற்கை மற்றும் தொழிற்சாலைக்கான அவர்களது மரியாதைக்காகவும் மதம் மற்றும் கடவுள் விலக்கல் ஆகியவற்றுக்காகவும் “மதநம்பிக்கையற்றவர்கள்” என்றும்இறைநிந்தனைவாதிகள்” என்றும் மேலும் அவர்கள் தொழிற்துறை தொழிலாளர்களை முன்னணியில் வைத்ததற்காக ”கம்யூனிசவாதிகள்என்றும் குற்றம்சாட்டப்பட்டனர்உயர்ந்த கலையும் உயர்ந்த அரசியலும் இணைந்து வரும் நவீன தொழிற்சாலையின் பிறப்பிடத்திலும்பெரும் வர்க்க வெடிப்புகளின் விளிம்பிலும் உண்மையில் உலக அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளை ரிவேரா உருவாக்கினார்.
 

டியேகோ ரிவேராவின் டெட்ராய்ட் தொழிற்சாலை சுவர் ஓவியங்கள்
19ம் நூற்றாண்டுஅமெரிக்க ஓவியர்கள் மற்றும் வியத்தகு ஆபிரிக்க கலைப் படைப்புகளினூடாக விரைவாக கடந்து செல்ல மட்டுமே முடியும். DIA ஒரு கலை களஞ்சிய அருங்காட்சியகம்ஆதிகால மக்களது படைப்புகளின் மாதிரிகளும் பழமையான சகாப்தத்தின் படைப்புகளும் அதில் உள்ளடங்கும்.
ஒரு நிறுவனமாக கலை அருங்காட்சியகத்தின் வளர்ச்சிஇந்நாட்டில் இரண்டாம் அமெரிக்கப் புரட்சிஉள்நாட்டு யுத்தம் ஆகியவற்றோடு தொடர்புடையது என்பதுடன் மற்ற நாடுகளின் பெரும் சமூகப் புரட்சிகளுடனும் இதற்கு நெருங்கிய தொடர்புண்டு.
மேற்கத்திய உலகில்கலைப்படைப்புகள் தேவாலயங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டனஅவற்றுக்காக கலைஞர்கள் தரகுத்தொகை எடுத்துக் கொண்டனர்ஒரு முறையான முதல் கலை அருங்காட்சியகமான உவீஸி (Uffizi) ஃப்ளோரன்சின் நகரில் இத்தாலியில் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் அமைக்கப்பட்டதுஅது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான பொருளாதார மற்றும் சமூகப் போராட்டம் மற்றும் தேவாலயங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான புத்திஜீவிதமான போராட்டத்தை உள்ளடக்கியது.
பாரிசில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பார்வையிடப்படும்(வருடத்திற்கு 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்கலை அருங்காட்சியகமான லூவர், 1789 பிரெஞ்சுப் புரட்சியின் நேரடி உருவாக்கமாகும்மில்வோக்கீ கலை அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனரான டேவிட் கோர்டன் அவரது கட்டுரையில், ”கலை அருங்காட்சியகம்” ”சமத்துவம்” ஆகியவை கலை அருங்காட்சியகங்களின் முன்னேற்றத்தில் முக்கிய காரணி என்றார். ”ஆட்சியாளர்களால் பல கலை அருங்காட்சியகங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில்... கலையை தீர்மானமாக பொதுமக்களிடையே கொண்டு சென்றதென்றால்அது பிரெஞ்சுப் புரட்சிதான்.” என்று கோர்டன் எழுதுகிறார்.
பிரான்சின் பழைய ஆட்சியின் கீழ்பகிரங்க கலை அருங்காட்சியகத்திற்கான திட்டங்கள் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டனஅரசர்களும்மந்திரிகளும் பின்னடித்தனர்இது நடைமுறையில் துல்லியமான நிலப்பிரபுத்துவக் கொள்கையாகும்அரசன் ஆர்வமாக இருந்தால்நடவடிக்கைகள் தொடரும்.அவருக்கு ஆர்வம் இல்லை என்றாலோ அல்லது மற்ற விஷயங்களால் கவரப்பட்டாலோசெயல்பாடுகள் தேங்கிவிடும்.
1789 பிரெஞ்சு புரட்சியால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அரசாங்கம் தீர்மானகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 16ம் லூயி கைது செய்யப்பட்டு ஒருவருடம் கழித்து, (1792 ஆகஸ்ட்பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
 

லூவரில்
 Nike of Samothrace
1792 அக்டோபர் மாதம் புதிய உள்துறை அமைச்சர்ஓவியர் ஜாக்-லூயி டேவிட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார்அதில் “காலத்தாலும் மற்றும் அனைத்து மக்களுக்கும் பிரெஞ்சு அதன் புகழை நீட்டிக்க வேண்டும்தேசிய அருங்காட்சியகம் அதன் அனைத்து வகையான அழகிலும் அறிவினைத் தழுவியதாகவும் பிரபஞ்சத்தின் புகழையும் பெற்றதாகவும் இருக்கும்.சுதந்திரமான மக்களாக இருக்கத் தகுதி என்ற இந்த சிறந்த கருத்துக்களை தழுவி ... இந்த அருங்காட்சியகம்... பிரெஞ்சு குடியரசின் அதிக சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக மத்தியில் இருக்கும்” என்றார்.
பிரெஞ்சு புரட்சி தலைவர் ஹென்ரி கிரிகோரி,”முன்பு சலுகையுள்ள மக்களுக்காக மட்டுமே பார்வையிடும் வகையில் இருந்த அந்த பொக்கிஷங்கள்... இனிமேல் அனைவரையும் மகிழ்விக்கும்சிலைகள்,ஓவியங்கள் மற்றும் புத்தகங்கள் மக்களின் வியர்வையுடன் தொடர்புடையவைமக்களின் சொத்து மக்களுக்கே திருப்பியளிக்கப்படும்என்று வலியுறுத்தினார்.
லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் தலைமைதாங்கப்பட்போல்ஷ்விக் கட்சியின் 1917 அக்டோபர் மாத ரஷ்யப் புரட்சிஇந்த நிகழ்ச்சிப்போக்கை உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச்சென்றதுபுதிய புரட்சிகர அரசாங்கம்புரட்சியின் ஆரம்பகால இடதுசாரிகள் மற்றும் புதுமைவிரும்பும் கலைஞர்களின் உதவியுடன்மிகத் தீர்மானமான மற்றும் ஜனநாயக-புரட்சிகர நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 1930க்கு பின்னர் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஸ்ராலினால் ஒரு மோசமானமுறையில் நிறுத்தப்பட்டன.
1933 இல் ஸ்வெட்லானா டிஸாபரோவா (Svetlana Dzhafarova) தனது கட்டுரையான “The Creation of the Museum of Painterly Culture” இல் முதல் தொழிலாளர் அரசால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகளை எழுதினார்: “மாஸ்கோவின் தொலைதூர மாவட்டங்களில், 14 பாட்டாளி வர்க்க அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுஅவர்களது தற்காலிக கண்காட்சியின் பன்முகப்பட்ட உள்ளடக்கங்களால் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டன...
இதுபோன்ற சிறிய மாவட்ட அருங்காட்சியகங்கள்ஆயிரக்கணக்கான படைப்புகளுடன் பெரிய அருங்காட்சியகங்களுக்கு” மாறாக இருந்ததுடன் அருகாமையிலிருக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்காகவே கூடுதல் பயண முயற்சிகளை செலவழிக்க வேண்டிய அவசியமில்லாத வகையில்முதல் முறையாக கலாச்சாரத்தின் பாதுகாப்பகத்திற்காக அழகான மற்றும் வெளிப்படுத்தப்பட வேண்டியவற்றை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு தொழிலாளியினதும் உடனடிச் சொத்தாக அவை அமைக்கப்பட்டன.
கலை பொக்கிஷங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் செய்ய வேண்டுமென்ற கருத்துஅவர்களது அறிவார்ந்த மதிப்புகளிலுள்ள நம்பிக்கையுடன் இணைந்துஅனைத்து அருங்காட்சியக படைப்புகளுக்குமான அடித்தளத்தை உருவாக்கியது.
சோவியத் அரசின் முதல் ஐந்தாண்டுகளில் மாஸ்கோவில் பெருகி வரும் புதிய அருங்காட்சியகங்களுக்கு மத்தியில், Painterly Culture (1919-1929) மிக சிறப்பு வாய்ந்ததுஉலகின் எந்தப் பகுதியிலும் அதற்கு முன்மாதிரி இல்லை.அனைத்திற்கும் மேலாக இந்த அருங்காட்சியகம் அபூர்வமானதுஏனென்றால் அது நேரடியாக கலைஞர்களாலேயே அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது...பெற்றுக்கொள்ளல்பதிவு மற்றும் சேமிப்பு மற்றும் மாகாணங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்தையும் மாஸ்கோவில் மைய இடத்தில் திரட்டுவது போன்ற பணிகளுக்கு பொறுப்பாளர்கள் கலைஞர்களே என்பதுடன் மேலும் பிரதிநிதிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்தது மற்றும் சமகால கலையில் இருக்கும் சிக்கல்கள் குறித்த சுற்றுப் பயணங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தியதும்ஒரு நூலகத்தை உருவாக்கியதும் கலைஞர்களே”, என்று வரலாற்றில் கலைஞர்களால் நடத்தப்பட்ட முதல் கலை அருங்காட்சியகம் அமைப்பு விழாவில் டிஸாபரோவா தெரிவித்தார்.
ஸ்ராலினிச ஆட்சியால் 1929ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது.
சுருக்கமாககலை (மற்றும் விஞ்ஞானஅருங்காட்சியகங்களின் திறப்பு மற்றும் அணுகல் என்பதுமக்களின் கலாச்சார ரசனையை உயர்த்துவதற்கான அதன் முயற்சிகளுடன்மனித முன்னேற்றத்தில் ஆர்வம் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஜனநாயக மற்றும் புரட்சிகர சமூக இயக்கங்களுடன் அல்லது அதன் விளைவுகளுடன் தொடர்புடையதாக இருந்திருக்கிறதுதனிநபருடன் மற்றும் நிறுவனங்களுடன் வெளிப்படையாக வித்தியாசமான அனுபவங்களையும்பிரதான கலைக் கண்காட்சி அல்லது அருங்காட்சியை பார்வையிட்ட தன் தாக்கங்களையும் விவரிப்பது இங்கு சாத்தியமல்ல.
இவை பிரதான கலைஞரை சந்தித்த பின்னர் அல்லது கண்காட்சியை பார்த்தபின்நான் பெற்ற எண்ணங்களும் உணர்வுகளும் ஆகும்.
மனித இனத்தால்அதன் சிறப்பான வகையில்உணரமுடிகின்ற உத்வேகமான உணர்வு என்னவெனில் உண்மையில் மனிதஇனம் எந்த தடையையும் புத்திசாதுர்யம்ஆர்வம் மற்றும் அழகுணர்ச்சி ஆகியவை மூலமாக கடக்க முடிகின்ற உணர்வுஅதனால் மனித நேயத்திலும் அதன் சாத்தியக்கூறுகளிலும் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைமுக்கிய வேலையை தானாகவே செய்வதற்கான ஆசைமற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வேலைமக்களுடனான உறவு உள்ளிட்ட தினசரி வாழ்க்கையின் மிகஅதிகமான இரண்டாம் தரமான மற்றும் அழகற்ற தன்மையுடனான அதிருப்தியும் போன்றவையாகும்.
நாம் உலகை அறியும் வழிகளுள் கலையும் ஒன்றுஅது மனிதனை அதிக நெகிழ்வுடையவனாகவும்உணர்வுள்ளவனாகவும்பரிவுணர்வுள்ளவனாகவும் விழிப்புள்ளவனாகவும் ஆக்குகிறது.
கலையின் எதிரிமக்களின் எதிரியும்தொழிலாள வர்க்கத்தின் எதிரியும் ஆவான்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுநான் ஏற்கெனவே கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன்தனது சொந்த நலத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றமக்களை வெறுக்கின்ற மற்றும் அவர்களைக் கண்டு அஞ்சுகின்றஅமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு-எதிரானநெருக்கடிகள்-நிறைந்தபிரபுத்துவ ஆளும் மேல்தட்டு அதன் பரந்த கலை செழுமையுடன்,பொதுமக்கள் பார்வையிடக்கூடிய வகையிலும் அணுகும் வகையிலும் டெட்ராய்ட் கலை நிறுவனத்தை தொடர்ந்து நடத்தும் ஒரு நிலையை கற்பனைசெய்து பார்க்க முடியுமா?
இந்த நாட்டின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில்தொழிலாள வர்க்க ஜனத்தொகை பிரயோசனமற்றதுதொழிலாளர்களிடம் சொந்தமான மதிப்பு ஏதாவது இருக்கிறதென்றால்அது பணக்காரர்களின் பைகளில் அல்லாதுஅது அதற்குரிய இடத்தில் இருக்க வேண்டும், DIA -இன் கலை உள்ளிட்ட எதுவும்.அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு கலைப்படைப்புகளை அனுபவிப்பதற்கான சாதாரண மக்களின் தகமைபிரபுத்துவ கொள்கைக்கு எரிச்சலூட்டும் ஒன்றுநாம் விவாதிப்பது போன்றுகலை மீது ஆள்பவர்கள் தங்களது கைகளை வைக்கும் வழிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் இங்கு தற்போதுள்ள நிலைமையை தக்கவைத்துக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லைதற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியமற்றதுஏனைய கலாச்சார நிறுவனங்களோடு DIA இற்கும் முறையாக நிதியளிக்க வேண்டும்மேலும் உண்மையாக உருவாக்கப்பட்ட அதன் படைப்புகள் கலைக்கல்வி மூலமாக ஒவ்வொரு மட்டத்திலும் மக்களுக்கு அணுகும்படியாக இருக்க வேண்டும்கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு நிதியளிக்கப்பட வேண்டும்.
நமது பார்வையில்கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகல் ஒரு சமூக உரிமைஅதற்காக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும். 2010ஆகஸ்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தில், “கலாச்சாரத்திற்கான உரிமை” என்ற தலைப்பின் கீழ் நாம் பின்வருமாறு எழுதினோம்.
கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகல் என்பது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தில் அடிப்படை விஷயம்ஆயினும்மற்ற அனைத்தையும் போன்றேஇது எண்ணற்ற தாக்குதலுக்கு உள்ளாகிறதுஅமெரிக்க கலாச்சாரமான – திரைப்படம்தொலைக்காட்சிஇசை ஆகியவை அதன் கண்டுபிடிப்பு மற்றும் சக்திவாய்ந்தஜனநாயகவாத மற்றும் மனிதநேயமிக்க உத்வேகத்தால் ஒருகட்டத்தில் ஈர்ப்பு துருவமாக இருந்ததுஇலாப நோக்கத்திற்காக கலாச்சாரத்தை கீழ்ப்படிய செய்வது என்பது மோசமான சீரழிவுக்கே வழிவகுக்கும்.
கலைக்கான நிதி ஒதுக்குவதை குறைப்பதுகலைத்துவ வெளிப்பாடுகள் மீதான ஒரு வலதுசாரி கருத்தியல் தாக்குதல் மற்றும் அமெரிக்க சமுதாயத்தின் பொதுவான கொடூரமயமாக்கல் ஆகியவற்றால் கலாச்சாரம் பாதிக்கப்பட்டிருக்கிறதுஅருங்காட்சியகங்கள்இசைக்குழுக்கள்அரங்கங்கள் மற்றும் பொது தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றுக்கான அரசு மானியம் குறைக்கப்பட்டுள்ளதுபெரும்பாலான அரசுப் பள்ளிகளிலிருந்து கலை மற்றும் இசைக் கல்வி தீவிரமாக தடை செய்யப்பட்டுள்ளது அல்லது தீவிரமாக வெட்டப்பட்டுள்ளதுநூலக நேரமும் சேவையும் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனமேலும் கல்வி நிதி வெட்டுக்கள் பள்ளி நூலக மூடலுக்கு காரணமாயினபெரும் ஸ்தாபனங்களுக்கு சொந்தமான ஊடகம் அரசாங்கம் மற்றும் செல்வந்தர்களின் முகவர் போன்று செயல்படுவதுடன் பொதுமக்களின் கருத்துக்களை மாசுபடுத்துவதுடன் பொய்களை பரப்புகிறது.இதுபோன்ற கூலிப்படை மற்றும் பிலிஸ்தீனிய அணுகுமுறையால் சமுதாயத்தின் அறிவார்ந்த மற்றும் தார்மீக கட்டமைப்பின் பாதிப்பு அளவிட சாத்தியமில்லாதது.
கலை மற்றும் கலாச்சாரம் மீது அனைத்து உழைக்கும் மக்களும் முழுமையான அணுகலை கொள்வதற்குபெரும் பொது நிதி தேவைப்படுகிறது மேலும் இசைநடனம்நாடகம் மற்றும் கலைக்கான,பெயரளவுக்கான கட்டணத்துடனோ அல்லது இலவசமாகவோ புதிய பள்ளிகள் மற்றும் மையங்களை உருவாக்குவதும் அவசியம்கலைக்கான ஒதுக்கீடுகள் மீதான மானியங்கள் குறித்த முடிவுகள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டுகலைஞர்கள்,இசைக்கலைஞர்கள் மற்றும் பிற கலாச்சார பணியாளர்களின் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.”
கலை மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்புமற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கான சாதாரண மக்களின் உரிமை இன்று அரசியல் ரீதியான ஒரு புரட்சிகரக் கேள்வியாக இருக்கிறது.
ஒரு புதியபரந்த சோசலிச இயக்கம் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆட்சிக்கு வருவது ஆகியவை மூலம் மட்டுமே இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தப்பட முடியும்செல்வத்தை தீவிரமாக மறுவிநியோகம் செய்து,பெரும் நிறுவனங்களின் இரும்புப்பிடியை உடைத்துபெரும் வியாபார மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுப்பட்டினை எடுத்துக் கொண்டு,அவைகளை ஜனநாயகக் கட்டுப்பட்டின் கீழ் இருத்திகலாச்சாரத்தை மக்களின் கட்டுப்பாட்டில் வைக்கும்தற்போது ஒரு சதவீத மேல் தட்டினரால் உரிமை கொண்டாடப்படுகின்ற சமுதாயத்தின் பெரும் செல்வமான,யுத்தத்துக்கு போகும் டிரில்லியன் கணக்கான பணம் பெரும்பான்மையினரது தேவை மற்றும் நலன்களை நோக்கி செல்லும்டெட்ராய்ட்டின் அவசரகால மேலாளருக்கு எதிராகவங்கியாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் திரளை அணி திரட்டுவதற்கும்சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்வதற்கும் எங்களது பிரச்சரத்தில் கலந்து கொள்ளுமாறும் நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
DIA ஐ பாதுகாப்பதற்கான பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவலுக்குdefendthedia.org. ஐ பார்வையிடவும்.
By David Walsh
17 September 2013