Thursday, 17 April 2014

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் "மதசார்பற்ற," “மக்கள்-சார்பு" மூன்றாம் முன்னணி என்ற மோசடியை ஊக்குவிக்கின்றனர்

இந்தியாவின் ஒன்பது கட்ட பொது தேர்தலின் வாக்கெடுப்பு தொடங்க இருக்கின்ற நிலையில்இந்தியாவின் ஸ்ராலினிச நாடாளுமன்ற இரட்டை கட்சிகளான சிபிஎம் [இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் சிபிஐ [இந்திய கம்யூனிஸ்ட் கட்சி], பல்வேறு வலதுசாரி பிராந்திய மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகள் உள்ளடங்கிய ஒரு மூன்றாம் முன்னணியை உருவாக்க அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி உள்ளன.
கடந்த வாரம் சிபிஎம் அரசியற்குழு அங்கத்தவர் சீதாராம் யெச்சூரி, "காங்கிரஸ்-அல்லாதபிஜேபி-அல்லாத யாருடனும் நாங்கள் இணையத் தயாராக உள்ளோம்என்று அறிவித்தார்இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியுடன் (பிஜேபிமுன்னர் கூட்டணி வைத்திருந்த அஇஅதிமுக,ஒருங்கிணைந்த ஜனதா தளம்பிஜூ ஜனதா தளம் (BJP) ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களையும் தான் அப்போது யெச்சூரி ஒரு முக்கிய கூட்டாளிகளாக அடையாளம் கண்டார்இப்போது அவை வலதுசாரி மாநில அரசாங்கங்களுக்கு தலைமை வகித்து வருகின்றன.
ஸ்ராலினிஸ்டுகளின் வருங்கால கூட்டணி பங்காளிகளாக எதிர்பார்க்கப்படுபவர்கள் பெரும்பாலும் அவர்களின் நிலையற்ற நிலைப்பாட்டினால் ஏளனமாக புறக்கணிக்கப்பட்டு நிற்கின்றனர்அவர்கள்,இந்தியாவின் தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA)அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க ஒரு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உடனோ அல்லது/மற்றும் வரவிருக்கும் தேர்தலில் முன்னணியில் உள்ள பிஜேபி உடனோதேர்தலுக்குப் பின்னர் பேரம்பேசுவதற்காக அவர்கள் தமது நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறிருந்த போதினும்தேர்தல் அட்டவணையின்படி மே மாத மத்தியில் வரவிருக்கின்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மூன்றாம் முன்னணி அமையுமென்றும்அது காங்கிரஸ் மற்றும் பிஜேபி-தலைமையிலான தேர்தல் கூட்டணிக்குப் போட்டியாக ஒரு "மதசார்பற்ற", “ஜனநாயக," “மக்கள்நலமாற்று அரசாங்கத்தை அமைக்குமென சிபிஎம் மற்றும் சிபிஐ வலியுறுத்தி வருகின்றன.
இதுவொரு வெட்கக்கேடான மோசடியாகும்ஸ்ராலினிசஸ்டுகளின் கூட்டாளிகளாக ஆக இருப்பவர்கள்பிற்போக்குதனமான இனவாத-மொழிவாதவகுப்புவாத மற்றும் ஜாதிய முறையீடுகள் செய்பவர்கள்,உண்மையில் அவர்கள் அவற்றையே அடித்தளமாக கொண்டிருக்கின்றனர்.நாளொன்றுக்கு டாலருக்கும் குறைந்த வருவாயில் உயிர் வாழ போராடும் மொத்த மக்கள்தொகையின் மூன்று கால் பங்கு மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் சமூகரீதியில் மேலதிக வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையைக் கிளறி விட்டிருக்கிற "சந்தை-சார்பு", "முதலீடு-சார்புகொள்கைகளை அந்த கட்சிகள் அனைத்தும் அவர்களோடு ஸ்ராலினிஸ்டுகளையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் — நடைமுறைப்படுத்தி உள்ளன.
சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டும் "நிலப்பிரபுத்துவ-ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனத்தைஎதிர்க்கிறோம் என்றும்மிக சமீபத்தில் வகுப்புவாதBJPஐ எதிர்க்கிறோம் என்ற பெயரிலும்தொழிலாளர் வர்க்கத்தை திட்டமிட்டு காங்கிரஸிற்கோ அல்லது ஏனைய முதலாளித்துவ கட்சிகளுக்கோ அடிபணிய செய்வதில்பல தசாப்தங்களாக,முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய தூண்களாக சேவை செய்துள்ளன.
இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிஉலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவுகூலி உற்பத்தியாளராக இந்தியாவை மாற்றும் அதன் உந்துதலை முன்னெடுத்துள்ளதோடுஅதை ஸ்ராலினிஸ்டுகளின் ஒத்துழைப்போடு செய்தும் உள்ளதுஅரசாங்கத்தின் வழிநடத்தலில் இருந்து திசைமாற்றி தனியார்மயமாக்கல்,கட்டுப்பாடுகளை தளர்த்தல்சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி செல்லவும் மற்றும் அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்குள் இந்தியாவை முழுமையாக ஒருங்கிணைக்க இந்திய முதலாளித்துவத்தின் மைய நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்திய நரசிம்ம ராவ்வின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு, 1990களின் தொடக்கத்தில் சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி முட்டு கொடுத்தன.
2004 தேர்தல்களுக்குப் பின்னர்இதே சிபிஎம் தான் காங்கிரஸ் தலைமையிலான UPAக்குள் பல்வேறு பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்தது. UPAஇன் பகட்டான "குறைந்தபட்ச பொதுத்திட்டம்," (Common Minimum Programme) என்பதை எழுதியதும் அதில் உள்ளடங்கும்.அத்திட்டம் இந்தியாவின் "தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் தேவைகளுக்கேற்ப நவ-தாராளவாத மறுசீரமைப்பு செய்ய முடியுமென்று,அதாவது "மனிதாபிமானத்துடனான சீர்திருத்தம்செய்ய முடியுமென,பொய்யுரைத்ததுஅதற்கடுத்த ஐந்து ஆண்டுகளுக்குஸ்ராலினிஸ்டுகள் அவர்களின் நாடாளுமன்ற பெரும்பான்மையோடு UPAக்கு ஆதரவளித்ததோடுஅந்த கூட்டிணி அரசாங்கம் ஒரு பெரு வியாபாரம் சார்ந்த சமூக-பொருளாதார திட்டத்தை மற்றும் அதற்கு முந்தைய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்திலிருந்து சற்றே வேறுபட்ட ஒரு அமெரிக்க சார்பிலான வெளியுறவு கொள்கையை நடைமுறைப்படுத்தி வந்த போதும் கூடஅது பதவியில் நிலைத்திருக்க வாக்களித்தது.
இறுதியாகஜூலை 2008இல்இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக மற்றும் அதன்மூலமாக இந்திய முதலாளித்துவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான ஒரு "உலகளாவிய மூலோபாய கூட்டணியை"ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் ஸ்ராலினிஸ்டுகளை அரசாங்கத்திலிருந்து முடிவாக வெளியேற்ற முடிவு செய்தது.
ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் முன்னணி உபாயமானதுஉலக பொருளாதார நெருக்கடி இந்திய முதலாளித்துவத்தின் "எழுச்சியை"காலை வாரி விட்டிருக்கும் நிலைமைகளின் கீழ் மற்றும் வர்க்க போராட்டம் வேகமாக தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ்,அரசியல்ரீதியாக தொழிலாளர் வர்க்கத்தை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டதாகும்.
பொதுவாக தசாப்த-கால பழமையான காங்கிரஸ் தலைமையிலான UPAஅரசாங்கம்விலை உயர்வுகள்நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொதுச் சொத்துக்களை பெரு வியாபாரங்களுக்கு அன்பளிப்பாக வாரி கொடுத்தமை ஆகியவற்றோடு அடையாளம் காணப்படுகிறது.
இதற்கிடையில்பெருநிறுவன இந்தியாவோ குஜராத் முதல் மந்திரியும் சுய-பாணியிலான "இந்துத்துவ பலமானமனிதன்நரேந்திர மோடி,பிற்போக்குத்தனமான பெரும் "சந்தை-சார்முறைமைகளை மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்போடுஅவர் தலைமையிலான BJPக்கு பின்னால் பெரிதும் தொங்கி கொண்டிருக்கிறது.அந்த முறைமைகளில்எண்ணெய் மற்றும் ஏனைய விலை மானியங்களை நீக்குதல்வேலைநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கான கட்டுப்பாடுகளைக் குறைத்தல்பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தேசியளவிலான வரிவிதிப்புஒட்டுமொத்த விற்பனையைத் தனியார்மயமாக்கல் மற்றும் அன்னிய முதலீட்டின் மீது எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் நீக்குதல் ஆகியவையும் உள்ளடங்கும்.
முதலாளித்துவம் உத்வேகங்களோடு மோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளதோடுபிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு அது திரும்பி வருகின்ற நிலைமைகளின் கீழ்இந்திய முதலாளித்துவத்தின் சிறியபிராந்திய கட்சிகளை உள்ளடக்கிய "பிஜேபி-அல்லாத," “காங்கிரஸ்-அல்லாதஒரு நாடாளுமன்ற அணி என்ற அவர்களின் பிரச்சாரத்தோடுஸ்ராலினிஸ்டுகள் அரசியல்ரீதியாக தொழிலாளர் வர்க்கத்தை மூச்சடைக்க வைக்க முனைந்து வருகின்றன.ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டாளிகளாக ஆக இருப்பவர்கள் அந்த இரண்டு"தேசிய கட்சிகளைப்போன்றே பெரு வியாபாரத்தின் சேவர்களாக தங்களை அர்பணித்துள்ளவை ஆகும் அல்லது அதனதன் பிராந்தியரீதியிலான முதலாளித்துவ கன்னைகளின் பொருளாதார நலன்களைக் கணக்கிட்டு அவை காங்கிரஸ் உடனோ அல்லது பிஜேபி உடனோ ஓர் உடனடி கூட்டுக்கு செல்லும்.
இடது முன்னணியில் உள்ளடங்கியுள்ள நான்கு கட்சிகள் மற்றும் ஏழு பிராந்திய கட்சிகள் உட்பட பதினொரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து, "காங்கிரஸ் மற்றும் BJPக்கு ஒரு மாற்றைஉருவாக்க உடன்பட்டுள்ளதாக,"பெப்ரவரி 25இல்சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார்.இந்த மாற்றீடு ஒரு "மக்களுக்கான முன்னேற்ற பாதைக்கு"பொறுப்பெடுத்துள்ளதாக காரத் மேற்கொண்டு அறிவித்தார்ஆனால் அந்த பதினொரு கட்சிகளால் கையெழுத்திடப்பட்ட அந்த சுருக்கமான அறிக்கையில், “மிக சுலபமாக காங்கிரஸ் அல்லது பிஜேபி தேர்தல் அறிக்கையிலேயே காணப்படும் சமத்துவமின்மைசமூக நீதி,விவசாயிகளின் நலன்கள்சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகள்குறித்த கவனம்செலுத்துவதாக ஒரு வாக்குறுதிக்கு அப்பாற்பட்டு அந்த நிகழ்ச்சிநிரலில் உண்மையான நோக்கம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட இல்லை.
பிரகாஷ் அறிவித்ததற்கு சில மணி நேரங்களுக்குள்அந்த "மாற்றீடு"சிதறத் தொடங்கியதுமுதலில்அசாம் கன பரிஷத் தலைவர் ஒரு பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தில் சேரும் சாத்தியக்கூறு தவிர்க்கப்படவில்லை என தெரிவித்தார்பின்னர் கையெழுத்திட்டிருந்த மற்றொரு கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP), பிஜேபி அதிகாரத்திற்கு வராமல் தடுக்க மற்றொரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை அது ஆதரிக்குமென குறிப்பிட்டு காட்டியதுஇந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சி,உண்மையில்கடந்த ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் தக்க வைக்க ஒத்துழைத்துள்ளது ஜூலை 2008இல் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை மீதான வாக்கெடுப்பில் அது மிக பிரபலமாக இருந்தது.
ஒடிசா தலைமை மந்திரியும், BJD தலைவருமான நவீன் பட்நாயக்கின் கட்சி சிபிஎம்-இடது முன்னணியின் "மாற்றீடுக்குஒரு ஆதரவாளராக அறிவித்திருந்த போதினும்அவர் பெப்ரவரி 25 கூட்டத்தைத் தவிர்த்து கொண்டார்அதற்கு பின்னர் வெகு விரைவிலேயேஸ்ராலினிஸ்டுகளை பீதியடைய செய்யும் விதத்தில்பட்நாயக் அவரது கட்சி ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ள தேசிய மற்றும் ஒடிசா மாநில தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என அறிவித்தார்பட்நாயக்கின் BJD, 2009இல்பிஜேபி உடன் ஒரு தேர்தல் இட ஒதுக்கீடு சம்பந்தமான மோதலில் பதினொரு ஆண்டுகால கூட்டணியை உடைத்துக் கொண்ட பின்னர்ஏறத்தாழ உடனடியாகசிபிஎம் மற்றும் சிபிஐ உடன் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியது.
தமிழ்நாடு முதல் மந்திரியும்அஇஅதிமுக தலைவியுமான ஜெயலலிதா,அவரது கட்சி சிபிஐ மற்றும் சிபிஎம் உடன் தேர்தல் இட ஒதுக்கீடு செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தமை ஸ்ராலினிஸ்டுகளுக்கு இன்னும் பெரிய அடியாக இருந்ததுஸ்ராலினிஸ்டுகள் ஜெயலலிதாவை மூன்றாம் அணிக்கான பிரதம மந்திரி வேட்பாளராக்கும் சாத்தியக்கூறை ஊக்குவித்து வந்திருந்தனர்ஒரு இழிபெயர் பெற்ற வலதுசாரியான ஜெயலலிதாமாநில தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க2003இல் பாரிய சிறையடைப்பு மற்றும் வேலை நீக்கங்களைப் பயன்படுத்தினார்அத்தோடு அவர் தொடர்ந்து பிஜேபி மற்றும் அதன் பங்காளிகளின் இந்து மேலாதிக்கவாத பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்துள்ளதோடு மோடியின் தனிப்பட்ட நண்பர் என்றும் குறிப்பிடப்படுகிறார்ஜெயலலிதா மற்றும் அவரது அஇஅதிமுக உடன் விடயங்களைக் கோர்க்க முடியுமென்ற தெளிவான நம்பிக்கையில் சிபிஎம்அவர் பிஜேபி உடனோ அல்லது அதன் தேசிய ஜனநாயக கூட்டணி உடனோ தேர்தலுக்குப் பிந்தைய ஒரு உடன்பாட்டை எட்ட தயாரிப்பு செய்து வருகிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரிய ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் சுமார் இரண்டு வாரங்கள் காத்திருந்தது.
அதன் மூன்றாம் முன்னணி சிதறிக் கொண்டிருக்கின்ற நிலையிலும்,ஸ்ராலினிஸ்டுகள் இந்த வெற்று கூட்டை இறுக பிடித்துக் கொண்டுஅது தேர்தலுக்குப் பின்னர் வடிவமெடுக்கும் என்று தற்போது வலியுறுத்திக் கொண்டுஅஇஅதிமுக, BJD, மற்றும் இதர கட்சிகள் "முற்போக்காக"உள்ளடக்கங்களை கொண்டிருப்பதாக தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறதுஅதேவேளையில் அந்த கட்சிகளோ பிஜேபி அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நுழைய வெளிப்படையாக தயாரிப்பு செய்து வருகின்றன.
சிபிஎம் தலைவர் காரத் சென்ற வாரயிறுதியில் Hindu நாளிதழுக்கு கூறுகையில், “பெப்ரவரி 25இல் நாங்கள் என்ன அறிவித்தோம் என்றால்,காங்கிரஸ் மற்றும் BJPக்கு எதிராக ஒன்றிணைவதற்கான எங்களின் ஒருமித்த விருப்பத்தை வெளியிட்டோம்தேர்தல்களுக்குப் பின்னர்அந்த மாற்றீட்டிற்கு நாங்கள் வடிவம் அளிப்போம்," என்றார்.
சிபிஎம் அதன் கூட்டணி பங்காளிகளாக ஆகக்கூடியவர்களை ஒருங்கிணைக்க இன்னும் மேலதிகமாக வலதிற்கு நகர தயாராக இருப்பதை அடிக்கோடிடும் விதத்தில்காரத் Hinduக்கு கூறுகையில்ஒரு மூன்றாம் அணி அரசாங்கத்திற்குள் நுழைய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தயாராக இருப்பதாக தெரிவித்தார். 1996இல்,பல்வேறு பிராந்திய கட்சிகளை அடிப்படையாக கொண்டு சிபிஎம் ஒரு"ஐக்கிய முன்னணிஅரசாங்கம் ஆட்சி அமைக்க சேவையாற்றியது,ஆனால் மேற்கு வங்காள சிபிஎம் முதல் மந்திரி ஜோதி பாசுவிற்கு பிரதம மந்திரி பதவி வழங்கப்படும் என்ற போதும் கூட அந்த அரசாங்கத்திற்குள் நுழைய அது மறுத்துவிட்டதுவெளியிலிருந்து ஆதரவளித்த CPMஇன் ஆதரவோடுசில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் இந்திய முதலாளிகளின் நவ-தாராளவாத சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை பின்தொடர்ந்ததோடுஅதற்கடுத்த தேர்தல்களில் பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பாதை அமைத்து கொடுத்தது.
அவர்களின் மூன்றாம் அணி மோசடிக்கு அழுத்தம் அளித்து வருகின்றன அதேவேளையில்ஸ்ராலினிஸ்டுகளும் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியில் உள்ள அவர்களின் துணைக்கூட்டாளிகளும் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு மீண்டுமொருமுறை முட்டு கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதற்கு சமிக்ஞை கொடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை இடது முன்னணி ஆதரிக்கக்கூடும் என்பதை விலக்கி வைக்க முடியாதுஆனால் "2004இல் ஏற்பட்டது போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டால் மட்டுமே அவ்வாறு நடக்கும் ... அப்போது வகுப்புவாத BJPஐ தடுப்பதற்காக காங்கிரஸ் தரப்பிற்கு செல்ல வேண்டி இருந்தது," என்று கடந்த மாதம் சிபிஎம் அரசியல்குழு அங்கத்தவரும்முன்னாள் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்தார்.
விரைவிலேயே ஒரு தனி மாநிலமாக ஆக உள்ள ஆந்திர பிரதேசத்தின் ஒரு பகுதியான தெலுங்கானாவின் சட்டமன்ற மற்றும் மக்களவை (தேசிய நாடாளுமன்றதேர்தல்களில் சிபிஐஅதன் பங்கிற்குஇங்கு இது"தனிச்சிறப்பான ஒரு விடயம்என்று கூறிகாங்கிரஸூடன் ஒரு தேர்தல் கூட்டணி உருவாக்கி வைத்துள்ளது.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP) கேரள காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் சேர்வதற்காககடந்த மாதம் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிலிருந்து வெளியேறியதுதேசிய தேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்தைத் தக்க வைக்கும் காங்கிரஸின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் பட்சத்திலேயே கேரள மாநில அரசாங்கத்திற்குள் RSPஐ சேர்த்துக் கொள்வதை காங்கிரஸ் நிபந்தனையாக வைத்துள்ளதுஇவ்வாறிருக்கின்ற போதினும், RSP தேசியளவில் ஸ்ராலினிஸ்டுகளின் இடது முன்னணியில்அத்தோடு அவர்களின் பகட்டான காங்கிரஸ்-விரோத "ஜனநாயக மற்றும் மதசார்பற்ற மாற்றீடு"என்பதில் ஓர் அங்கத்துவ கட்சியாக தங்கி உள்ளது.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் இந்து-வகுப்புவாத அச்சுறுத்தலைத் தூண்டுகின்றனர்

By Deepal Jayasekera and Keith Jones 
5 April 2014

No comments:

Post a Comment